Thursday, January 12, 2012

விலங்குகளை சிவப்பு வண்ணத்தைக் காணச் செய்வது எது ?



அதிக அளவு விற்பனை யான நூலாசிரியரான ஜான் லிலி, யானையின் முன்னே வருபவர் ஒளிரும் வண்ண ஆடை அணிந்து வரமாட் டார், காளையின் முன்னே வருபவர் சிவப்பு ஆடை அணிந்து வரமாட்டார் என்று எழுதிய 1580ஆம் ஆண்டு காலத்திலிருந்தே சிவப்பு நிறத்தைக் கண்டு காளைகள் கோபம் கொள்கின்றன என்ற கட்டுக்கதை  நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், எலிகள், நீர்யானைகள், ஆந்தைகள், உணவுக்காக இரவில் வேட்டையாடி நிலத்தில் குழி பறித்து வாழும்  aardvarks  விலங்குகள், காளைகள் அனைத்துமே வண்ணங்களைக் காண முடியாதவைகள் ஆகும்.
காளையின் முன் வண்ணத்துணியை வைத்து போராளி ஆட்டும்போது அத்துணியின் அசைவைக் கண்டுதான் காளை முட்டுவதற்கு பாய்ந்து வருகிறது. அத்துணியில் வண்ணம் சேர்ப்பது வேடிக்கை பார்க்கும் மக்களை மயக்கத்தான்.
நீல நிறத்தையும், மஞ்சள் நிறத்தையும் நாய்களால் பிரித்து அறியமுடியும். ஆனால், பச்சையை சிவப்பு வண்ணத்தில் இருந்து வேறுபடுத்திக் காண அவைகளால் முடியாது. போக்குவரத்து விளக்குகள் செயல்படும் இடங்களில், மக்கள் கடந்து செல்வதை வைத்துதான் பாதையைக் கடப்பது பாதுகாப்பானதா அல்லவா என்று நாய்கள் முடிவு செய்கின்றன. அதனால்தான்   நடந்து செல்பவர்கள் பாதையைக் கடப்பதற்கு தற்போது உள்ள அமைப்பில் பீப் பீப் ஒலி எழுப்பப்படுகிறது.
சிவப்பு நிறத்தை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் உயிரினம் கோழிகள்தான். கோழி சிவப்பு வண்ணத்தைக் காண்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கோழிப்பண்ணைக்காரர்கள் மட்டுமே நன்கு அறிந்துள்ளனர். ஏதேனும் ஒரு கோழியின் உடலிலிருந்து ரத்தம் வெளிப்பட்டால், மற்ற கோழிகள் அதை மூர்க்கமாகக் கொத்திக் கொத்தியே சாகடித்துவிடும். இதனை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், கோழிகள் ஒன்றையொன்று கொன்று கொள்ளும் வெறி அதிகமாகிவிடும்; பண்ணையில் உள்ள கோழிகளின் எண்ணிக்கையும் விரைவாகக் குறைந்து போகும். இந்தப் பிரச்சினைக்கு வழக்கமாகக் கடைபிடிக்கும் தீர்வு, சூடான கத்தியினால் அவற்றின் அலகுகளை வளைத்து விடுவதுதான். அப்போதுதான் அதன் மூலம் ஏற்படக்கூடிய அழிவின் அளவு குறையும்.
என்றாலும் 1989இல் அனிமேலன் என்ற ஒரு நிறுவனம் முட்டையிடும் கோழிகளுக்கு பொருத்தக்கூடிய சிவப்பு வண்ண சாயல் கொண்ட கான்டேக்ட் லென்சை அறிமுகப் படுத்தியது. தொடக்க காலத்தில் இது நல்ல பயன் அளித்தது. கோழிகள் எதைப் பார்த்தாலும் சிவப்பாகவே தெரியும் என்பதுதான் இதன் காரணம். அதனால் கோழிகளிடையான சண்டைகள் குறைந்தன. முன்பு போல் அவை சுறுசுறுப்பாக இல்லாமல் போனதால், அவற்றிற்குத் தேவையான தீவனத்தின் அளவும் குறைந்துவிட்டது. என்றாலும் அவை அதே எண்ணிக்கையிலான முட்டைகளை வைத்தன.
கோழிப்பண்ணை தொழிலே மிகக் குறைந்த 1.6 விழுக்காடு லாபத்தில்தான் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 25 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. அவற்றில் 15 கோடி கோழிகள் 50 கோழிப் பண்ணைகளில் மட்டுமே உள்ளன. கோழிகளுக்கு சிவப்பு கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் முறையினால் அவர்களின் லாபம் மூன்று மடங்கு பெருகியது.
கோழிகளுக்கு கான்டாக்ட் லென்ஸ் பொருத்தும் பணி சிக்கல் நிறைந்ததாகவும், அதிக உழைப்பு தேவைப் படுவதாகவும் இருப்பது இழப்புக் கேடுதான்.  கண்ணாடி பொருத்தப்பட்டதால் இயற்கையான உயிர்க் காற்று கோழிகளின் கண்களுக்குக் கிடைக்காததால், கண்களில் வலியை ஏற்படுத்தி, விரைவில் அவை சீரழியச் செய்தது. விலங்குகள் மீதான கொடுமை இது என்று குற்றம் சாற்றப் பெற்றதால், இந்த கான்டாக்ட் லென்சை அனிமேலன்ஸ் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...