Friday, December 30, 2011

இயக்க லட்சியங்கள் பரப்புபற்றிய சிங்கப்பூர் பல்கலைக் கழக மாணவரின் படப்பிடிப்பு!


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் 24.12.2011 அன்று காலை கலந்து கொண்டதில் நான் மிக்க மகிழ்ச்சியுற்றேன்.

காரணம் முதல் முறையாக அதில் கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தியதோடு தமிழர் தலைவரின் 50ஆம் ஆண்டு விடுதலை ஆசிரியர் பணியைக் கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க சாதனை விழாவில் கலந்து கொண்டேன்.

தமிழர் தலைவர், மென்மேலும் பல்லாண்டு இப்பணியைத் தொடர உலகத் தமிழர்கள் வாழ்த்துவார்கள்; ஆதரவளிப்பார்கள்.

சென்ற நவம்பர் மாதம் நான் பயிலும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ் நாட்டில் சமூக சீர்திருத்த இயக்கங்களும் அதன் சமூக தாக்கங்களும் என்ற தலைப்பில் அந்த கருத்தரங்கு நடை பெற்றது. சிறப்பு பேச்சாளராக தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நானும் கலந்து கொண்டு அவரின் உரையைக் கேட்டேன்.

ஆசிரியர் அவர்கள் தனது 10ஆம் வயதில் பொது மேடையில் உரையாற்றிய சிறப்பு வாய்ந்த தலைவர். நானோ எனது 10ஆம் வயதிலிருந்து இந்த பெருந் தலைவரின் உரையைக் கேட்டுக்கொண் டிருக்கிறேன். சிங்கப்பூருக்கு அவர் வரும்போதெல்லாம் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள தவறுவதில்லை. ஆனால், இம்முறை முதன் முதலில் ஆசிரியரின் உரையை ஆங்கிலத்தில் கேட்டேன். மிக வியப்பாக இருந்தது. மிக தெளிவாகவும் சுருக்க மாகவும் பற்பல கருத்துக்களை மாண வர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எடுத்துக் கூறினார்.

சிங்கப்பூரில் வாழும் என்னைப் போன் றோருக்கு தந்தை பெரியாரின் கருத் துக்களும் அவரின் கொள்கைகளும் தெரிந்திருக்கிறதென்றால் அதற்கு முழு முதல் காரணம் தமிழர் தலைவர்தான் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆசிரியர் அவர்கள், வாழ்வியல் சிந்தனையாளர், அயராது உழைக்கும் சுயமரியாதைப் போராளி,

என்றும் ஒளிரும் கருப்பு மெழுகு வர்த்தி.

தந்தை பெரியார் இன்று ஒளி மயமாகி..... உலகமயமாகியிருக்கிறார் என்றால் அதற்கு தமிழர் தலைவரின் ஆற்றலே காரணம்.

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் பெரியாரின் குரல் ஒலிக்கிறது. இது நாம் அனைவரும் நன்கறிந்த ஓர் செய்தி.

இன்று பெரியார் உலக அரங்கில் உலா வருகிறார்; பல நாடுகளில் சிம்மாசனம் ஏறியிருக்கிறார். சுறுசுறுப்புடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கொள்கை பரப்பும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆசிரியர் அவர்கள் முதன்முறை சிங்கப் பூருக்கு 25.12.1967ஆம் நாள் வந்தார்.

தந்தை பெரியார் தனது முதல் அயல் நாட்டு பயணம் மேற்கொண்டு மலாயா வுக்கு வருகை புரிந்து, பிறகு சிங்கப்பூர் வந்து காலடி எடுத்து வைத்த நாள் 25.12.1929. சரியாக 38 ஆண்டுகள் வித்தியாசம். அதே மாதம் அதே நாள். சில ஆண்டுகளும் முன் என் தந்தை, ஆசிரியர் அவர்களிடம் கூறிய சிறப்புமிக்க வரலாற் றுத் தகவல் இது!

விடுதலை வாசகர்களாகிய நாம் அண்மையில் ஆசிரியர், சீனாவிற்கும் தைவானிற்கும் சென்ற செய்தியை படித்து அறிந்திருப்போம். நீண்ட காலமாக தென்கிழக்காசியாவில் வேரூன்றியி ருக்கும் தந்தை பெரியாரின் கொள்கை களை ஆசிரியர் அவர்கள், ஒரு படி மேலாக கிழக்காசியாவிற்கு கொண்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஓர் நற்செய்தி.

24.12.2011 நிகழ்ச்சியில் ஆசிரியர் குறிப்பிட்டதுபோல, பெரியாரை உலக மயமாக்க பற்பல உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள். தைவான் நாட்டின் லுங்ஹுவா பல்கலைக் கழகத்துக்குச் சென்றபோது, வருக, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் என்று ஆங்கிலத்தில் “WELCOME, PERIYAR MANIAMMAI UNIVERSITY” என்று பதாகைகள் எழுதப்பட்டிருந்தன. தைவானில் பெரியாரின் பெயரை பிரபலமாக்க கல்விக் கழகம் உத்தியாகப் பயன்படுத்தப் பட்டது. இதைப்போல, எந்தெந்த சூழ் நிலைக்கு எந்தெந்த முறை களை, உத்திகளை கையாள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர் மிகச் சிறப்பாக பெரியாரின் புகழைப் பரப்பி யிருக்கிறார்; பரப்பிக் கொண்டிருக்கிறார்.

தமிழர் தலைவர் 50 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி சாதனை புரிந் திருக்கிறார். இந்த அரை நூற்றாண்டு காலமாக விடுதலை தினசரி பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நாளிதழ் இன்று சென்னையிலும் திருச்சியிலும் மட்டும் அச்சிடப்படவில்லை. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டது போல்,

விடுதலை இதழின் இணையப் பதிப்பு அதன் வளர்ச்சிக்குத் தக்க சான்றாகும். தொழில்நுட்ப வளர்ச்சியில் விடுதலையும் வளர்ச்சி அடைந்ததே பெரியார் உலகமயமாக அடித்தளமாக அமைந்திருக்கிறது. இன்று உலகில் நாம் எந்த மூலையில் இருந்தாலும் விடுதலையைப் படிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளோம். தினமும் 2378 வாசகர்கள் இணையத்தில் விடுதலை இதழைப் படிக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் என்று கூறுவதில் பெருமையடைகிறேன். இவ்வாய்ப்பை நல்கிய விடுதலை ஆசிரியருக்கும் குழுவுக்கும் நன்றி.
- இர்ஷாத் முஹமது, சிங்கப்பூர்
(சிங்கப்பூரின் பிரபல தேசியப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பயிலும் மாணவர்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...