சென்னை உயர்நீதிமன்ற தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி குமுறல்
தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்குப் புகார்
புதுடில்லி, நவ. 2- சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற் றிக் கொண்டிருக்கும் தாழ்த்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், தனது சக நீதிபதிகள் ஜாதியின் அடிப்படையில் தன்னை இழிவு படுத்தி, தன்னை அவமானப் படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு முன்பு வரும் வழக்கு களை ஒரு சுதந்திரமான தனிப் பட்ட முறையில், தான் கையா ளுவதே இதன் காரணம் என் றும் அவர் கூறுகிறார்.
இது பற்றி ஒரு விசாரணை வேண்டும் என்று நீதிபதி சி.எஸ். கரண் தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
தன் மீது சக நீதிபதிகள் காட் டும் வெறுப்புக்கு ஜாதிதான் காரணம் என்று அவர் குறிப் பிடாவிட்டாலும், தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணையத்தை அணுகுவது என்ற அவரது முடிவு, ஜாதி பாகுபாட்டு வழக்குகளில் ஒன்றுதான் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதனைப் பார்க் கிறது.
இந்த விஷயத்தைக் கவனிக் கும்படி இந்திய தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பி.எல். பஞ்சா கடிதம் எழுதியுள்ளார் என்று சில தகவல்கள் தெரிவிக் கின்றன.
பஞ்சாவைத் தொடர்பு கொண்டபோது இது பற்றி அவர் விரிவாகப் பேச மறுத்து விட்டார். பாதிக்கப்பட்ட நீதி பதி தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தான் இழி வாக நடத்தப்படுவது பற்றிய அவரது புகார் என்றும் மட்டும் அவர் கூறினார்.
2009 மார்ச் மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில், தான் சேர்ந்தது முதல் மனுக்க ளைக் கையாளும் தனது சுதந் திரமான தனிப்பட்ட வழிமுறை தனது சகநீதிபதிகளை கோபம் கொள்ளச் செய்தது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு எழுதிய தனது கடிதத்தில் நீதிபதி கரண் குறிப்பிட்டுள்ளார். பொது நிகழ்ச் சிகளில் அவர்கள் வேண்டு மென்றே தங்களின் காலணி அணிந்த கால்களை தன்னை நோக்கிக் காட்டினர் என்றும் தனது பெயர்ப் பலகையை நசுக் கியதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நீதிபதிகளின் ஆதரவுடன், வழக்கறிஞர்களும் நீதி மன்ற வளாகத்துக்குள்ளேயே தன் னைக் கேலி செய்து தூண்டி விட முயற்சிக்கின்றனர் என்று கூறிய நீதிபதி கரண், இத்தகைய செயல்களில் அவர்கள் ஈடுபட் டதை மெய்ப்பிக்க அவர்களது தொலைபேசி அழைப்பு ஆவ ணங்கள் பற்றி விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார்.
நீதிபதி கரணைத் தொடர்பு கொண்டபோது, தான் வேறு பாடு காட்டப்பட்டு துன்புறுத் தப்படுவதை மெய்ப்பிக்க, இது பற்றி ஒரு பொது விசாரணைக் கும், தான் தயாராக இருப்பதாக அவர் கூறினார். அவர் அளித்த சில தீர்ப்புகள் பற்றி அவரைச் சுற்றி ஒரு புயல் எழுந்துள்ள நிலையில், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று மெய்ப்பிக்கவும் அந்த விசாரணையை, தான் பயன் படுத்திக் கொள்ளப்போவதா கக் கூறினார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பி யுள்ள மனுவில் அவர் கூறியுள்ள தாவது:
ஒரு திருமண விழாவில் எனக்குப் பக்கத்தில் அமர்ந் திருந்த எனது சக நீதிபதி ஒருவர் வேண்டுமென்றே என் மீது அவரது ஷூ அணிந்த கால் படும்படி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார். அடுத்த முறை, குடியரசு தின விழாவில் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்த அதே நீதிபதி எனது நாற் காலியின் பிடியில் கட்டப்பட் டிருந்த எனது பெயர் எழுதப் பட்ட சீட்டை எடுத்து அவரது வலது கால் ஷூவின் அடியில் வைத்து மிதித்து கசக்கினார்.
தன்னை உணர்ச்சி வசப்பட வைக்கும் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட முயற்சிக ளைப் பற்றி குறிப்பிட்ட அவர், மற்றொரு பொது நிகழ்ச்சியில் என் பின்புறத்தில் அமர்ந்திருந்த சக நீதிபதி ஒருவர் என்னைக் கோபப்படுத்த எனது நாற்கா லியைப் பிடித்து ஆட்டிக் கொண்டேயிருந்தார் என்று கூறினார்.
வழக்குகள் பற்றி ஒரு குழு வாகச் சேர்ந்து கலந்து பேசுவ தற்கு, தான் மறுத்ததை சில நீதி பதிகள் விரும்பவில்லை என் றும் எழுதப்படாத அவர்களின் வழக்கத்தை ஒட்டி நானும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர் என்றும் கூறிய நீதிபதி கரண், அவர்களின் நோக்கமே வழக் குகளில் தனது பங்களிப்பை அடிமை நிலைக்குத் தள்ள வேண்டும் என்பதுதான் என் றும் நீதிமன்ற நடவடிக்கை களில் அவர்கள் எதிர்பார்த்த படி தான் நடந்து கொள்ள வில்லை என்பதாலேயே, தான் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறினார். தனது சொந்த மாவட் டமான கடலூரில் நடந்த நிகழ்ச் சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் தனக்கு மறுக்கப் பட்டதுடன், தேசிய நீதி அக டமி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் தனக்கு மறுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சில நீதிபதிகளால் ஊக்க மும், பணமும் அளிக்கப் பட்ட 70-க்கும் மேற்பட்ட வழக்குரை ஞர்கள் நீதிமன்ற நடவடிக்கை நேரத்தின்போது அய்ந்தாவது மாடியில் கூடி மது அருந்திய போதை நிலையில் தன்னை கோபம் அடையச் செய்ய முயற் சித்தனர் என்றும், அவர்களில் சிலர் இதே நோக்கத்துடன் தனது அறைக்கு வெளியே முற் றத்தில் கூடுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளது கடுமையான குற்றச்சாட்டாகும்.
தன்னைப் பற்றி எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் புரளி களை மறுத்த நீதிபதி கரண், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் என்னை அவர்கள் கேலிக்கு இலக்காக்க முடியாது. கடின உழைப்பு மற்றும் தகுதியின் காரணமாக நான் இந்த நிலைக்கு உயர்ந்துள் ளேன். ஒரு பொது ஊழியனாக, பொது மக்களுக்கு விளக்கம் சொல்ல நான் கடமைப்பட்ட வன். ஒரு பொது விசாரணைக்கு நான் தயார் என்று கூறினார்.
No comments:
Post a Comment