Saturday, December 31, 2011

கோவணம்!


கேள்வி: கர்மம் (யாகம்) செய்யும்போது மார்பில் குறுக்காக ஒரு வஸ்தி ரத்தைக் கட்டிக் கொள்வது சம்பிரதாயம் என்றும், பின்பு அது சில அசௌகரியங் களைக் கருதி நூலாகப் போட்டுக் கொண்டனர் என்றும், பூணூல் குறித்த வரலாறாக ஒரு நூலில் படித்தேன். இது சரியா?

பதில்: பூஜைகள் செய்யும் போது, முகத்தில் வியர்வை வழிந்தால், அது கண்களில் விழாமல் தடுத்து உறிஞ்சி விடுவதற் காக, நெற்றியில் பூசப்பட்ட சாம்பல்தான், பிற்காலத்தில் விபூதி என்று ஆகிவிட்டது

- இப்படி நான் ஒரு கயிறு திரித்து, விபூதிக்கு ஒரு டுபாக்கூர் பகுத்தறிவு விளக்கம் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படி யிருக்கிறது, நீங்கள் கூறியிருப்பது.

(துக்ளக் - 28.12.2011)

எப்பொழுதுமே சோ ராமசாமியின் தர்க்கம் என்பது இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்வி என்ன? பதிலென்ன? கேள் வியில் தவறு இருந்தால்.. அதனைச் சுட்டிக்காட்டி, இதுதான் உண்மை விவரம் என்று கூற வேண்டியது தானே? அப்படி சொல்ல வக்கில்லாமல் வீணாகப் பகுத்தறிவுவாதிகளைச் சீண்டு வானேன்?

பகுத்தறிவுவாதிகளைச் சீண்டுவது ஒருபுறம் இருக்கட்டும்.

இவர்களின் இந்து மத அதிகப் பிரசங்கி - அமெ ரிக்கா வரை சென்று முழங்கு முழங்கு என்று முழங்கி வந்தாரே வீரத் துறவி என்ற அடை மொழிக்காரர்.

அந்த விவேகானந்தர் தன் சிஷ்யரிடம் பூணூலைப் பற்றி என்ன சொல்லு கிறார்? இதோ:

சுவாமிஜி மேலும் சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவ னுடைய சோகங்களையும், துன்பங்களையும் கருணை யினால் அழித்து விடுகின் றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்ய னானவன் கையில் சமித்து களை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்.

குருவும் அவ னுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரி யாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங் களைப்  போதிப்பார். அரை யிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக் கம் பின்னாளில் ஏற்பட் டது.

(ஆதாரம்: சுவாமிவிவேகானந்தர் சம்பாஷணைகள்)

இதே சோ ராமசாமி தான் விவேகானந்தர் இல் லத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதை எதிர்த்து சண்டப் பிரசண்டம் செய் தார். அந்த விவேகானந் தர்தான் பூணூல் - என்பது இடுப்புக் கோவணம் என்றுகூறி விட்டார். சோ நாக்கைப் பிடுங்கிக் கொள் வாரா?
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...