Friday, December 30, 2011

விடுதலை நூலகங்களுக்கு செல்வதை அதிமுக அரசு தடைசெய்தது


50,036 சந்தாக்களைத் திரட்டி சாதனை படைத்திருக்கிறோம்!
விடுதலை சந்தா வழங்கிய விழாவில் தமிழர் தலைவர் உரை
சென்னை, டிச.30- ஜெயலலிதா அரசு அதிமுக அரசு விடுதலைஇதழை நூலகங்களுக்கு செல்வதை நிறுத்தி யதன் விளைவு இன்றைக்கு 50,036 சந்தாக்களை பெற்று வெற்றி அடைந்திருக்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் 24.12.2011 அன்று இரவு விடுதலை சந்தாக்கள் வழங்கிய நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
விடுதலை எப்பொழுதும் நிற்காது!
தோழர்களே! தோழியர்களே! விடுதலை வேர்களே! விடுதலைப் புரவலர்களே! விடுதலைத் தேனீக் களே! இவ்வளவும் இருக்கும்பொழுது விடுதலை ஆசிரியருக்கு எந்த பயமும் இல்லை. விடுதலை. ஆசிரியர் இனி மேல் துணிந்து எழுதலாம்.
அது மட்டுமல்ல எழுதுவதால் சிறைக்குப்போனால் விடுதலை அப் பொழுதும் நிற்காது. அது தொடர்ந்து வரும் என்கிற அளவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றோம். 10 மணிக்குள் இந்த நிகழ்ச்சியை முடிக்க வேண்டும்.
நேரத்தின் நெருக்கடியில் நின்று கொண்டிருக்கின்றோம். சொன்னார் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன். எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. நம்முடைய பொதுச் செய லாளர் தொடங்கி தலைமைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள், தோழியர்கள் வரை முகம் சுளிக்காமல் ஒத்துழைத்த உங்களுக்கு நன்றி. எல்லையற்ற பாசம் மிகுந்த வற்றாத அன்புக்கு எப்படி நன்றி செலுத்துவது? எப்போது-திரும்ப உழைத்து நான் அடைக்கப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது.
அடுத்த நமது இலக்கு
நாம் மறுபிறவியிலே நம்பிக்கையில் லாதவர்கள். அது தேவையில்லாத ஒரு கற்பனை என்று உறுதியாக நினைக்கக் கூடியவன். அடுத்தபடியாக நமக்கு இலக்கு எப்படியிருக்க வேண்டும் என்று சொன்னால் மற்ற ஏடுகள் எல்லோருடைய கையிலும், சாதாரண வெகு மக்கள் கையிலே இருக்கிறதோ அதே நிலையை அடைய இன்னும் ஆறு மாதங்களில் விடுதலையை உயர்த்த வேண்டும் என்பதுதான் நமது இலக்கு என்பதை நான் இப்பொழுது மகிழ்ச்சி யோடு அறிவிக்கின்றேன்.
தபால்காரர்மீது கோபம்
விடுதலையினுடைய அச்சு எந்திரம் மாற்றப்பட்டது. விடுதலையினுடைய பொலிவு மிகச் சிறப்பாகத் திகழக் கூடிய அளவுக்கு வந்துவிட்டது. காலையிலே தலைமை நிலையச் செயலாளர் மற்றும் தோழர்கள் சொன்னார்கள். தபால்காரர் மீது கோபம் வந்தது என்று ஒளிவண்ணன் சொன்னார்.
தபால்காரர் மீது இனிமேல் அதிகம் கோபம் வராது. காரணம் தபால் காரர்களையே இனிமேல் நாம் நம்ப மாட்டோம்.
தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்லவில்லை.  தபால் இலாகாவே இப்பொழுது ரொம்ப பலகீனமாகப் போய்விட்டது.
நன்றி என்ற வார்த்தையைத் தவிர
50,036 விடுதலை சந்தாக்கள் வந்தது பாருங்கள் அது சாதாரணமல்ல. தோழர்கள் சொன்னார்கள் நன்றி என்ற வார்த்தையைத் தவிர அதற்கு மேல் ஒரு வார்த்தை இல்லை. ஆகவே அதைத் தலைவணங்கிச் சொல்லு கின்றோம்.
வெற்றியடையாமைக்கு என்ன காரணம்?
திராவிடர் இயக்க ஏடுகள் மற்ற பார்ப்பனர்கள் நடத்துகிற ஏடுகளோடு மிகப்பெரிய அளவில் போட்டி போடாமல் வெற்றி அடையாமல் இருந்தது என்று சொன்னால் அதற்கு மிகப்பெரிய குறைபாடு எங்கேயி ருக்கிறது என்று நாம் ஆழமாக அறிவியல் பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் டுயஉம டிக டீசபயளையவடி அமைப்பு முறையிலே நாம் கவனம் செலுத்தாமல் இருந்ததுதான். ஏதோ கொள்கையை எழுதுகிறோம். அது போய்ச் சேர்ந்தால் போதும். தோழர்கள் படித்தால் போதும் என்று இதுவரையிலே நினைத்ததினாலேதான் அந்த வளர்ச்சியில்லை. இப்பொழுது நம்முடைய அமைப்பின் சார்பில் நீங்கள் சந்தாவை நிறைய சேர்த்துக் கொடுத்திருக்கின் றீர்கள்.
முதலில் கலர் படம் என்றால் என்னவென்றே தெரியாது. இப்பொழுது பல வண்ணங்களில் அடிக் கின்றோம்.
நமது எண்ணங்கள் வண்ணங் களிலே வரக்கூடிய அளவிற்கு சிறப்பாக வரக்கூடிய வாய்ப்பு. அடுத்த கட்டம் உட்கார்ந்து மிகப்பெரிய பணியை ஆற்ற வேண்டும்.
விடுதலையை கேட்கக்கூடிய அளவிற்கு
விடுதலை என்பது இல்லந்தோறும் இருக்கக்கூடியதாகவும், சந்தாவை நாம் சேர்ப்பதற்குப் பதிலாக, அவர்களே விடுதலை தேவை, விடுதலை தேவை என்று கேட்கக்கூடிய அளவிற்கு விடுதலையை விரிவும், பொலிவும் உள்ளதாக ஆக்க வேண்டும் என்ற உறுதிதான் எனக்கு அடுத்தக்கட்டமாக இருக்கிறது (கைதட்டல்).
காலையிலே நாம் ஒரு உறுதி எடுத்துக் கொண்டோம். நாம் சுடரை ஏந்தியிருக்கிறோம். இந்த சுடரை ஏந்தி நாம் ஓடிக்கொண்டேயிருக்க வேண் டும்.
தந்தை பெரியார் அவர்கள் தந்த இந்த அறிவாயுதத்தை மிகச் சிறப்பாக நாம் கொண்டு செலுத்த வேண்டும். இதற்காக உங்களுக்கெல்லாம் நன்றி சொன்னதைவிட முக்கியமாக உங் களையும் தாண்டி நன்றி சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
அம்மையார் அரசுக்கு நன்றி...!
யோசனை பண்ணிப் பாருங்கள். யாருக்கு நன்றி என்றால் தமிழக அரசுக்கு நன்றி (கைதட்டல்). குறிப்பாக அம்மையார் ஜெயலலிதா அரசுக்கு நன்றி (கைதட்டல்).
ஏனென்றால் அவர்கள் விடுதலை ஏட்டை நூலகத்திற்கு நிறுத்தியிருக்கா விட்டால் நமக்கு இப்படி ஒரு உத்வேகம் வந்திருக்குமா என்று நினைக்கின்றோம்.
திராவிடர் கழகம் என்பது அதனுடைய கொள்கைகள் என்பது, அதனுடைய பணிகள் என்பது அடிக்க அடிக்க எழும்பும் பந்து போன்றது (கைதட்டல்). அடக்க அடக்க மேலோங்கிச் செல்லும்.
ஆகவே முதலாவது நன்றியை நாம் ஆரியத்திற்கு-மன்னிக்க வேண்டும் அரசாங்கத்திற்கு (கைதட்டல்). ஆகவே அப்படிப்பட்ட ஒன்றில் இன்றைக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை ஏற் படுத்தியிருக்கின்றார்கள்.
நூறு அகங்களுக்கு
ஒரு நூலகத்திற்கு விடுதலை செல்லாமல் நீங்கள் தடுத்தால் அது நூறு அகங்களுக்குப் போய்ச் சேரும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் மிக சிறப்பான நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்த நிலையிலே நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக் கின்றன.
இரண்டு மாவட்டமும் சம போட்டி
இரண்டு மாவட்டங்களில் என்ன முடிவு பண்ணினார்கள்? என்ன சொன் னார்கள் என்பது எனக்கு விளங்க வில்லை. இரண்டு மாவட்டங்களும் சம போட்டியாக வந்தார்கள் என்று சொன்னார்கள்.
தஞ்சை மாவட்டம் கூட வந்தது என்று சொன்னார்கள். திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் விடவில்லை. இல்லை, இல்லை நாங்களும் கூட வருவோம் என்று சொன்னார்.
எழிலரசன் விடவில்லை என்று சொன்னவுடனே அவருடைய வாழ் விணையர் அகிலா எழிலரசன் அவர்கள் எப்பொழுதும் என்னிடம் உரிமை எடுத்துக் கொண்டு பேசக் கூடிய பெண். அங்கிள் அவர் செய்யவில்லை. நான் தான் எல்லா வற்றையும் செய்திருக்கிறேன் என்று சொன்னார் (பலத்த கைதட்டல் - சிரிப்பு). அதை முதலில் சொல்லுங்கள் என்று சொன்னார்.
இந்தப் போட்டி மாவட்டங்களுக் கிடையே வந்தால் நன்றாக இருக்கும் (கைதட்டல்). மனைகளுக்குள்ளேயே வந்துவிட்டது. நமது குடும்பங்கள் எவ்வளவு உணர்ச்சி பூர்வமாக, கொள்கையில் உயர்ந்து கொண்டி ருக்கின்றன இதுதான் ரகசியம் (கைதட்டல்).
கொள்கைச் சண்டை வரலாம்
அவர்களுக்குள் சண்டை வந்தால் கூட கட்சி சண்டை வரவேண்டும். கொள்கைச் சண்டை வரவேண்டுமே தவிர வேறு சண்டை வரக்கூடாது (கைதட்டல்). அந்த மாதிரி அய்யா அவர்கள் நம்மை தயாரித்திருக் கின்றார். இந்த இயக்கத்திற்கு வேர்கள் மிக முக்கியம். ஆகவே அந்த வகை யிலே நாம் நம்முடைய வேர்களை பலப்படுத்த வேண்டும்.
வெளிப்படையான எதிரிகள்
நமது இனத்தினுடைய வேர் என்ன? காலையிலே நீங்கள் கவனித்திருப் பீர்கள். கடுமையாக இந்தக் கருத்தை தோற்றுவித்து, உழைத்து தொடர்ந்து அற்புதமாக விடுதலையிலே ஒற்றைப் பத்தியிலே ஆரம்பித்து மின்சார வேகத்திலேயிருந்து எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கின்ற நம் முடைய கவிஞர் அவர்கள் மிகச் சிறப் பான வகையிலே ஒரு கருத்தைச் சொன்னார்.
நம் எதிரிகள் வெளிப்படையான வர்கள். எதிரிகளுக்கு நாம் பதில் சொல்லுகின்றோம். எதிரிகள் புரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் நம் முடைய விடுதலைக்குப் பல கட மைகள் இருக்கின்றன. அதிலே  மிக முக்கியமான கடமை எது என்று சொன்னால் தமிழர்கள் என்ற பெயராலே திராவிடர்களாகிய நாம் வஞ்சிக்கப்படுகிறோம். ஏமாற்றப்படு கிறோம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திராவிடர் என்று சொல்லுவது
நாம் தமிழர், திராவிடர் என்று சொல்லுவது வெறும் மொழி அடிப் படையிலே அல்ல. ஒரு பண்பாட்டு அடிப்படையிலே திராவிடர் என்று சொல்வதிருக்கின்றதேஅது பண்பாட்டு அடிப்படையில் சொல்லு கின்றோம். நான் நிறைய சொல்ல வேண்டும் என்று தயார் செய்து வைத்திருந்தேன். நேரத்தின் நெருக் கடியிலே இருக்கின்றோம். பரவா யில்லை.
தன்மதிப்பு இயக்கம்
1940 குடிஅரசு ஏட்டிலே அய்யா அவர்கள் எழுதினார். தன் மதிப்பு இயக்கம் இனி மறையாது என்று. இந்த நேரத்திலே கழக குடும்பத்த வர்களுக்கு, தோழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
குடிஅரசு ஏடு இருக்கிறதே எது இருந்தாலும், இல்லையானாலும் வைதீகனுக்கு பஞ்சாங்கம் என்பதை விட மிக முக்கியம்.
இல்லத்தில் எல்லாம் குடிஅரசு தொகுப்புகள்
இயக்க வரலாற்றை இளைஞர் களுக்கும், இனி வரக்கூடிய தலை முறையினருக்கும் சொல்லிக் கொடுத்து நாம் பக்குவமாக வேண்டுமானால் அவசியம். குடிஅரசு தொகுப்புகள் கட்டாயம் ஒவ்வொருவருடைய இல்லத்திலும் இருக்க வேண்டும். நான் பெரியாரின் மாணவன். வாழ்நாள் மாணவன். பெரியாரோடு என்னை ஒப்பிட்டுப் பேசுவதை நான் என்றைக்கும்ஏற்றுக்கொள்ள மாட்டேன். தோழர்கள் மன்னிக்க வேண்டும்.
பெரியார்அவர்களுடைய குடிஅரசை நான் தயாரிக்கின்ற நேரத்திலே - பதிப்பிக்கின்ற நேரத்திலே அதைப் பார்க்கும்பொழுது படிக்கும் பொழுது எவ்வளவு செய்திகள்.  எவ்வளவு பெரிய போராட்டங்கள். எவ்வளவு பெரிய சூறாவளிகள். எவ்வளவு பெரிய கருத்து வீச்சுக்கள்.
அய்யா ஆச்சரியப்பட்டார்
ஒரு முறை அய்யா அவர்களே ஆச்சரியப்பட்டு உரையாடலில் சொன்னார். தனியாக பேசிக் கொண் டிருக்கின்ற பொழுது சொன்னார். குடிஅரசில் வந்த கட்டுரையை எடுத்து விடுதலையில் போடுகின்றோம். அய்யா அவர்கள் இருக்கும் பொழுதே அப்படி எடுத்துப் போடுகின்ற பழக்கம் உண்டு. நான் விடுதலையில் எடுத்துப் போட்டேன். அய்யா அவர்கள் அதைப் படித்துவிட்டு சொன்னார்.
என்னை அழைத்து இதை எங்கிருந்து எடுத்த என்று கேட்டார். அய்யா குடிஅரசில் நீங்கள் எழுதியது இந்த தேதியில் வெளிவந்திருக்கிறது என்று சொன்னோம். பழைய குடிஅரசைப் புரட்டிக் கொண்டி ருந்தபொழுது இந்த கருத்து இருந்தது என்று சொன்னோம்.
அய்யாவின் அடக்கம்
அய்யா அவர்களுடைய அடக் கத்தைப் பார்க்க வேண்டும். அய்யா அவர்களே ஒரு அறிவுத் தேக்கம் என்று புரட்சிக் கவிஞர் சொன்னார். தங்கத் தேரில் அறிவின் தேக்கம் அதோ பார் அவர்தான் பெரியார் என்று சொன்னார்.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் சொல்லும் பொழுது ஒரு நிமிடம் இடைவெளிவிட்டு விட்டுச் சொன்னார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இதே பெரியார் திடலில் கட்டிலில் உட்கார்ந்து கொண்டுதான் சொன்னார். என் னப்பா இவ்வளவு கடுமையாக, இவ்வளவு தீவிரமாக, இவ்வளவு செம் மையாக எழுதியிருக்கிறேன். இப் பொழுதெல்லாம் அப்படி என்னால் செய்ய முடியவில்லையே என்று சொன்னார். அது அவருடைய தன்ன டக்கம் மட்டுமல்ல அப்பொழுதுள்ள சூழ்நிலையில் சொன்னார்.
பல வகையான கருத்துக்களைப் பல நேரங்களில் சொன்னார். அப்படிப் பட்ட நிலையிலே சொன்னார். தன் மதிப்பு இயக்கம் இனி மறையாது என்று 1940இல் அய்யா அவர்கள் எழுதினார்.
அய்யா அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை
திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் 1944இல். ஆனால் 1940லேயே தந்தை பெரியார் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தொலைநோக்கு இருந் தது பாருங்கள்.
எந்த விசயத்தையும் ஸ்பான்டேனியசாக, கடைசி நேரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக அறிவிக்கிறார் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.
பெரியார் தந்த புத்தி மிக முக்கியமானது. ஆழமாக பல முறை சிந்தித்தால் ஒரு முறை அது வெளி வரும். திடீர் என்று வெடித்துக் கிளம்பிவிட்டது என்று யாராவது நினைத்தால் நாம் அய்யா அவர் களைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் ஆகும்.
நம்முடைய அறிவு வளர, வளர நம்முடைய அறிவு பக்குவம் பெறப் பெற நம்முடைய முதிர்ச்சி பெருகப் பெருக நாம் பெரியாரைப் புரிந்து கொள்கிறோம். இன்னமும் நாம் அய்யா அவர்களைப் புரிந்து கொண் டோம் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க முடியுமா என்றால் நான் உட்பட வரமாட்டேன்.
இன்னும் நாம் படிக்க வேண்டியது புரிந்து கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது. அதற்கு விடுதலை மிகப் பெரியதொரு ஆயுதம்.
மறைமுகமாக எதுவும் கிடையாது
அய்யா சொல்லுகிறார். நான் மாநாடுகள் எல்லாம் கூட்டி பல பணிகள், பல காரியங்களை செய் கிறேன். ஆனால் நான் மறைமுகமாக எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டேன்.
எனக்கு சக்தி கிடையாது. மறை வாக இருந்து காரியம் செய்வதற்கு சில சக்தியும் சில சௌகரியமும் வேண்டும். அந்த சக்தியும், சௌகரியமும் எனக்கு இல்லாததாலேயே. நான் என் வாழ் நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீரவேண்டியிருக்கிறது தலைவர் என்று அய்யா அவர்கள் சொல்லவில்லை. பெரியாருடைய அடக்கம் மட்டுமல்ல அவருக்கு எவ்வளவு ஆழமான கருத்து இருந்தது என்பதையும் சிந்திக்க வேண்டும். தண்டிக்க வேண்டியவனாக மேலும் சொல்லுகிறார். எண்ணங் களை வெளிப்படுத்தி தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்க வேண்டிய வனாகவும் இருக்கிறது.
சில நேரங்களில் இந்தப் பணியை செய்யும்பொழுது சிலரை தண்டிக்க வேண்டும்.
எனக்கு கோபத்தினால் அல்ல. வெறுப்பினால் அல்ல. கட்டுப் பாடு கருதி என்று சொல்லிவிட்டுச் சொல்லுகின்றார்.
-தொடரும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...