Saturday, February 11, 2012

ஹிந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் மறுசீரமைப்புக்கு ரூ.272 கோடி வழங்க குழு பரிந்துரை


ஆ.இராசா - தமிழர் தலைவர் அறிக்கைக்கு கைமேல் பலன்
புதுடில்லி, பிப். 11- நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ் தான் ஃபோட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை மறுசீர மைக்க ரூ. 272 கோடி வழங்க லாம் என மத்திய அரசுக்கு அரசுத்துறைச் செயலர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
டில்லியில் கூட்டம்
பொதுத்துறை நிறுவனங் களைச் சீரமைக்கும் மத்திய செயலர்கள் குழுவின் கூட்டம் டில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச் சரவைச் செயலர் அஜீத் குமார் சேத், சட்ட விவகாரத் துறைச் செயலர் டி.ஆர். மீனா, பொதுத் துறை நிறுவனங்கள் துறை செயலர் டி.ஆர்.எஸ். சௌத்ரி, நிதி விவகாரங்கள் துறைச் செய லர் தினேஷ் குமார் மிட்டல், திட்டக்குழு உறுப்பினர் உள் ளிட்ட அதிகாரிகள் கூட்டத் தில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை
அதில், நலிவடைந்த பல் வேறு பொதுத்துறை நிறுவ னங்களின் நிதிநிலைமை குறித்து அதிகாரிகள் விவாதித்தனர். முடிவில், ஹிந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் தொழிற் சாலையின் மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், ஏற்கெனவே மதிப்பிடப்பட்ட தொகையில் மீதமுள்ள ரூ. 272 கோடியை ஒதுக்கலாம் என மத்திய அமைச்சரவைக்கு, செயலர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் பரிந்துரை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை விவாதிக்கும். அதன் பிறகு, ஒப்புதல் அளிக்கப் பட்டால்  ஹிந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் தொழி லாளர்கள் பலன் பெறுவர்.
ஹிந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையின் மறுசீரமைப்புப் பணிகளை மொத்தம் ரூ. 302 கோடி மதிப்பில் மேற்கொள்ளலாம் என்று பொதுத்துறை நிறுவ னங்களுக்கான மறுசீரமைப்பு வாரியம் அரசுக்கு 2009-ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது.
இதன்படி, 2009-2010ஆம் நிதியாண்டில் முதல் கட்டமாக ரூ. 30 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. ஆனால் மீதித் தொகை வழங்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர் பாக, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு  வழக்கில் சிறையில் உள்ள நீலகிரி தொகுதி மக்க ளவை உறுப்பினரும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சருமான ஆ. ராசா, 13.1.2012 அன்று மத்திய கனரகத் தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரஃபுல் படேலுக்கு கடிதம் எழுதினார்.
அதில், ஹிந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் தொழிற் சாலையைப் புனரமைக்கவும் தொழிலாளர்களுக்கு நிலுவை யில் உள்ள சம்பளத்தை வழங் கவும் வசதியாக ஏற்கெனவே மத்திய அரசு மதிப்பிட்ட தொகையை முழுவதுமாக வழங் குமாறு கோரிக்கை விடுத்தார்.
தமிழர் தலைவர் அறிக்கை
இதுபற்றிய முழுமையான விளக்க அறிக்கையை 8.2.2012 அன்றைய விடுதலையில் தமிழர் தலைவர் கி. வீரமணி எழுதி தமிழக முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழர் தலை வர் அறிக்கைக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.


.
 2

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...