Thursday, November 3, 2011

சபாஷ், நீதிபதி மார்கண்டேய கட்ஜு!


சபாஷ், நீதிபதி மார்கண்டேய கட்ஜு!


பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கக் கூடிய, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு சி.என்.என். அய்.பி.என். தொலைக்காட்சியில் கரன்தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியிட்ட கருத்துகள் மிகவும் முற்போக்கானவை. நிதர்சனமானவை - மிகவும் வரவேற்கத்தக்கவையுமாகும்.

கேள்வி: ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் பற்றி மக்களுக்குப் போதையேற்ற ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறீர்களா? நீதிபதி பதில்: ஆமாம், கிரிக்கெட் நமது மக்களுக்கு ஒரு போதைப் பொருள் - ஓபியம் மாதிரி! ரோமாபுரி பேரரசன் சொல்வானாம். மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை யென்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்! என்று. இந்தியாவில் மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்க முடியாவிட்டால், அவர்களைக் கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய அலைவரிசைகளில் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுதான் ஒரே பிரச்சினை மாதிரி என்று கூறியுள்ளார் நீதியரசர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் - அதுவும் பிரஸ்கவுன்சில் தலைவர் என்கிற மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் நிலையில், மக்கள்மீது கொண்ட மகத்தான மதிப்பீட்டால் இப்படி புகுந்து விளாசி இருப்பது சாதாரண மானதல்ல. இப்படியும் பெரிய மனிதர்கள், சமூகத்தின் மீது மிகப் பெரிய அளவில் அக் கறையும், கவலையும் கொண்ட அறிவு ஜீவிகள் இருப்பது கண்டு இறும்பூதெய்துகிறோம்.

உண்மையான திறமைக்கு சீட்டுக் கிழித்து விட்டு, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் கொண்ட உப்பு சப்பற்ற ஒரு விளையாட்டை விளம்பரப் போதையூட்டி, உழைக்கும் மக்கள் சக்தியை வெட்டிப் பொழுது போக்கிற்கு இரையாக்கும் கொடுமை  நாட்டில் அன்றாடம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.

இந்திய மண்ணுக்குரிய ஹாக்கி சவலைப் பிள்ளையாக ஒதுக்கப்பட்டு விட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கோடியில் புழங்கிக் கொண்டுள்ள நிலையில், ஹாக்கி வீரர்கள் கூலி வேலைக்காரர்களாக நடத்தப்படும் கொடுமை! 

உண்மையான திறமை என்றால் அது தமிழர்களின் வீர விளையாட்டான சடுகுடு என்கிற கபடி தான். அதை வெளி உலக வெளிச்சத்துக்குக் கொண்டு வராமல் பார்த்துக் கொண்டதில் இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும், ஊடகங்களுக்கும் முக்கியப் பொறுப்புண்டு. பல தடைகளையும் தாண்டி இவ்வீர விளையாட்டு உலக அரங்கில் தலை நீட்டியுள்ளது - மன நிறைவையளிக்கிறது.

சீனாவில் தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்தனர் - அதுவும் 5 நாள் விளையாட்டு! சீன அரசாங்கம் கிரிக்கெட்டைத் தடை செய்து நல்ல காரியத்தைச் செய்து விட்டது!

கிரிக்கெட் என்றால் சூதாட்டம் என்று பொருள் படும்படி அன்றாடச் செய்திகள் வந்து கொண் டுள்ளன. வறுமைக்கோட்டைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதற்கு ஆயிரம், அய்ந்நூறு என்று டிக்கெட் விற்பனை! கடன் வாங்கியாவது கிரிக்கெட் பார்க்கும் ஒரு பரிதாப நிலையை ஏற்படுத்தி விட்டதே!

கிரிக்கெட் சங்கத்திற்குத் தலைவராக பெரும் பெரும் தொழில் அதிபர்கள் பெரும் பொருள் செலவு செய்து எப்படியாவது அந்தப் பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் பதவி என்பதைவிட சரத்பவார் கிரிக்கெட் போர்டு தலைவராகவே பெரும் ஆர்வம் காட்டும் நிலை! பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் புழங்கும்  இடமாக அது உள்ளது. அதிலும் ஏகப்பட்ட ஊழல்கள் - வழக்குகள் - நீதிமன்றங்கள் என்ற நிலைப்பாடு.

சீனாவைப் போல இந்தியாவிலும் கிரிக்கெட் தடை செய்யப்படுமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...