வசதி மட்டும் போதுமா நல்வாழ்வுக்கு?
நம் நாட்டில் உள்ளவர்களுக்கும் சரி, வெளிநாடுகளில் வாழுவோராக இருப்பினும் அவர்களுக்கும் சரி, இன்றைய அன்றாட வாழ்வில் மிகவும் படித்தவர்கள், பெரிய பதவியிலிருந்து திடீரென்று வெளியே அனுப்பப்பட்டவர்கள், வசதியான வாழ்க்கை வாழ்ந்து திடீரென நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, தலைகீழாக மாறிய வாழ்க்கை அதிர்ச்சி - இவை காரணமாக அவர்கள் பெரும் மன இறுக்கத்திற்கும், எளிதில் தீராத மன உளைச்சலுக்கும் ஆளாகி அவதியுறுகின்றனர்!
வயதான முதியவர்கள், ஓய்வு பெற்ற நிலையில் முதுமை காரணமாகவோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களை போதிய அளவு முன்பு வருவாய் ஈட்டியபோது மதித்த அளவுக்கு இப்போது மதிக்கவில்லையோ என்ற ஒரு எண்ணத்தின் காரணமாக (இது தவறான அனுமானமாகக்கூட சிற்சில நேரங்களில் இருக்கலாம்) ஒருவகை தாழ்வு மனப்பான்மையைப் பெறுகின்றனர்.
அதனால் அவர்களும் மன இறுக்கும் (னுநயீசநளளடி) நோய்க்கு ஆளாகிவிடும் நிலை ஏற்படுகிறது.
இத்தகையவர்களில் மிகவும் பலவீனமானவர்கள் தற்கொலை எண்ணத்திற்குக்கூட தள்ளப்படும் அவலத்திற்கும் ஆளாகி விடுகின்றனர்.
எனவே, இப்படிப்பட்ட அறிகுறிகள் சிலரிடம் காணும்போதே, குடும்பத்தில் உள்ள பொறுப்புள்ளவர்கள் துணைவரோ, துணைவியோ, பிள்ளைகளோ அவர்களை மனநல மருத்துவர்களிடம் மிகவும் பக்குவமாக எடுத்துச் சொல்லி அழைத்துப் போய் சிகிச்சையைத் துவக்கிடவேண்டும் - தள்ளிப்போடவே கூடாது.
ஆனால், இதில் ஒரு சிக்கல் நம் நாட்டில் உண்டு. மனநல மருத்துவரிடம் (யீளலஉயைவசளைவ - சைக்காட்ரிஸ்ட்) காட்ட அழைத்துச் செல்லுகிறோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் அறிந்தாலோ, மிகுந்த வேதனைக்கு ஆளாகி, ஒத்துழைக்க மறுப்பார்கள்.
இதயம், சிறுநீரகம் மற்ற உடற்பாகங்களில் கோளாறு ஏற்படும்போது - நோய் அறிகுறி என்றாலே ஓடோடி மருத்துவர்களிடம் காண்பிக்க முந்தும் அதே நபர்கள், மனோதத்துவ மருத்துவர்களிடம் போவதற்கு மட்டும் ஏனோ தயங்குகிறார்கள்; வெட்கமும், வேதனையும் அடைகிறார்கள்.
மேலைநாடுகளில் அப்படி இல்லை - மாணவர்கள் உள்பட பலரையும் கண்காணிக்கும் தலைமை ஆசிரியர்கள்கூட, பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்களில் மனோதத்துவ மருத்துவரை ஏற்பாடு செய்து, காண்பித்து அவர்களது நடத்தைகளை ஒழுங்குபடுத்த ஆணையிட்டு, செயல்படுத்தத் தயங்குவதில்லை.
நம் நாட்டிலே அப்படி இல்லை. குடும்பங்களில் நல்ல வசதியானவர்களான வாழ்விணையர்களிடம் கூட, மன அழுத்தம், மன உளைச்சல் அதிகம் ஏற்பட்டு, மிகவும் எல்லை தாண்டி ஒன்று மணவிலக்கு அல்லது தற்கொலை என்ற கொடுமைக்கும் சென்றுவிடும் பேரபாயம் இன்றைய நவீன வாழ்வில் மலிந்துவிட்டது!
கைநிறைய சம்பாதிக்கும் கணவர்தானே பின் என்ன அந்த அம்மாளுக்குக் கவலை? என்று எளிதில் அவர்களை அறிந்தவர்கள் சொல்லி விடுகிறார்கள்; ஆனால், அதுதான் பிரச்சினை ஆகிவிட்டது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
சம்பாதனையை இழந்தபோது திடீரென்று ஏற்படும் சரிவு, வறுமை, கடன் தொல்லை காரணமான மன உளைச்சல், மன அழுத்தம் ஒரு வகை.
சம்பாதனையை இழந்தபோது திடீரென்று ஏற்படும் சரிவு, வறுமை, கடன் தொல்லை காரணமான மன உளைச்சல், மன அழுத்தம் ஒரு வகை.
ஆனால், நாம் மேலே சொன்ன வசதியாக அதிகம் சம்பாதிக்கும் தம்பதிகளிடையே என்ன பிரச்சினை என்றால், கணவன் டாக்டர் அல்லது வக்கீல் அல்லது ஆடிட்டர் அல்லது மிகவும் சுறுசுறுப்பான வாணிபத்தின் அரசர் என்றெல்லாம் ஆகி, வசதியான வீடு - ஆடம்பரப் பங்களா, சொகுசு கார் இப்படி பல அமைந்திருந்தபோதிலும், தனது துணைவர் தன்னிடம் நேரத்தைச் செலவழிக்காமல் எப்போதும் பணம் - வருவாய் என்று அலைந்து, அலைந்து திரிகிறாரே தவிர, வாழ்க்கையில் பணம் சேர்ப்பது எதற்கு இன்பத்தைத் துய்க்கத்தானே, அமைதியும், ஆர்வமும் பொங்கும் வாழ்வு வாழத்தானே என்று புரியாமல், மனிதருக்குக் கருவியான பணத்திற்கு இவர்கள் கருவியாகி விட்டதால் இப்படி ஒரு அவலம்.
எனவே, எதையும் அளவுடன் நுகர, வாழ திட்டமிடுங்கள்; அன்பைப் பொழிந்த வாழ்வும், அருளும், கருணையும் பொங்கும் தொண்டறமும்தான் அதனை மாற்றிட சிறந்த வழியாகும் என்பதை மறவாதீர்!
No comments:
Post a Comment