Thursday, January 12, 2012

நகைச்சுவை என்னும் நன்மருந்து!


கிளவுன் நெட் ஒர்க் என்ற உலக அமைப்பு ஒன்று இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள நகைச் சுவைக் கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

நீனா கிளாட் கோவா, எவல்யான் சிட்ரோன் ஆகிய இருவர் 2011 டிசம்பர் 5 ஆம் தேதி முதல் தடவையாக இந்தியா வந்துள்ளனர். இருவரும் பெண்மணிகள். இவர்கள் இருவரும் கோமாளி வேடம் தரித்துக் கொண்டும், முகத்தில் வண்ணங்களைத் தீட்டிக் கொண்டும், வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டும் ஆடிப்பாடி வெடிச் சிரிப்பை ஊட்டுகின்றனர்.

இதில் நினா கிளாட் என்பவர் டென்மார்க் நாட்டுக்காரர். மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றியவர்.

நோயாளிகளிடம் மருத்துவர்கள் கடிந்து விழுவது, அவர்களின் நோய் பற்றி அச்சுறுத்துவது என்பனவற்றை நேரில் கண்ட இவர் வேதனையுற்று, நோயாளிகளைச் சிரிக்க வைக்க வேண்டும் - அதுவும் ஒருவகையான மருத்துவமே என்ற முறையில் நகைச் சுவை அளிப்பது என்ற முடிவின்கீழ்தான் இத்தகைய நகைச் சுவைப் பணியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். இதற்காகத் தனிப் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

55 வயதாகும் எவல்யான் திருமணம் செய்து கொள்ளவில்லை. சொந்த நாடு நெதர்லாந்து.

2001 ஆம் ஆண்டில் ருசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து இணைந்தனர். உலகின் பல நாடுகளுக்கும் சென்று நகைச்சுவை நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்திக் காட்டி வருகின்றனர்.

சிரிப்பால் மன அழுத்தம் போகும், நோய் குணமடையும் - வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும் என்பதால் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர். டிசம்பர் 17 ஆம் தேதி டென்மார்க் திரும்பிவிட்டனர்.

ஏதோ ஒரு வகையில் பிறர்க்கு உதவுவது என்பது ஒருவகையான தொண்டறப் பணிதானே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...