Thursday, November 3, 2011

சொல்லாததைச் சொல்லும் கிலி(ளி)ப் பிள்ளை!


சொல்லாததைச் சொல்லும் கிலி(ளி)ப் பிள்ளை!


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி:

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வரும் நிலையில், அதை விசாரிக்கும் முழு பொறுப்பும் நீதி மன்றங்களுடையதே தவிர, ஏடுகள், நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சிகள் பணி அல்ல.

டவுட் தனபாலு:

விசாரிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு இல்லாம இருக்கலாம் . . ஆனா ஊழலை வெளிக் கொண்டு வரும் பொறுப்பு இருக்கில்லையா- ஊடகங்கள் மட்டும் வாய் மூடி மவுனமாக இருந்திருந்தா, இந்நேரம் அந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயையும் ஏப்பம் விட்டிருப் பீங்கல்ல...!

தினமலர்,  3-11-2011

திராவிடர் கழகத் தலைவர் எந்தக் காரணத் துக்காக அறிக்கை வெளியிட்டார்  என்பதை மறைத்துவிட்டு தன் மனம் போன போக்கில் தகிடு தத்தமாக இனமலர் எழுதுவது ஆச்சரியமானதல்ல.

உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி பிணை தொடர்பாக நீதிபதிகள் சொல்லாதவற்றை சொன்ன தாக ஏடுகள், ஊடகங்கள் வெளியிட்டுள்ளதை சம்பந்தப்பட்ட நீதிபதிகளே கூறியதை மய்யப் படுத்தித்தான் திராவிடர் கழகத் தலைவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஊடகங்கள், ஊழல்களை வெளியே கொண்டு வருவதைப் பற்றிக் கூறாத நிலையில், பந்தை அடிக்க முடியாத நிலையில் காலை அடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது தினமலர். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் என்பார்கள். இந்தக் கிலிப் பிள்ளையோ சொல்லாததை  சொல்லுகிறதே! அந்தோ பரிதாபம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...