Saturday, January 28, 2012

நீதிமன்றத்தின் தொடர் தீர்ப்புகள்!

அ.இ.அ.தி.மு.க., ஆட்சி இம்முறை பொறுப் பேற்றதிலிருந்து பல முக்கிய முடிவுகளில் நீதிமன் றங்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி வருகின்றன.

(1) சமச்சீர்க் கல்வித் திட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சியில் செயலுக்கு வந்தது என்பதற்காக, அத்திட்டத்தை செயல்படுத்தாமல், பழைய முறை யிலேயே பாடங்கள் அமையும் என்ற பிடிவாதத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றங்கள் (உச்சநீதிமன்றம் வரை) அதிமுக அரசின் நிலைப் பாட்டைக் குறைகூறி, சமச்சீர்க் கல்வியை இவ் வாண்டே செயல்படுத்த வேண்டும் என்று ஆணை யிட்டன.

வீண் பிடிவாதத்தால் பிள்ளைகளின் கல்விக் காலம் வீணானதுதான் மிச்சம்.

2) சென்னைக் கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டையொட்டி தி.மு.க. அரசால் உருவாக்கப் பட்ட நவீன நூலகத்தை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற இன்றைய அரசின் முடிவுக்கு இடைக் காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
3) தி.மு.க., ஆட்சியில் பிரம்மாண்டமாக உருவாக் கப்பட்ட தலைமைச் செயலகத்தை மருத்துவ மனையாக நடத்திட  இந்த ஆட்சி மேற்கொண்ட முடிவுக்கும் இப்பொழுது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

4) 13,500 மக்கள்  நலப் பணியாளர்களை அ.தி.மு.க. அரசு வேலை நீக்கம் செய்த நிலையில் அதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும், இவ்வரசு தோல்வியைத் தழுவி விட்டது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உடனே பணி அமர்த்தம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து விட்டது.

ஒரு குறுகிய காலத்தில் அரசின் செயல்பாடுகள் நீதிமன்றங்களால் தொடர்ந்து தடை செய்யப்பட்டது என்பது இப்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு காலத்தில்தான் அதிகம்! இந்த நிலை ஓர் அரசுக்குப் பெருமை சேர்ப்பதோ, சிறப்புக்குரியதோ அல்ல.

கடந்த முறை ஆட்சியில் இருந்தபோதுகூட 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் (7.9.2002).

இந்த அதிர்ச்சியினால் நத்தம் வீரப்பன் என்பவர் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியானார். 80 பேர் மரணம் - இதில் தற்கொலை செய்து கொண்டவர் களும் உண்டு.

உச்சநீதிமன்றம் அவர்களுக்கு மீண்டும் வேலை அளிக்க ஆணை பிறப்பித்தது.

ஒவ்வொரு முறையும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நியமிக் கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

13,500 பணியாளர்கள் என்றால்  அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்லர்; 13,500 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்று பொருள். பிள்ளைகளின் படிப்புப் பாழாகி விடுகின்றது என்று அர்த்தம்.

இதைப்பற்றியெல்லாம் ஓர் அரசு நினைக்க, சீர் தூக்கிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளது. மக்கள் நல அரசு (Welfare State)  என்பதற்கு இதுதான் பொருள்.

ரசியல் என்பது வேறு. அது வீதிகளில் நடக்க வேண்டியது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் எதிர்க் கட்சிகளுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் சேர்த்து தான் அரசு என்பதை மறந்து விடக் கூடாது.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துச் செயல் படுத்துவதிலும்தான் ஒரு நல்லரசு கவனம், முயற்சி செலுத்த வேண்டுமே தவிர, முந்தைய ஆட்சிக் காலத் தில் செய்யப்பட்ட திட்டங்களைச் சீர் குலைப்பதல்ல!

அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறைகளால்  தோல்வியை அடைந்து விட்டது என்பதுதான் யதார்த்தமாகும்.

இத்தனை எதிர் தீர்ப்புகளுக்குப் பிறகாவது இவ்வரசு புதிய சிந்தனையுடன், தன் பயணத்தைத் தொடங்க வேண்டும்.

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள்கூட இந்த வகையில் மிகச் சரியாகவே கருத்துக்களைத் தெரி வித்துள்ளன. தம் கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு அரசியல் உள்நோக்கம் இருக்க முடியாதே!

முதல் அமைச்சர் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுமா? எங்கே பார்ப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...