Friday, February 10, 2012

மனித உயிர்கள் எதிலிருந்து தோன்றியது?

மனித உயிர்கள் எதிலிருந்து தோன்றியது?
மனிதக் குரங்கில் இருந்து மனித உயிர் தோன்றவில்லை. குரங்கிலிருந்தும் தோன்ற வில்லை என்பது மிகவும் நிச்சயமானது.
தற்போது உயிர்வாழும் மனித இனமும் (Homo sapiens),  மனிதக் குரங்கும் ஒரு பொதுவான மூதாதையரிலிருந்து தோன்றிய வர்கள். ஆனால், அந்த மூதாதை யார் என்பதுதான் இது வரைக்கும் கண்டுபிடிக்க முடியாமலிருக்கிறது. அய்ம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிலோசினி  (Pliocene) காலத்தில் அந்த மூதாதை வாழ்ந்திருக்கிறான். அணில் போன்ற நீண்ட மூக்கு கொண்ட மரத்தில் வாழும் விலங்கிலிருந்து தோற்றம் பெற்றதுதான் இந்த மூதாதை.  முதலில் நட்சத்திர மீன்  (star fish) என்ற உயிரினமாக உருவாகி அதன் பின்னர் முள்ளம்பன்றி போன்றிருக்கும் (hedgehogs) என்ற உயிரினமாக உருவானது இது.
மனிதர்களின் மரபணுக்களை, நமது நெருங்கிய உறவினரான மனிதக் குரங்கின் மரபணுக்களுடன் அண்மையில் ஒப்பிட்டுப்பார்த்தபோது,  நாம் முன்பு ஊகித்து இருந்த காலத்திற்கு வெகு காலம் கழித்தே நாம் பிரிந்திருக்கிறோம் என்பது தெரியவந்துள்ளது. 54 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இறுதியாக நாம் பிரிவதற்கு முன்பு, பதிவு செய்யப்படாத - இப்போது  உயிர் வாழ்ந்திராத உயர்ஆற்றல் கொண்ட உயிரினங்களை நாமிருவரும் கலந்து உருவாக்கியிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்ற பொருளைத்தான் இது தருகிறது.
புதர்போல் அடர்ந்த மனித உயிர்த் தோற்றம்  மரத்தில் தற்போது உயிர்வாழும் மனித இனம் அண்மையில் தோன்றிய ஒரு ஆப்பிரிக்கக் கிளை என்று ஸ்டீபன் ஜே கோல்ட் ஒரு முறை குறிப்பிட்டார். மற்ற இடங்களிலும் மனித உயிர்கள் தோன்றியிருக்கக் கூடும் என்பதை எந்த ஒரு ஆதாரமும் முற்றிலுமாக மறுத்து ஒதுக்கி விடவில்லை. என்றாலும் ஆப்பிரிக்காவில் இருந்து மனித உயிர்கள் உலகெங்கும் பரவின என்பதே மிகவும் பொருத்தமாக ஏற்றுக் கொள்ளத்தக்க கோட்பாடாக இருக்கிறது.
ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் முதலாக உயிர்வாழ்ந்திருந்த மனிதர்கள் இந்தியக் கடற்கரை அருகில் இருந்த அந்தமான் தீவில் வாழ்ந்தவர்கள் என்பதை மரபணு ஆதாரம் ஒன்று தெரிவிக்கிறது. அவர்கள் மற்றவர்களிடமிருந்து  60,000 ஆண்டுகளுக்கு மேல் - ஆஸ்திரேலியாவின் பழங்குடிகளை விட அதிக காலம் - தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அந்தமான் பழங்குடியினரில் இப்போது 400 க்கும் குறைவானவர்களே எஞ்சியிருக்கின்றனர். இதில் பாதிபேர்  ஜார்வா (Sentinelese)    மற்றும் சென்டிநெலிஸ்  (ளுநவேநேடநளந)  என்ற இரண்டு பழங்குடியினங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வெளி உலகத்துடன் எவ்விதத் தொடர்பும் அற்றவர்களாக இருப்பவர்கள் ஆவர். 100 க்கும் மேற்பட்ட சென்டிநெலிஸ் பழங்குடியின மக்கள், அவர்களது மொழியை எவருமே ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு தனிமையில் வாழ்ந்தவர்கள் ஆவர். மற்ற அந்தமான் மொழிகளுக்கு அறிந்துள்ள எந்த வேறு ஒரு மொழியுடனும் உறவில்லை. அவர்கள் அய்ந்து எண்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஒன்று, இரண்டு, மேலும் ஒன்று, மேலும் சில, அனைத்தும் என்பவையே அவை. அதற்கு நேர்மாறாக பழம் பழுக்கும்  பல்வேறுபட்ட நிலைகளைப் பற்றி விவரிக்க அவர்கள் 12 சொற்களைக் கொண்டுள்ளனர். அவற்றில் இரண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவே முடியாது. தீயை உண்டாக்க முடியாத உலகில் உள்ள இரண்டே இரண்டு பழங்குடியின மக்களில் அந்தமான் பழங்குடியின மக்களும் ஒருவர் ஆவார். மற்றொரு பழங்குடியின மக்கள் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஏக் குள்ள மனிதர்கள் (ke pygmies)   ஆவர். அதற்கு பதிலாக மண் கலயங்களில் நெருப்பை அணையாமல் வைத்திருக்க மரங்களை எரிப்பது பற்றிய விரிவான நடைமுறைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இடிமின்னல் தாக்குதலின்போது உருவான நெருப்பில் இருந்து இது பல ஆயிரம் ஆண்டு காலம் அணையாமல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்திருக்கக்கூடும். நமக்கு வியப்பளிப்பதாக இருந்தாலும், கடவுள் பற்றிய ஒரு கருத்தை அவர்கள் கொண்டிருந்தனர்.  புலுகா என்னும் அவர்களின் உயர்ந்த தெய்வம் கண்ணுக்குத் தெரியாதவர், அழிவற்று நீடித்து நிலைத்திருப்பவர், அனைத்தும் அறிந்தவர் என்றும், கெடுதலைத் தவிர அனைத்தையும் உருவாக்கியவர், பாவம்செய்தால் கோபப்படுபவர், துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் அளிப்பவர் என்று கருதப்படுகிறார். மனிதர்கள் செய்யும் தவறுகளுக்குத் தண்டனையாக பெரும் வெள்ளத்தை அவர் அனுப்புவார்.
2004இல் சுனாமி பெரும் வேகத்தில் அந்தமானைத் தாக்கியது. ஆனால் அதனால் பழங்குடியின மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை நாமறிந்தவரை நிச்சயமாகக் கூறமுடியும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...