Thursday, January 12, 2012

வளாகத் தேர்வு


சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை வழக் குரைஞர் பழனிமுத்து தொடுத்திருக்கிறார்.  இது போதிய அளவு விளம்பர வெளிச்சத் துக்கு வரவில்லை யென் றாலும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கே!
பொதுத் துறை நிறு வனங்களில் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்ய வளாகத் தேர்வு (Campus Interview)  நடத்தித் தேர்வு செய்து விடுகிறார்கள்.
இப்படித் தேர்வு செய் யப்படும்போது இட ஒதுக் கீடு முறை பின்பற்றப் படுவதில்லை. இது சட்டப் படி தவறானதாகும்.
ேலை வாய்ப்பு அலு வலகம் மூலமாகவோ, ஏடுகளில் விளம்பரங்கள் செய்தோதான் இட ஒதுக் கீடு முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் விதி.
இட ஒதுக்கீட்டின் நடு முதுகைப் பிளக்க இப்படி ஒரு குறுக்கு வழியைப் பின்பற்றுவது சரிதானா?
பொதுத்துறை நிறுவ னங்களின் உச்ச பதவி யில் இருப்பவர்கள் பெரும் பாலும் பார்ப்பனர்களே! அவர்களுக்கு இட ஒதுக் கீடு முறையில் ஆட் களைத் தேர்வு செய்வதில் மனம் ஒப்புவதில்லை. இந்த நிலையில் தகுதி - திறமை (Efficiency) என்று சொல்லிக் கொண்டு, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக் களின் வயிற்றிலடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் - பொறுத்துக் கொள்ளவும்தான் முடியும்?
ஏற்கெனவே மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப் பட்டவர்களுக் குரிய விகிதாசாரப்படி வேலை வாய்ப்பு அளிக்கப் படவில்லை என்பதை நாடாளுமன்றத்தில் வெளியான புள்ளிவிவரங் கள் வெட்ட வெளிச்ச மாக்கி விட்டன.
முதல் நிலை(Class-I) உத்தியோகங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய 15 சதவிகித இட ஒதுக் கீட்டில் வெறும் 13 விழுக் காடும், பழங்குடியினர்க் குரிய ஏழரை விழுக்காட் டில் 3.8 விழுக்காடு இடங்கள்தான் கிடைத் துள்ளன.
27 விழுக்காட்டுக் குரிய பிற்படுத்தப்பட்டவர் களுக்கோ வெறும் 5.4 விழுக்காடு இடங்களே அளிக்கப்பட்டு, மீதி பெரும்பாலான இடங் களைப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து வரு கின்றனர்.
இந்த நிலையில் வளாகத் தேர்வு என்ற சூழ்ச்சி வலையை விரித்து இட ஒதுக் கீட்டை ஒழித்துக் கட்டிவருகிறார்கள். சென்னை உயர்நீதி மன்றம் என்ன செய்யப் போகிறது? பார்ப்போம்!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...