Saturday, December 31, 2011

புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்! தி.மு.க. தலைவர் கலைஞர் புத்தாண்டு செய்தி


சென்னை, டிச.31-தி.மு.க. தலைவர் கலை ஞர் விடுத்துள்ள புத் தாண்டு செய்தி வருமாறு:
தமிழக மக்கள் வளம் பெற தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிட அடுக் கடுக்கான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வெற்றி  கண்ட மன நிறைவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த வேளையில் தேனும் பாலும் பெருக் கெடுத்துத் தெருவெங் கும் ஓடும் எனும் எதிர் பார்ப்போடு ஆட்சி மாற் றம் கண்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே பரி சாகத் தந்து விட்டு; பால் விலையை உயர்த்தி; பேருந்துக் கட்ட ணத்தை ஏற்றி; கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற ஏழை, எளிய மக்கள் பயன டைந்த பல்வேறு திட் டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்தி; 13,600 ஏழை மக்கள் நலப் பணியாளர்களின் வாழ் வைச் சீர்குலைத்து; புதிய தலைமைச் செய லகக் கட்டடத்தை இருள் மூழ்கச் செய்து பாவேந்தர்செம் மொழித் தமிழாய்வு நூலகத்தைச் சிதைத்து; அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அழித்திடக் கட்டியம் கூறி, தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் எனப் பழந்தமிழ்ப் புலவர் களின் எண்ணம் நிறை வேற்றிட இயற்றப் பட்டச் சட்டத்தை  தகர்த்து, அறநெறிகளுக் கெல்லாம் அல்லல் இழைத்த 2011ஆம் ஆண்டு மறைகிறது.
சமச்சீர் கல்வித் திட் டம் முடக்கம், மக்கள் நலப் பணியாளர்கள் வேலை நீக்கம், பேரறிஞர் அண்ணா நூலக இடமாற்றம், கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர் களின் சட்டமன்ற உறுப் பினர் அலுவலகத்தைப் பறித்திடும் ஆணை போன்றவை தொடர் பான வழக்குகளில் நீதி மன்றங்கள் விடுத்த கண்டனக் கணைகளே இன்றைய மாநில அர சின் நிருவாகச் சீர்கேடு களை பறைசாற்று கின்றன. இந்நிலையில் ஆட்சியாளர்களின் அடக்குமுறைப் போக்குகள் மாறிட வேண்டும்; ஏழை, எளி யோர் நலம் பெற கழக ஆட்சி தொடங்கிய திட் டங்கள் துலங்கிட வேண் டும்; மின்சாரத் தட்டுப் பாடு நீங்கி, தொழில்வளம் பெருகி, வேலை வாய்ப் புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும்; அண்டை மாநில நட்புற வுகள் சிறந்து; தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்-இன்று தொடங்கும் 2012ஆம் ஆங்கிலப் புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த் துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் தம் புத்தாண்டுச் செய் தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...