Friday, January 13, 2012

நரேந்திர மோடி அம்பலமானார்


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி இஷ்ரத் ஜகான், இவருடன் ஜாவேத்ஷேக், அம்ஜத் அலிராணா, ஜீ ஷன் ஜோகர் ஆகியோர் 15.06.2004 அன்று அக மதாபாத் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் லஷ்கர் இ.தொய்பா பயங்கரவாத அமைப் பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நரேந்திரமோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர் என்றும் குற்றப்பிரிவுப் போலீசாரால் அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.பி. தமங் 243 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார். கொலை செய்யப்பட்ட நான்கு பேரும் 12.06.2004 அன்று மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்டனர் என்றும், காவல்துறையினர் அகமதாபாத்திற்குக் கொண்டு வந்து படுகொலை செய்தனர் என்றும் அவர்கள் பதவி உயர்வுக்காகவும் முதலமைச்சர் மோடியிடம் பாராட்டுப் பெறுவதற்காகவும் இந்தப் போலி மோதல் கொலையை (என்கவுண்டர்) செய்ததாக தமங் தனது அறிக்கையில் கூறி இருந்தார். அதிகாரிகளின் பெயர்களும் அதில் பட்டியலிடப்பட்டிருந்தன.

இஸ்ரத்கானும் மற்ற முவரும் ஜூன் 14ஆம் தேதியே கொல்லப்பட்டனர் என்றும் 15ஆம் தேதி என்கவுண்டர் நாடகத்தை நடத்தி பிணங்களைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்திருக்கிறார்கள் என்றும் தமங் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த அறிக்கையை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வில்லை. வழக்கு உயர்நீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவும் 21.11.2011 அன்று இது என்கவுண்டர் அல்ல என்றும் காவல் துறையினர் திட்டமிட்டு நடத்திய படுகொலையே என்றும் உறுதிப் படுத்தியுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம் இந்தியத் தண்டனைச் சட்டம் 302இ-ன் கீழ் என் கவுண்டருக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளின்மீது புதிதாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை 20-_-க்கும் மேற் பட்டவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். நான் மாநில உளவுப்பிரிவுத் தலைவராக இருந்த போது எல்லா உளவுத்துறை தகவல்களும் முஸ்லிம்கள் பற்றியதாகவே இருந்தன. மாநிலத்தையே சூறையாடிக் கொண்டிருந்த இந்துத்துவக் குழுக்கள் பற்றி எவ்வித உளவுத்துறை விவரங்களும் இருக்கவில்லை என்கிறார் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார்.
- மனித உரிமைக் கங்காணி - டிசம்பர் 2011


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...