அண்ணா நூலகத்தை மாற்றுவதா? தலைவர்கள், அமைப்புகள் கண்டனம்!
சென்னை, நவ. 3- தி.மு.க. தலைவர் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆசியாவி லேயே மிகப் பெரிய நூலகமான பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஜெயலலிதா அரசு அகற்றும் முடி வினைத் தமிழகம் தழுவிய அளவில் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வந்து பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபோது, இந்த நூலகத்தைப் பாராட்டிச் சொன்னார். ஆசிய கண்டத்திலேயே சிறந்த நூலகமாக இது அமைந் திருக்கின்றது. முந்தைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆட்சியிலே இது அமைக் கப்பட்டது என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, இந்த நூலகத்தை அங்கேயிருந்து அகற்ற முயற்சிப்பது - அகற்ற முடிவெடுத்திருப்பது தான் தோன்றித்தனமான முடிவாகும். இது ஒரு துக்ளக் தர்பார் என்பதற்கு இதைத் தவிர வேறு எந்த உதாரணமும் சொல்ல முடியாது. இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
சென்னை கோட்டூர் புரத்தில் அமைக்கப்பட் டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விரைவில் மருத்துவமனையாக மாற்றப்படும் என்னும் தமிழக அரசின் அறிவிப்பு, தமிழர்களின் நெஞ்சங் களில் அதிர்ச்சி நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறது.
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாக வும், நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டு அறிவுத் தாகத்தைத் தீர்க்கும் அரங்கமாகவும் எழுந்து நிற்கும் அதனை, எந்த நியாயமான காரணமும் இன்றி இடம் மாற்றுவது ஏற்கத்தக்கதன்று. இடமாற்றம் என்பதுகூட இப்போதைக்குச் சொல் லப்படும் ஒரு சமாதான மாகவே தெரிகிறது.
கலைஞரால் உருவாக்கப்பட்டது என்னும் ஒரே காரணத்திற்காக, அதனை இழுத்து மூடிவிட வேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு இருக்கக் கூடும். ஏற்கனவே கோட்டையில் இருந்து அகற்றப் பட்ட புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்திருந்த செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் எல்லாம் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியவில்லை.
தமிழ் இனத்தை அறிவார்ந்த கல்வித் துறையில் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நூலகம் முடக்கப்படுவது அந்த நோக்கத்தையே சிதைக்கும் முதல் படியாக உள்ளது.
ஒவ்வொரு துறை சார்ந்த கட்டிடத்திற்கும் ஒவ் வொரு விதமான உள் கட்டமைப்பு உள்ளது. திடீரென்று ஒரு மருத்துவமனையைத் தொடர் வண்டி நிலையமா கவோ, ஒரு பள்ளிக்கூடத்தை பேருந்து நிலைய மாகவோ மாற்றிவிட முடியாது. அப்படி மாற்ற முயல்வதால் கட்டிட ஒழுங்கின் மையும், தேவை யற்ற பொருட்செலவுமே ஏற்படும். இவை குறித்தெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், செம்மொழி, கலைஞர் போன்ற பெயர்களே இல்லாமல் ஆக்கி விட வேண்டும் என்னும் நோக்கில் செயல்படுவது ஓர் அரசின் கொடூர முகத்தையே காட்டுகின்றது.
1981ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்தில் மாபெரும் நூலகம் ஒன்று சிங்களர்களால் கொளுத்தப்பட்டது. இதோ தமிழகத்தின் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெய லலிதா அரசால் சிதைக்கப் படுகிறது. இதனைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை வன்மை யாகக் கண்டிப்ப துடன், இச் செயலை எதிர்த்துப் போராடத் தன் மானமுள்ள தமிழர்களையும், அறிவாளர்களையும் பேரவை அறைகூவி அழைக்கின்றது.
இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
குமரி அனந்தன்
மருத்துவமனைக்கு - மருந்து கொடுப்பதற்கு வேறு இடங்கள் தேடலாம் - கிடைக்கும். ஆனால், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அதற் கென்றே கட்டப்பட்டுள் ளது. உடல் ஊனமுற்றவர் களும் அவர்களாகவே சென்று படிக்கின்ற அள விற்கு கட்டி, நூலகத்திற் கென்றே கட்டி முடித்திருக் கின்ற அதுவும் அண்ணாவினுடைய நூற்றாண்டு விழாவினையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்ற அந்த நூலகத்தை அதே நிலையிலே, இன்றும் மேம்படுத்துவதற்கு இன்றைய முதல்வர் சிந்திக்க வேண்டுமே தவிர, அதனை வேறு எதற்கும் பயன்படுத்து வது சரியென்று தோன்றவில்லை. மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் கூறினார்.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
தமிழ்நாட்டில் கலைஞர் செய்த நல்ல செயற்பாடு களை எல்லாம் சீரழித்து, அல்லாத அலங்கோலங் களைச் செய்யும் சர்வாதிகாரக் கடுங்கோல் ஆட்சியாக ஜெயா ஆட்சி உள்ளது.
ஆட்சிக்கு வந்து ஒரு சில திங்களுக்குள் அனைத்துத் துறையிலும் சரிவை ஏற்படுத்தியுள்ள இன்றையத் தமிழக அரசு, கலைஞர் செய்த செயற்கரிய வெற்றிச் சின்னங்களையெல்லாம் அழிக்கும் - அழிவுப் பாதையில் செல்வதைத் தன் மானமிக்க தமிழர் கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆசியாவிலேயே சிறந்த நூலகம் கோட்டூர் புரம் நூலகம், பல லட்சம் நூல்களுக்குமேல் பல் துறை நூல்களும்இடம் பெற்றிருந்த நூலகம், அனைத்து அறிஞர்கள், மாணவர்கள் ஆய்வாளர்களுக்கும் ஒப்பிலாப் பயனளித்த தலைசிறந்த கலைக்கூட நூலகம்.
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நூலகமாகக் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட நூலகம் ஒப்பரிய அறிஞர் அண்ணா நூலகத்தை மூடுவது அறிஞர் அண்ணாவை அவமதிப்ப தாகும்.
செயற்கரிய செய்யும் ஆற்றல் இல்லாத இன்றைய தமிழ் நாட்டின் அரசு இருக்கும் நல்லதையும் கலைஞர் மீது கொண்ட பொறாமைக் காழ்ப்பால் ஒழித்துக் கட்டுவது நீதியா, நியாயமா?
நல்லது செய்ய ஆற்றீர் ஆயினும் அல்லவை செய் யாது ஓம்புமின் என்ற புறநானூற்றுப்புலவன் கூற்றை நினைவுப்படுத் தினாலும், உணருவார்களா?
சமச்சீர் கல்வியை மறுத்தளிப்பது, உலகமே பாராட் டும் சட்ட பேரவைக் கலைக்கோட்டத்தை மூடுவது, தமிழாண்டை நிராகரிப்பது, போன்ற தமிழர் விரோத நடவடிக்கைகளில் இன்றைய அரசு ஈடு படுவது இவ்வரசு நீடிப்பதற்குக் கேடுவிளை விப்ப தாகவே முடியும்.
அறிவுலகத்தாயான அறிஞர் அண்ணா நூல கத்தை மாற்றும் நடவடிக்கைகளைக் கண்டித்து அனைத்துத் துறை அறிஞர் பெருமக்களும், அனைத்துத் தன்மான மிக்க தமிழ் அமைப்புகளும் போராடுவோம்.
உண்மை அற உணர்வை ஜெயா அரசு எண்ணிப் பார்த்து வாக்களித்த தமிழர்களின் நலன் கருதி, அறிஞர் அண்ணா நூல கத்தை மாற்றும் திட்டத் தைக் கைவிட வேண்டும். - இவ்வாறு பெருங் கவிக்கோ வா.மு.சேது ராமன் தெரிவித்துள்ளார்.
மா.செங்குட்டுவன் (தமிழர் எழுத்தாளர் கழகம்)
தமிழ் உணர்வாளர்களுக்கும் தன்மானத் தமிழர்களுக்கும் சவால் விடுத்தது போல பேரறிஞர் அண்ணா பெயரால் கோட்டூரிலுள்ள நூலகத்தை இடமாற்றம் செய்யப் போவதாக அறிவித் திருக்கிறார், தமிழக முதல்வர் ஜெயலலிதா.
பேரறிஞர் அண்ணா பெயரைக் கட்சியின் பெய ரிலும் அண்ணா படத்தை கட்சியின் கொடியிலும் வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது என்றால் இதற்கு என்ன பொருள்?
தலைவர் கலைஞர் மீது கொண்டுள்ள காழ்ப் புணர்ச்சியை அண்ணா மீதுமா காட்டுவது?
அ.தி.மு.க.வுக்கு வாக் களித்து ஆட்சிப் பீடத்தில் ஏற்றி வைத்த தமிழர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த தும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை யும் செயல்பாடுகளையும் கைவிடவில்லை - மாற்ற வில்லை.
1977 இல் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் முந் திய கலைஞர் ஆட்சி செய்தவற்றைக் கைவிட வில்லை - மாற்றவில்லை. 1989-ல் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த தும் முந்தைய எம்.ஜி.ஆர். செய்தவற்றை கை விட வில்லை - மாற்றவில்லை.
ஜெயலலிதா அரசு ஆட்சிக்கு வந்ததும் வராத துமாய் கலைஞர் உருவாக் கிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை பாழடையச் செய்து விட்டார்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனித னையும் கடித்த கதையாக இப்போது ஆசியாவி லேயே பெரிய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹலாரி கிளிண்டன் அவர்களாலேயே வியந்து பாராட் டப் பெற்ற அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திலும் கை வைக்கத் துணிந்து விட்டார்.
``அறிவு ஜீவிகள் எனப்படும் எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் அறிஞர்களும் ஏனைய பொது மக்களும் ஒருங்கிணைந்து ஒரே குரலாகக் கண் டனக் குரல் எழுப்ப வேண்டாமா?
தமிழ் எழுத்தாளர் கழகம் இந்த எதேச்சதி காரப் போக்கை வன்மை யாகக் கண்டிப்பதுடன் தலைவர் கலைஞர் கூறியபடி தன்மானமுள்ள தமிழர்களும் தமிழறிஞர்களும் ஏனைய தமிழ் அமைப்புகளும் இதனை எதிர்த்துப் போராடுவோம்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்
(சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்க நிருவாகி)
ஏற்கனவே செயல் பட்டுக் கொண்டிருக் கின்ற அண்ணா நூற் றாண்டு நூலகத்தில் மருத்துவமனை கொண்டு வருவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. இந்த அரசு எடுத்திருப்பது தவறான முடி வாகும். அதே போல ஏற்கனவே புதிய தலைமைச் செயலகத்தை மாற்றி மருத்துவமனை என்று சொன்னார்கள். அதுவும் சரி - இதுவும் சரி - இவை தவறான முடிவா கும். எங்களுடைய கருத்து இதனை மறு பரி சீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனியப்பன் (கரூர் திருக்குறள் பேரவை)
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமானது, இடமாற்றத்தின் மூலம் முடக்கப்படுகிறது என்ற ஒரு செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. புதியதாக மருத்துவமனை துவங்குவது என்பது, இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு ஒப்பாகும். எனவே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு, நூலகம் இருக்கிற இடத்தி லேயே செயல்படவும், மருத்துவமனை வேறு இடத்தில் விரிவாக்கத் தோடு துவங்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதேபோல் அண்ணா நூலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், புத்தக ஆர்வலர்கள் கூறியதாவது :-
புத்தக ஆர்வலர்கள்
கலைஞர் அவர்கள் செய்த மிகப்பெரிய நல்ல விஷயம் என்னவென்றால், இந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டி நாட்டிற்கு வழங் கியதுதான். இந்த நூலகம் இந்தியாவிலேயே நம்பர் ஒன் என்கிறார்கள்.
அது உண்மைதான். அமெரிக் காவில் இல்லாத புத்தகங்கள்கூட இங்கே இருக் கின்றது என்று அமெரிக்காவில் இருந்து வந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இதைப் போய் ஏன் இந்த அம்மா குழந்தைகள் மருத்துவமனை யாக மாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் எவ்வளவோ இடம் இருக்கிறது. அங் கேயெல்லாம் மாற்றலாம்.
இதை ஏன் மாற்று கிறார்கள்? குழந்தைகள் படிக்க மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை மாற்றாமல், இதற்கு பதில் வேறு எதையாவது ஆல்டர் நேட்டி வாக செய்யலாம். எது எதற்கோ மக்கள் போராட் டம் நடத்து றாங்க. இதுக்கு யாராவது போராட முன் வந்தால் சந்தோஷமாக இருக்கும் என்ற ஆதங்கத்துடன் குடும்பத் தலைவிஒருவர் கூறினார்.
மாணவர்
நான் இந்த நூலகம் தொடங்கிய காலம் முதல் வந்து கொண்டிருக்கி றேன். இந்தப் புத்தகங் களை எல்லாம் வெளியே எங்கேயும் வாங்க முடியாது. பத்தாயிரம், இருபதாயிரம் என்று விலை மதிப்பில் லாத புத்தகங்கள் எல்லாம் இங்கே இருக்கு. ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு பெரிய வரப் பிரசாதமாகும். இங்கே நிறைய பேர் படிக்கிறார் கள் என்றார் முதுகலை படிக்கும் மாணவர் ஒருவர்.
ஓய்வு பெற்ற அதிகாரி
அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் கூறுகையில்,
தமிழகத்தில் இது மாதிரி பார்த்தது கிடை யாது. இந்தக் கட்டடத்தை ஆத்மார்த்தமாகக் கட்டி யிருக்கிறார் கலைஞர். நான் இந்த வயதிலும் இங்கே படிக்க வருவதே இதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இது ஒரு தெய்வம் இருக்கும் இடமாகவும் கோவிலாகவும் இருக்கிறது. புத்தகம் இருக்கும் இடம் கோவில் இருப்பதைப் போன்றதா கும். இங்கே அனைத்து மொழிப் புத்தகங்களும் இருக்கின்றன. அறிவைக் கொடுக்கும் இடமாகும். இந்த நூலகம் தொடர்ந்து இங்கே இருக்க வேண்டும் என்று இந்த அம்மாவைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நூலகத்திற்கு வந்து செல்வோர் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்

No comments:
Post a Comment