பொருளாதார வளர்ச்சி
சமூகப் பிரச்சினை பற்றிய கேள் விக்கு விடை கண்ட பின்னர், பொரு ளாதார வளர்ச்சி என்னும் கேள்வி கட்டாயமாக எழத்தான் செய்யும். நாட்டின் இயற்கை வளங்களின் முன்னேற்றத்திற்கு நாம் மிகப் பழமை வாய்ந்த வழிமுறைகளையே நம்பியிருக்கிறோம்.
இந்த வழிமுறைகளில் முன்னேற்றம் காணப்பட்டு, இன்று உள்ள நவீன முறைகள் பின்பற்றப்படவேண்டும். தேவையானால் பழைய வழிமுறை களைக் கைவிடவும் வேண்டும். மற்ற இடங்களைப் போலவே, நமது மாகா ணத்திலும், மக்களிடையே சுயசார்பு மற்றும் தன்னம்பிக்கை உணர்வைப் பெருக்க பயனுள்ள எந்த ஒரு முயற் சியும் மேற்கொள்ளப்படவில்லை. தொழில், வர்த்தகத் துறை வளர்ச்சி, வாழ்க்கையில் வெற்றி பெறத் தேவையான மற்ற நற்பண்புகளின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்பது ஒரு வரலாற்று உண்மையாகும்.
ஆனால், இந்த மாகாணத்தில் தொழில் களை வளர்க்க எந்த பெரிய ஆக்க பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. அதன் குடிசைத் தொழில் என்று அறியப்பட்டுள்ள சிறு தொழில்கள் அனைத்தும் கடுமையான போட்டியின் காரணமாக நசித்துப் போயின. பொதுவாகக் கூறப்படும் ஒரு புகார் என்ன வென்றால், இந்த மாகாணத்தில் தொழில்களில் தேவை யான அளவில் முதலீடுகள் செய்யப் படவில்லை என்பதும், மாகாணத்தின் தொழில்துறையை மேம்படுத்த அரசு எத்தகைய நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என்பதும்தான். முதலீடுகள் செய்யப்படவில்லை என்ற புகாருக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதே எனது கருத்தாகும்.
அனைத் தையும் உடனடியாகத் தொழில்களில் முதலீடு செய்வதற்கான கோடிக் கணக்கான பணமோ, சேர்த்து வைக்கப் பட்ட செல்வக் குவியலோ நம்மிடம் இல் லாமல் போகலாம்; ஆனாலும் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தத் தேவையான, போதுமான முதலீடு நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. அதை நம்பி நாம் செயல்படத் துவங்கினால், அரசும் நமது முயற்சிகளுக்குத் துணையாயிருந்து, அவர்களால் முடிந்த அளவில் மகிழ்ச்சி யுடன் உதவி செய்வார்கள் என்று நாம் நம்பலாம்.
இந்த மாகாணத்தைப் போன்ற அரசைப் பெற்றுள்ள பம்பாய் மாகாணம் மட்டும் தொழில் துறையில் பெருமளவு முன்னேறி வருவது எவ்வாறு என்று உங்களால் கூறமுடியுமா? பம்பாயில் முதலில் தொழில்கள் துவங்கப்படும்போது, அவர்களிடம் கோடிக் கணக்கில் பணம் இருக்கவில்லை. அவர்களிடம் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில், வேண்டு மானால் நூறாயிரக் கணக்கில் மட்டும் பணம் இருந்திருக்கலாம்.
ஆனால், கூட்டுறவு முயற்சியில், பயிற்சி பெற்ற தொழில் திறமையால், அறிவார்ந்த முதலீடுகளால், தொழில் துறையில் அந்த மாகாணம் பெரும் வளர்ச்சி பெற்றது. அதன் இந்தத் தொழில் துறை முன்னேற்றத்தை மற்ற பகுதி மக்களைப் பொறாமை கொள்ளச் செய்துள்ளது. நமது மாகாணத்தில் உள்ள நிலச் சுவான் தார்களில், வழக்குறைஞர்களில், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளில், பொதுவாகக் கல்வி அறிவு பெற்ற மக்களிடையே பெரும் செல்வம் படைத்த வர்கள் உள்ளனர் என்ற போதிலும் அவர்கள் தங்களிடம் உள்ள உபரி செல்வத்தையோ, சேமிப்பையோ பெரிய அளவில் தொழில் துறைகளில் முதலீடு செய்யவில்லை.
நம்மிடையே நாட்டுக் கோட்டை செட்டியார் போன்ற பெருந் தனவந்தர்களும் உள்ளனர். கணக்கிட முடியாத அவர்களின் செல்வத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள்? கோயில்கள் கட்டவும், நல்ல திடமான உடல் கொண்ட ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த (பார்ப்பன) சோம்பேறிகளுக்கு உணவளிக்க தர்ம சத்திரங்களைக் கட்டவும், அது போன்ற ஏதும் பயனற்ற செயல்களிலும் தங்கள் செல்வத்தைச் செலவிட்டனர்.
சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொள்ளும் வழக்கத்தை மறுபடியும் புதுப்பிக்க உதவுவதற்காக கல்லூரி களிலும், பள்ளிகளிலும், படித்த பிரிவு மக்களின் (பார்ப்பனர்களின்) நலன் களையே முக்கிய நோக்கமாகக் கொண்ட அறக்கட்டளைகளை ஏற்படுத்துவதன் மூலம் பேரும் புகழும் பெற எண்ணிய வர்களும் நம்மில் இருந்தனர்.
ஆனால், பெரும் அளவினரான, அலட்சியப்படுத் தப்பட்டு ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று அவர்களில் பலரும் சிந்திக்கவே இல்லை என்பது வருந்தத் தக்கதாகும். நமது மாகாணத் தின் பொருளாதார வளர்ச்சிக்கு, நவீன தொழில் உணர்வே தேவை என்பதே எனது முடிவாகும். அது இல் லாமல் எந்த ஒரு நாடும் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தைப் பெறவே இயலாது.
நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைந்தால், அனைத் துத் தொழில்களுக்கும் அடிப்படையான விவசாயத் தொழிலும் அந்த அளவுக்கு வளர்ச்சி அடையும். இந்த விஷயத்தில் தங்களின் உண்மையான கவனத்தை செலுத்தவேண்டும் என்பதே நான் உங்களுக்கு இன்று விடுக்கும் வேண்டு கோளாகும்.
இந்த நாட்டில் பொருள் களை உற்பத்தி செய்யும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நாம். எனவே, நமது சொந்த நலன்களைக் கருதியே, இந்த மாகாணத்தின் பொருளாதார ஆதாரங் களையும், பொருள் செல்வத்தையும் வளப்படுத்தும் அனைத்து முயற்சி களையும், ஒன்றுவிடாமல், நாம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன் (தொடரும்
No comments:
Post a Comment