Friday, February 10, 2012

முல்லைப் பெரியாறு அணை பற்றிய அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் (3)

  • கேள்வி - 6: Intelligence Bureau of the Ministry of Home Affairs, Govt.of India – Report of the Industrial Security Inspection Team on Security arrangements at Mullai Periyar Dam & Periyar Hydro Electric Project (Report dt. Nov.9 & 10, 2006) -இல் முல்லை பெரியாறு அணை மற்றும் பெரியாறு மின் நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் 1979ஆம் ஆண்டில் 152 அடியிலிருந்து 136 அடி யாகக் குறைத்த பிறகு இந்த 32 ஆண்டு களில் தண்ணீரால் மூழ்காத 3914 ஏக்கர் நிலப்பகுதியில் உள்ள ஏராளமான  ஆக்கிர மிப்புகளை (கேரளாவினர்) அகற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிக்கை மீது தமிழ்நாடு அரசோ அல்லது மத்திய அரசின் உள்துறையோ என்ன நடவடிக்கைகளை எடுத்தன? அல் லது இப்போதாவது எடுத்துள்ளனவா?
    1) இப்படி ஒரு ரகசிய அறிக்கை தமிழ்நாட்டு அரசுக்கு வந்ததாக தகவல் எதுவும் 2006-லோ அதற்குப் பின்போ இதோடு தொடர்புடையவர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என்பது ஒரு வேதனை அளிக்கும் செய்தி. இத்தகைய நிலம் 8591 ஏக்கரும் தமிழ்நாட்டின் உரிமையில் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நம்மிடம் அனுமதி பெறாது(Under our leased possession  as per 1886 agreement lease deed)இக்கட்டுமானங் களை கேரள அரசு எப்படி அனு மதித்தது? அதை ஏன் நம் தமிழ்நாடு இன்று வரை எதிர்க்கவில்லை
    2) அதைப்போல் அதில் குறிப்பிட் டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு (தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரும்) ஏன் எடுக்கவில்லை என்பதும் புரியாத புதிர்கள்.
    3) மிக குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப் பட்ட பரிந்துரைகளுக்கும் உச்சநீதிமன்றத் தில் நடந்த மற்றும் தற்போது நடந்து வரும் வழக்கிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது கூட நம்முடைய அரசு அதிகாரிகளுக்குப் புரியவில்லை. இந்த ரகசிய அறிக்கையின் பரிந்துரைகளை, தமிழக அரசு (தமிழக உள்துறை) நேரடி யாகவே மத்திய அரசின் உள்துறையிடம் வேண்டுகோள் வைத்து வலியுறுத்திப் பெற்று இருக்க வேண்டும். தமிழக உள் துறை போல மத்திய உள்துறை அமைச் சரும் (அவர் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருந்தாலும்) ஏதும் நடக்காததைப் போல ஏதும் தெரியாது என்று சொல்லி பொறுப் பைத் தட்டிக் கழிப்பது ஓர் அரசு குற்றம்.
    4) இதில் மேலும் கொடுமை என்ன வென்றால், மேலே குறிப்பிட்ட 8591 ஏக்கரும் (தண்ணீரில் மூழ்காத 3914 ஏக்கரும் சேர்ந்து) பெரியாறு புலிகள் சரணாலயப் பாதுகாப்பின் கீழ் வருகிறது. (Periyar Tigers Reserve Forest) இந்த பகுதியில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் (கட்டுமானங்களைக் கட்டுவது மரங்களை வெட்டுவது உட்பட) அதற்கென தனியாக குறிப்பிட்டு மய்ய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் கண்டிப்பாக பெற வேண்டும். இப்படிப் பெற்றதாகவும் தகவல் இல்லை.
    5) உண்மையில் இந்திய மத்திய அரசில் இந்திய இறையாண்மை என்ற ஒன்று நடைமுறைபடுத்தப்படுகிறதா? (அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஊர்ச் சுற்றிப் பார்த்தால் போதும் என்று கருதுகிறார்களோ என்னவோ?)
    6) இதன் மூலம் கேரளாவிற்கு கடந்த 32 ஆண்டுகளில் ரூ.9000 கோடிக்கு மேலே சுற்றுலாவின் மூலம் வருமானம் வருகிறது. இந்தச் செய்தி தெரிந்தவுடனே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க Tansea ஒரு பொது நல வழக்கு ((Nov-30, 2011) தொடுத் துள்ளது. இதனுடைய தீர்வுக்காகக் காத்திருக்கிறோம். இதை ஊடகங்களின்) கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம்.
    7) இந்த வழக்கிலேயே முல்லை பெரியாறு அணைப்பகுதி மற்றும் பெரியாறு நீர் மின் நிலையம் இவற்றின் பாதுகாப் பிற்காக, இந்த ரகசிய அறிக்கையில் அறிவுறுத்தியபடி மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினையும் வேண்டியுள் ளோம். ((CISF  Central industrial Security Force).. இதற்கு மத்திய அரசின் உள்துறை அனுமதி அளித்து ஏற்பாடு செய்ய வேண்டும். இது ஒரு உடனடித் தேவை.
    கேள்வி - 7: மேலே குறிப்பிட்ட இரக சிய அறிக்கையில் கேரளா காவலர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர். எனவே, அவர்களை CRPF அல்லது CISF கொண்டு அப்புறப்படுத்தி - அணைக்கும் மற்றும் நீர்மின் நிலையத்திற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத் தல் என்னவாயிற்று? CRPF-க்கும் CISF -க்கும் உள்ள வேறுபாடு என்ன? நமக்கு ஏன் CISF மட்டுமே தேவை? இதற்கு மத்திய அரசு (உள்துறை அமைச்சர்) மறுப்பது ஏன்?
    மேற்படி ரகசிய அறிக்கையில் கீழ்க் கண்ட அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளன.
    1)     Illegal encroachment can come up in the area (From 136ft and above upto 155’ft) to be removed immediately.
    2)     The Kerala Police being non-reliable should be replaced by Central Industrial Security Force.
    3)     In the case of emergency / contingency, fire fighting personal and the fire fighting equipments are to be employed.
    4) Whereever the Security is broken they are to be strengthened by taking immediate arrangements இதற் காகத்தான் தமிழக அரசு அண்மை யில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞரும் உச்சநீதி மன்ற நீதிபதிகளும் CRPF--க்கும்(CISF)-க்கும் உள்ள துல்லியமான வேறு பாட்டை புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ? இதற்கு கேரள அரசி னுடைய ஒப்புதல் இருந்தால்தான் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை முல்லை பெரியாறு அணைப் பகுதியில் நிறுத்த முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது சரியன்று. இதற்கு மேல் முறையீடு செய்யப்பட வேண்டு மென்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
    As per Definition :
    The Central Reserve Police Force (CRPF) is the India’s Central Armed Police Forces. The CRPF”s primary role lies in assisting the States in police operations to maintain Law and order and contain insurgency and also in assisting to conduct the General Elections.
    The Central Industrial Security Force (CISF) is the largest industrial security force in the world directly under the Federal ministry of Home Affairs, providing security  cover to 300 industrial units and other establishments such as Atomic Power plants, Space Installations, Defence Production Units, Refineries Major Ports, Air Ports and Hydroelectric / Thermal Power Plants.
    CRPF என்பது மத்திய சிறப்பு காவல் படை, இது சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் கலவரங்களை அடக்கவும் பயன் படுத்தப்படக்கூடியது. இதற்கு அந்த மாநிலத்தின் வேண்டுகோளும் ஒப்புதலும் தேவை.
    ஆனால் CISF என்பது மத்திய தொழி லகப் பாதுகாப்பு படை இது மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதைச் சார்ந்த அரசு நிறுவனங்களுக்கு (Institution & their Installations) இவற்றினுடைய பாதுகாப் பிற்காக (உள்ளே நுழைய அனுமதி மற்றும் வெளியே வரும் போது சோதனை செய்தல்) தேவைப்படுவது. இதற்குரிய ஊதியம் மற்றும் செலவுகளை அந்த நிறுவனம் கொடுத்தால் மத்திய உள்துறை இந்த CISFவை கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இந்தCISF கீழ்க்கண்ட நிறு வனங்களில் முன்பே பாதுகாப்புகென உள்ளது. NLC, Kalpakkam, Sriharikota, BHEL  போன்றவை.
    கேள்வி - 8: முல்லை பெரியாரின் மேல்நிலை நீர்மட்டம் 1979ஆம் ஆண்டில் 152 லிருந்து 136 யாகக் குறைக்கப்பட்டது. இதனுடைய பெரும் தாக்கத்தை தமிழ்நாடு இழந்த இழப்புகள் பற்றிக் கடந்த 32 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கவலைப் படவே இல்லையே. இது ஏன்? தமிழ் நாட்டிற்கு இதனால் ஏற்பட்ட இழப்புகளின் அளவு என்ன? பட்டியலிடுங்கள்.
    1) 1979இல் கேரளா எழுப்பிய பீதிகளுக்கு அச்சத்திற்கு எந்தப் புள்ளி விவரங்களையோ / அல்லது ஏற்பட்ட ஆபத்து நிகழ்வுகளையோ பட்டியலிடவும் இல்லை. விரிவாகத் தெரிவிக்கவும் இல்லை.
    2) 25.11.1979 அன்று திருவனந்தபுரத் தில் நடந்த பேச்சுவாரத்தைகளின் போது - தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் சார்பாக மிக உயரந்த தலை சிறந்த முற்றிலும் நேர்மையான பொறியியல் வல்லுநரகள் தாம் கலந்து கொண்டனர். அவர்கள் யாருமே ஏன் இந்தத் தேவை யான அடிப்படைத் தகவல்களைக் கூடக் கேட்டு அவை சரிதானா என்று ஏன் சோதித்துப் பார்க்கவில்லை? எனவே பொறியியல் - தொழில்நுட்பம் தாண்டிய அரசியல் அழுத்தம் கண்டிப்பாக இருந் திருக்க வேண்டும் என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது.
    3) பொதுவாகவே தமிழ்நாடு அரசு - அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரி களுக்கு, தமிழ்நாட்டின் நலன் வளர்ச்சி யின் மீது உண்மையான அக்கறை இல்லை என்பதையே மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. (மாதந்தோறும் ஊதியமும், படிகளும் சலுகைகளும் வந்தாலே போதுமென்ற போக்குதான் இதற்கு முழு முதற்காரணம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?).
    4) இதனால் தமிழ்நாடு 1979-2011 வரை 32 ஆண்டுகளில் இழந்தவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
    முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தினை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்தமையால் தமிழகத் திற்கு ஏற்பட்ட இழப்புகள் (1979-2011).
    பாசன நீரின்றி தரிசாக மாறிய நிலப்பரப்பு - 38000 ஏக்கர்
    இருபோகமாக இருந்து ஒரு போக சாகுபடியானது - 26000 ஏக்கர்
    ஆழ்குழாய் பாசனத்திற்கு மாறிய பரப்பு - 53000 ஏக்கர்
    விவசாய உற்பத்தி இழப்பு - ஆண்டுக்கு - ரூ.55 கோடி
    மின்னுற்பத்தி இழப்பு - ஆண்டுக்கு - ரூ.75 கோடி
    இவையன்றி பயன்படுத்தாத நிலப் பரப்புக்கு கூடுதல் குத்தகைப் பணம் 32 Xரூ.2.58இலட்சம் (ரூ.82.56 லட்சம்).
    கேரள போலீசாருக்கு ஊதியம் - ரூ.32 ஓ ரூ.12 லட்சம்  X ரூ.384 லட்சம்.
    வழக்கறிஞர்கள் CTS அலுவலர் ஊதியம் மற்றும் படிகள் - ரூ.1193.85 இலட்சம் (2006 வரை)
    கேள்வி - 9: கேரளா புதிய அணை கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரப் போகிறதா?
    கேரளாவில் நேற்று - இன்று பதவியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் - கேரளாவில் உள்ள அரசியல்வாதி களும் - பத்திரிகைக்காரர்கள் - தொலைக்காட்சியினர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டே இப்படி ஓர் அப்பட்டமான பொய்யைச் சொல்லி வருகிறார்கள். மாண்புமிகு மன்மோகன்சிங் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் அவர்களிடமும் உறுதி கூறுகிறார்கள். அமைச்சரவையின் தீர்மானத்தை எழுதியும் கொடுத் துள்ளனர். இவற்றை தமிழ்நாடு அரசும் தமிழ் மக்களும் நம்பலாமா? கூடாது கூடாது ஏன்? கீழே படியுங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
    999 ஆண்டுகளுக்குரிய குத்தகை ஒப்பந்தம் சட்டபூர்வமானது (Legal binding with Legal force).
    27.2.2006இல் உச்சநீதிமன்றமே தம் தீர்ப்பில் மேற்படி ஒப்பந்தம் சரியானது செல்லுபடியாகும். எனவே நடை முறைப்படுத்தப்பட வேண்டும் (Maintainable) என்று உறுதியாகக் கூறிய பிறகும் கேரளா 5 ஆண்டுகளாக நடமுறைப்படுத்தவே இல்லை 142 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று சொல்லி Kerala Irrigation & Conservation Act - Amendment - 2006 என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து - உச்சநீதிமன்றத் தீரப்பை நிறைவேற்றாமல் தடைப்படுத்தி உள்ளது.
    பழைய அணைக்குதான் 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் செல்லுபடியாகும். புதிய அணைக்கு அல்ல. இந்த ஒப்பந் தத்தை முறியடிப்பதே அவர்களின் முக்கிய உள்நோக்கம். தமிழ்நாட்டிற்கு நெய்யாற்றங்கரை - வலது கால்வாயில் ஒப்பந்தப்படி தண்ணீர் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
    செப்டம்பர் 2011இல் கேரளா அரசு (பாசனத்துறை) உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதியரசர் Dr. AS. ஆனந்த் குழுவிடம் (அதிகாரமளிக்கப் பட்டது) Detail Project Report of New Dam at Mullai Periyar Volume I – Sept 2011  கொடுத்துள்ளனர்.
    அதனுள் பக்கம் 37... But as far as Periyar River is concerned, it is not an Interstate river but purely an intra state river. State of Tamil Nadu has absolutely no riparian right on the waters of this river since the entire catchment lies in the territory of the State of Kerala.
    பக்கம் 23... : Interstate Aspects of the Project :
    (c) Water Allocation for other states – Subject to availability.
    தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தருவதற்கு கேரளா தயாராக இல்லை என்பதை இந்த னுஞசு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உண்மை / எதார்த்தம் இப்படி இருக்கும் போது கேரள அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி நாம் மீண்டும் ஏமாறக் கூடாது.
    கேள்வி - 10: பேச்சுவார்த்தை - பேச்சு வார்த்தை மீண்டும் பேச்சு வார்த்தை - தொடரலாமா?
    கேரளா முதலமைச்சரும் மத்திய அரசும் - ஏன் தமிழ்நாட்டில் உள்ள சில இடதுசாரிக் கட்சிகளும், இரு மாநில முதல்வர்களும் அரசு அதிகாரிகளும் கூடி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லுகின்றனர். கேரள அமைச்சரவை முல்லை பெரி யாறு சிக்கலை - உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புக் கொள்ள லாமா? கூடாது கூடவே கூடாது ஏன்?
    உச்சநீதிமன்றத்தில் வருகின்ற தீர்ப்பு கேரளாவுக்குச் சாதகமாக இருக்காது என்பதாலேயே கேரளா அரசு இதில் குறியாக இருக்கிறது.
    இதுவரை கேரளாவும், தமிழகமும் 1979 முதல் 2011 வரை 50 தடவைகளுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி எந்த சுமூகமான தீர்வும் எட்டப்படவே இல்லை. எனவே காலதாமதத்தை மீண்டும் ஏற்படுத்தவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பினைத் தவிர்த்திடவும் கேரளா உள்நோக்கத்தோடு செய்திடும் மற்றொரு தந்திரம் இது.
    இந்தியத் தலைமை அமைச்சரும் நீர் வளத்துறை அமைச்சரும், இச்சிக்க லின் முழு ஆழத்தையும் புரிந்து கொள் ளாமலே - தவிர்த்திடும் - கீழே தள்ளி விடும் ஒரு வீணான முயற்சி (wasteful exercise).
    7.2.2006 அன்று வெளியிட்ட உச்சநீதி மன்றத் தீர்ப்பினை முதலில் கேரளாவும் - மத்திய அரசும் நடைமுறைப்படுத்தி விட்டுப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுக்கட்டும். அதன்பின் பார்க்கலாம்.
    முல்லை பெரியாறு அணையினைக் காப்பாற்றுவோம்
    சிக்கலுக்கு என்னதான் தீர்வு?
    தமிழக அரசு உடனே செய்ய வேண்டி யவை எவை?
    1. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு!
    எனப் பாடினார் நாமக்கல் கவிஞர்.
    எங்களின் 60 ஆண்டு அனுபவத்தில் கண்ட தமிழனின் தனிக் குணம் இதுதான்.
    ஒரு தமிழன் பாதிக்கப்படும் பொழுது அதைக்காணும் 10 தமிழர்களில் 8 பேர் கண்டும் காணாதது போல் ஒதுங்கி விடுவார்கள். பாக்கி இருவர் தங்களின் சுய லாபத்திற்காகவோ அல்லது அறியாமை யினாலோ அவன் பாதிக்கப்பட்டதை நியாயப்படுத்திப் பேசுவார்கள். வந்தவரை யெல்லாம் வாழவைத்து அவர்களது கால்பிடித்து மகிழ்வார்கள். ஆனால் சகோதரத் தமிழனைமாத்திரம் வாழவிட மாட்டார்கள். கர்நாடகாவில் திரு. தேவ கவுடா என்றொரு முதல்வர் இருந்தார். அவர் பதவிக் காலத்தில் காவிரி நீரில் தமிழர்க்கு ஒரு சொட்டு நீர் கூடத் தரமுடியாது என அடம் பிடித்தவர். அவரின் கட்சிக்கு தமிழகத்திலும் கிளை கள் உண்டு. அவர் தமிழகக் கோவில் களுக்கு சாமி கும்பிட வரும் பொழுது தோரணம் கட்டி கட் அவுட் வைத்து வரவேற்று மகிழ்கிறோம். மும்பை நகருக்கு பிழைக்கப்போன தமிழர்களை அடித்து விரட்டும் சிவசேனை என்றொரு கட்சி - அதற்கும் தமிழ்நாட்டில் கிளைகள் உண்டு உறுப்பினரும் உள்ளனர். இத்தகைய விருந்தோம்பி நயத்தக்க நாகரிகம் பேணும் குணத்தினால் தமிழர்கள் தம்முடைய உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கின்றனர். அத்தகைய சிக் கல்களில் ஒன்றுதான் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை முன்பிருந்த நிலைக்கு உயர்த்தல்.
    (தொடரும்)


    .
     

    இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
    இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...