Friday, January 13, 2012

சோதிடர்கள்பற்றி அன்று பெரியார் சொன்னது...


ஊடகங்கள் ஆன்கோஜீன்களாக மக்களின் அகத்தை ஊடுருவிச் சென்று புற்றுநோயை உருவாக்கிக் கொண்டி ருக்கின்றன என்பதே தற்போதைய உண்மை. தங்களுக்குப் பிடித்த செய்தி களை அவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிந்திருந்தும் தங்களுக்கு  ரூபாயை  அள்ளிதரக் கூடிய செய்தியாக மாற்றிவிடுகின்றன.
ஓவ்வொரு குடிமகனின் அகத்தில் தோன்றும் உணர்வுகளை கண்ணாடி போல் பிரதிபலித்து காட்டி மத்திய மாநில அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து மக்களுக்கு நன்மை செய்வதே இவற்றின் தர்மம் ஆகும்.                    நம் நாடு விடுதலை பெற பத்திரிகை ஊடகத்தை நடத்த விடாமல் தடுத்தது கம்பெனியார் தர்பார். அந்த அடக்க முறையை எதிர்த்து அடிஉதைபட்டு விடுதலைச் செய்திகளை துண்டுப் பிரசுரங்களாக வெளியிட்டனர். இதனால் பெற்ற சுதந்தரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஊடகங்கள் என்பது தற்பொழுது பல வகைகளில் காணப்படுகின்றன. மாத வாரநாள் இதழ்கள்தொலைக்காட்சி இணையதளம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் மக்களுக்கு செய்தி களையும் கண்களுக்கு விருந்தையும் படைத்துக் கொண்டிருக்கின்றன என்றாலும் ஏதோ ஒரு நெருடலைத் தோற்றுவிக்கின்றன.                        மழைக்குத் தோன்றும் காளான்களாக வளர்ந்துவிட்ட பல்வேறு அலை வரிசைகள் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளை உருவாக்கிக் கொண்டு கூறும் செய்திகளால் மக்கள் குழப்ப நிலையில்தான் உள்ளனர் என்பது பலரது கருத்து.
ஒரு பொய்யைப் பலமுறை பலரால் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அது உண்மையாகி விடுமல்லவா . ஓளிபரப்பப்படும்  விளம்பரங்களினால் ஒரு பொருளை பல நிறுவனங்கள் வெவ்வேறு முறையில் தயாரித்து விளம்பரப்படுத்துகின்றன. இதனால்  மக்கள் பணம் விரயமாவது  கண்கூடு.                        நாட்டிற்காகப் பாடுபடுபவர் பல்வேறு தொழில் முனைவோர் ஆகியோர்களின் நேர்காணல் பற்றி செய்திகளைப் பற்றிப் போடாமல் சினிமா நடிகர் நடிகைகளைப் பேட்டி காணுதல் அவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி கேட்கும்போது அவர்கள் பேசும் ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழ் பேசும்போது .தமிழ் தெரியாமல் இருப்பதே சிறப்பு போன்று  ஒரு சிலர் கருதிப் பேசுவர். அதை நம் மக்கள்  ஒளியும்  ஒலியுமாக  உள்வாங்கி கெட்டுப்போகிறது இந்த சமுதாயம். இதில் மிகவும் பாதிக்கப்படு பவர்கள் எதிர்கால மனிதவளமாகவும் எதர்காலத்தூண்களாகக் கருதப்படும் இளைஞர்களே. வருடந்தோறும் படித்துவிட்டு வெளிவரும் பொறி யாளர் பட்டம் பெறுபவர்களில் 20 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே பணியில் அமர்கின்றனர். .
மற்றவர்கள் ஏதோ ஒரு வேலையில் குறைந்த ஊதியத்தில் வேலை செய் கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு இளைஞர்களைத் திசைதிருப்பும்  ஊடகங்களும் ஒரு காரணம்  எனலாம்.     மட்டைப்பந்து விளையாட்டிற்கு மிகமுக்கியத்துவம் கொடுக்கின்றன. அதுவும் ஐபிஎல் விளையாட்டை நடத்துபவர்களும். விளையாடுபவர் களும் பணம் சம்பாதிப்பதற்காகவே விளையாடுகின்றனர். இந்திய நாட்டிற்கென்றே உள்ள  வில், வாள், சிலம்பம், கபடி என்று எத்தனையோ விளையாட்டுகள் உடல்வளத்தையும் மனத்தையும் உயர்த்துகின்றன. இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக் கலாமே! பள்ளி மாணவச் சமுதாயம்  கற்பனையான ஒரு உலகத்தில் சஞ்சரித்து படிப்பில் ஆர்வமில்லாமல் போவதற்கும் இனம் புரியாத வயதில் காதல் என்று சொல்ல அலைந்து  தங்கள் எதர்காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பதற்கு ஊடகங்கள் முக்கிய காரணமாக உள்ளன என்பது மறுக்கமுடியாத  உண்மை.
செல் என்னும்  அலைபேசி இளைஞர்களின் உடல் செல்களில் ஓர் அங்கமாக மாறிவிட்டது எனலாம். சாப்பிட்டாச்சா! தூங்கிட்டாயா  யா..யாயா.. னோ..னோனோ  என்று வேண்டாததற்கெல்லாம் பேசிக் கொண்டும் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டும் தன்னுடைய  நேரத்தை மட்டும் அல்லாது இந்தியா வின் வளர்ச்சிக்கான  நேரத்தையும்  வீணடித்தும் கொண்டிருக்கின்றனர்.  சுய நலமிகள் அதைத் தருகிறேன்!  இதைத் தருகிறேன் என்று குறுஞ் செய்திகள் அனுப்புகிறார்கள். அதை நம்பி பணத்தை இழந்தோர் பலபேர்.
ஒரு சாதாரண செய்தியை ஊதி  ஊதிப் பெரியதாக்கி வெடிக்கச் செய்து மக்கள் மனதில் ஒரு வெறுப்பை உண்டாக்கி  அதனால் ஒரு பெரிய அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கொண்டு வருவதில் ஊடகங்கள் முனைப்புடன் செயல்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை. இதனால் ஏற்படும் வெம்மையில் குளிர் காய்பவர்கள் சுயநலவாதிகள்.                        ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாக்களின் பங்களிப்பு அபார மானதாக  இருக்க வேண்டும். ஏனென்றால்  மீடியா   என்பது ஏதோ சாமான் உற்பத்தி  செய்து சந்தையில்  விற்கும் சாதாரண  பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது. மக்களுக்கு  அறிவியல்    அடிப்படையிலான  புதிய  சிந்தனைகள்  உருவாக   தூண் டுகோலாக  செயல்படும்  புனிதமான  பணி  மீடியாவுக்குத்  தரப்பட்டிருக் கிறது. அந்த  பொறுப்பை  அது  செய் யத்  தவறினால்  நாட்டை  மக்களை கை விட்டுவிட்டதாகத்தானே  அர்த்தம்! (ஜட்ஜ் கட்ஜு.. தினகரன் நாளிதழ் 2 நவம்பர்  2011).இது மிகவும் உண்மையான  செய்தி என அனை வரும்  எண்ணுவர்.          ஏதோ  ஒரு  சில ஊடகங்கள் மட்டும் மக்கள் முன்னேற்றத்திற்கான வழிகளை எடுத்துக்  கூறுகின்றன. இன்றைய  நிலையில்  உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில்  மக்கள்  தொகை 121   கோடியாக உயர்ந்துள்ளது.  தமிழ் நாட்டில்  7 கோடியைத்  தாண்டியுள் ளது.   இந்தியாவில் நாள் வருமானம் வெறும் 20 ரூபாய்-  77 விழுக்காடு என்று சொல்லப்படுகிறது. வேலை யற்றோர் இந்தியாவில் 22  விழுக்காடு. (விடுதலை நாளேடு  2  நவம்பர்  2011).
இப்படி உள்ள இந்தியாவின் நிலையை மேல்நிலைக்கு  கொண்டு  வரும்  பொறுப்பு இந்திய மக்கள்  அனைவருக்கும்  இருந்தாலும் ஊடகங்களின் பங்கு  முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம்   மனித  உடலில் தலைமுதல் கால்வரை சுற்றிவருவது  இரத்தம்  மட்டுமே. அதுபோல இந்தி யாவின்  மூலைமுடுக்கெல்லாம் செல் லும்  ஒரே வாகனம்  ஊடகங்கள் மட்டுமே. இதன் பங்கு முழுமையாக  இருக்குமானால்  தனிநபர்  வருமானம்  ரூ20லிருந்து  ரூ100க்கு மாறும்  என்பது திண்ணம். ஆனால்  நடப்பது  என்ன  ஜட்ஜ் கட்ஜு அவர்களிடம்  இந்தியாவை இன்னும் மோசமாக்கு கிறது மீடியா என்றா சொல்கிறீர்கள் என்னும் கேள்விக்கு  இவ்வாறு  பதிலளிக்கிறார்: அதுதான்  என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்து கொண்டு இது அந்த இராசி அது அணிந்தால் உங்களுக்கு  ராசி  என  கதை அளந்து கொண்டிருப்பதை எத்தனை  சேனல்களில்  பார்க்கிறோம் (தினகரன் 2  நவம்பர்  2011)         இதைத்தான்  பெரியார் பல  வருடங் களுக்கு முன்பே கூறியுள்ளார். ஜோதி டர்கள்  கிரகங்கள்  ஒன்பது என்று  சொல்லுகிறார்கள். மனிதன்  பிறந்த  நேரத்தில் வானத்தில்  இருக்கும்  கிரகங்களின்  நிலையை  வைத்து  ஜோதிடம் கணிக்கிறார்கள்  என்று  கூறப்படுகிறது. இப்பொழுது யுரேனஸ் நெப்டியூன் புளுட்டோ போன்ற  புதிய கிரகங்களை விஞ்ஞானிகள்  கண்டு பிடித்துள்ளார்களே-  இவற்றிற்கு  ஜோதிடர்களின் சாதகத்தால் என்ன  பலன். (முனைவர் மா.நன்னன்  பெரியார் கணினி பக்க எண்:885)            ஊடகங்கள் நாட்டின் முன்னேற்றத் திற்கு பயன்பட்டுக் கொண்டிருந்தாலும்  பல்வேறு மாற்றங்களைக் கொண்டு  வரவேண்டியுள்ளது.  உயர்திரு கட்ஜு அவர்கள் கூறியதுபோல   இப்படி பல வகைகளிலும் சமுதாயத்தை சீரழிக் கும்  ஊடகங்களின்  செயல்பாட்டைக்   கட்டுப்படுத்த நெறிமுறைகளை  வகுக்க வேண்டும். இருந்தபோதும் ஊடகங்கள் தாமே தங்கள் செயல் பாட்டில் அதிக மாக  உள்ள பொழுது போக்கு அம்சங் களை  குறைத்துமக்கள் முன்னேற்றத் திற்குத் தேவையான செய்திகளை  பதிவு செய்தால் இந்தியா வளமிக்கதாக உயரும்.
- வீ. மீனாட்சி .

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...