கல்கியிலும்கூட இப்படியா?
பலரும் இப்போது வீட்டில் வாஸ்து மீன் வளர்க் கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன...? - எம். பலராமன், பாலக்காடு
வாஸ்து மீன் ஒன்றை வாங்கி தொட்டியில் வைத்து வளர்த்தால் எல்லாமே நல்ல படியாய் நடக்கும், வளம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒரு நாளிதழில் வந்த செய்தி இது. 100 வாஸ்து மீன்களை சென்னைக்குக் கடத்தி வந்த வாலிபர் போலீஸில் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்! ஒருவனிடம் ஒரு வாஸ்துமீன் இருந்தாலே எல்லாம் நல்ல படியாய் நடக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் போலீஸில் பிடிபட்டவரிடம் 100 வாஸ்து மீன்கள் இருந்தும் பயன் இல்லாமல் போனது. அந்த 100 மீன்களில் ஒன்றுகூட அவனைக் காப்பாற்றவில்லயே! எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மன நிலையில் உள்ள மக்கள் இருக்கும் வரை, வாஸ்து மீன் வியாபாரி களுக்கும், ராசிக்கல் விற்கிற பேர்வழிகளுக்கும் கொண்டாட்டம்தான்!
- (கல்கி 6.11.2011 பக்கம் 74,75)
சபாஷ் கல்கியில்கூட இப்படிப்பட்ட பகுத்தறிவு ஞானோதயம் கண்ணைப் பறிக்கிறதே - என்று நினைக்கும்போது புல்லரித்துப் போனோம்!
இதனையும் படித்து விட்டு அதே கல்கியில் பக்கம் 22,23 ஆகியவற்றைப் புரட்டினால் நடக்கு மென்பார் நடக்கும்! வேதா கோபாலனனின் ராசி பலன் சும்மா ஜமாய்க்கிறதே!
விற்பனையாவதற்குப் பெட்டிக் கடைகளில் வாழைப் பழம் ஒரு பக்கமும், சிகரெட் இன்னொரு புறமும் விற்கப்படுவதில்லையா? எல்லாம் பிசினஸ் தானோ!
No comments:
Post a Comment