Saturday, December 31, 2011

3ஆம் வகுப்பு மாணவன் முதல்வருக்கு கடிதம்


விலைவாசி உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரி 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தை தீக்கதிர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த கடிதம் வருமாறு:
அன்புள்ள முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு,
அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் எழுதிய கடிதம், எங்களைப் போன்று படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று  கூறியதைக் கண்டு எங்களால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. காரணம் 3ஆம் வகுப்பு படிக்கும் எனக்கு மாதம் 25 வீதம் 10 மாதங்கள் சேர்த்து 250 ரூபாய் தருவதாக கூறுகிறார்கள். ஆனால், சமீபத்தில் நீங்கள் உயர்த்திய பால் விலை - 6. இதனால் மாதம் எங்கள் வீட்டில் இருந்து - 180 ரூபாயும், பேருந்து கட்டண உயர்வால் கூலி வேலைசெய்யும் எனது தந்தைக்கு கூடுதலாக 500 ரூபாயும் செலவாகிறது. மேலும், ஏப்ரல் மாதம் முதல் மின் கட்டணம் உயர்த்தப் போவதால் என் தந்தையார் குடும்பத்தை நடத்த சிரமப்படுகிறார் என்பது தெளிவாக எனக்குத் தெரிகிறது. நீங்கள் எனக்குமாதம் 25 ரூபாய் கொடுத்து விட்டு என் தந்தையிடம் இருந்து மாதத்திற்கு 700 ரூபாய்க்கு மேல் நீங்கள் பெற்றுக் கொள்வது நியாயமா?
எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உங்களுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தது இதற்குத்தானா? உடனடியாக விலைகளை குறைத்து எங்கள் குறைகளை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு உண்மையுள்ள,
ஆர்.எம். பிரகதீஷ், 3ஆம் வகுப்பு

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...