Saturday, January 28, 2012

தமிழகத்தில் நீதிமன்றத்தின் ஆட்சியா? அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறதா?


செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி

வல்லம், ஜன.28- தமி ழகத்திலே நீதிமன்றங்கள் ஆட்சி நடத்துகின்ற னவா? அல்லது மக்க ளாலே தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ஆட்சி நடைபெறுகிறதா? என்று சந்தேகம் கொண்டு பார்க் கும் அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சியின் நிலை உள் ளது. அ.தி.மு.க. ஆட்சி தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத் தார்.
தஞ்சை வல்லத்தில் நேற்று (27.1.2012) காலை செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்த பேட்டி வருமாறு:
அடிக்கடி மாற்றுவது சரியல்ல
தமிழர் தலைவர்: சட்டமன்ற உறுப்பினர்கள் அய்ந்தாண்டுகள் பணியாற்ற வேண்டும் என்று மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதே போல ஆட்சிகள் நீடிக்க வேண்டும் என்ற தத்துவமே ஜனநாயகத்தில்   தொடர் நிகழ்வுகள் தொடர் செயல் பாடுகள் இருக்க வேண்டும் என்ப தற்காகத்தான். அந்த வகையிலே அமைச்சர்களாக வரக் கூடியவர் களை மாற்றுவது அவர்களுடைய இலாக்காக்களை மாற்றுவது என்பது முதலமைச்சருடைய தனிப் பட்ட உரிமை என்பது உண்மையாக இருந்தாலும்கூட, அமைச்சர் களுக்குப் போதிய கால அவகாச வாய்ப்புகளைக் கொடுத்தால் தான் அவர்கள் அத்துறைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
அமைச்சர்கள் மட்டுமல்ல - அந்தந்த துறையிலே இருக்கக் கூடிய அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதினுடைய விளைவு என்ன ஆகும் என்று சொன்னால் ஒரு நிலைத்த வளர்ச்சிக்கு அது இடையூறாக ஆகும். ஒரு வாரம் ஒரு பள்ளிக் கல்வி அமைச்சர் இருந்தார். அடுத்த வாரம் அவர் இல்லை யென்றால் யார் இப்பொழுது அமைச்சர் என்று மக்களுக்கும் தெரி யாது. ஏன் பத்திரிகைகாரர்களுக் கும் தெரியாது.
செவிலியர்களை தரதரவென இழுத்துச் செல்வதா?
செவிலியர்கள், தங்கள் எதிர் காலத்தைப் பற்றிக் கவலைப்படுவது நியாயமானதாகும். ஏனென்றால் படித்திருக்கிறார்கள். பாதிப் பேர் பணி மூப்பு அடிப்படையிலே  தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நிலையிலே மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண் டிய செய்தி என்னவென்று சொன் னால் எஞ்சியவர்களுக்கும் அந்த வாய்ப்புகளை கொடுத்து இரண் டாண்டுகளுக்குப் பிறகு புதிய முறைகள் வரலாம் என்று சொன் னால் அந்த பிள்ளைகள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப் பார்கள். அவர்கள் தங்களுடைய குறைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு போவதற்காக பட்டினிப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது  காவல் துறையினர் தரதரவென பெண்களை இழுத்துக் கொண்டு போவது - கைது செய்து கொண்டு செல்வது போன்ற காட்சிகள் எல்லாம் மிகக் கொடூரமாக இருக்கின்றன. எனவே ஆட்சியினர் இந்த முறைகளை எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தெளிவாகவே எந்த பிரச்சினையையும் உரியவர்களை அழைத்துப் பேசினால் சுலபமான தீர்வு காண முடியும். அந்தப் பிரச்சினை சிறு பொறியாக இருக்கும் பொழுதே தீர்க்கப்பட வேண்டும். அது நெருப்பாக மாறுவதற்கு முன்னாலேயே தீர்க்கப்பட வேண்டும்.
அதற்குத்தானே உளவுத்துறை இருக் கிறது. மற்ற துறைகள் இருக்கின்றன. நல்ல ஆட்சி என்பதற்கு அடையாளமே ஒரு பிரச்சினை துவங்கப்படுவதற்கு முன்னா லேயே அந்த பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்குப் பயன்படும்படியாக செய்தல் வேண்டும்.
மோடி அரசு மாடல் அரசா?
அதோடு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். சில காலத்துக்கு முன்பு  மோடி அரசுதான் இந்தியாவுக்கே மாடல் அரசாகத் திகழ்கிறது என்று மோடியைப் பற்றி தமிழ்நாட்டில் ஒருவர் தோடி ராகம் பாடினார்.
ஆனால் இன்றைக்கு என்ன சூழல் என்று சொன்னால் நேற்று பத்திரிகையிலே வந்திருக்கிறது.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் மோடி மீது கடுமையான கண்டனத்தை சுமத்தி யிருக்கிறது.
22 போலி என்கவுண்டர்களை நடத் தியதற்காக உச்சநீதிமன்றம் ஒரு மானிட் டரிங் ஏஜென்சி நடத்தி அதன் மூலமாக விசாரிக்க வேண்டும் என்று சொன்ன திருக்கிறதே இது மிகப்பெரிய வெட்கக் கேடாகும்.
ஒரு ஆட்சி என்பது மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகின்றன, நடத்தப்படு கின்றன என்பதுதான் ஜனநாயகத்திலே மிக முக்கியம்.
அந்த வகையில் குஜராத்திலே எவ் வளவு பெரிய கொடுமைகள் நடந்திருக் கின்றன என்பது தெரியும்.
மக்களைத் தவறான பாதைக்கு
ஆகவே தான் ஊடகங்களுக்கு எங்க ளுடைய வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து உண்மைகளை மக்களுக்குக் கொண்டு வாருங்கள்.
அதற்குப் பதிலாக யாரோ சிலரை சில வண்ணங்கள் தீட்டிக் காட்டலாம் என்று சிலர் நினைத்தால் அதை மக்களுக்குக் காட்டாதீர்கள்!
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டுமே குஜராத் அரசைக் கண்டித் திருக்கின்றன. கண்டனம் தெரிவித்திருக் கின்றன.
அதை ஒரு மாடல் அரசு என்று தமிழ் நாட்டிலே சொல்லக்கூடியவர்கள் இருக் கிறார்கள் என்று சொன்னால் இதைவிட மக்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத் தாக்குவது வேறு இல்லை.
கேள்வி: தமிழகத்தில் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் தமிழக அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதே!
தமிழர் தலைவர்: நிச்சயமாக அதி லிருந்து பாடம் பெறவேண்டியவர்கள்  இனி யாவது பாடம் பெற வேண்டும்.
மக்கள் ஒரு புது ஆட்சிக்கு நல்ல வலி மையைக் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி புதிய திட்டங்களை உரு வாக்கி மேலும், மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். சென்ற ஆட்சி என்ன செய் ததோ அதைவிட நாங்கள் மக்களுக்கு அதிகமாக செய்திருக்கிறோம் என்று காட்டுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அதைவிட்டு விட்டு, அதை எல்லாம் நான் மாற்றுகிறேன் என்று சொல்லுவது சரி யானதல்ல.
நீதிமன்றங்கள் கேட்ட கேள்விகள் மிகவும் கடுமையான கேள்விகள். தமிழ் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின் றது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கிறார்கள். அதுபோல பல முறை கேட்டுள்ளார்கள்.
ஆட்சி நடத்துவது யார்?
13,500 மக்கள் நலப்பணியாளர்கள் வாழ்விழந்தவர்களாக ஆக்கப்படக் கூடிய மிகப்பெரிய பரிதாபம். நீதிமன்றங்கள் அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக் கின்றன.
இப்பொழுது மிகப்பெரிய கேள்வி தமிழகத்தில் நீதிமன்றங்கள் ஆட்சி செலுத்துகின்றனவா? அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறுகிறதா என்று சந்தேகப் படக்கூடிய அளவுக்கு பிரச்சினைகள் வந்திருக்கின்றன.
இதற்கு முதலமைச்சர் அவர்கள் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டு எஞ்சிய காலத்தில் மக்கள் கொடுத்த வாக்குறுதியை மக்கள் கொடுத்த தீர்ப்பை அவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி அளித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...