Thursday, November 3, 2011

பிரெஞ்சுப் புரட்சியின்போது பாசில்லி சிறை தகர்க்கப்பட்டதில் எத்தனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர் ?


பிரெஞ்சுப் புரட்சியின்போது பாசில்லி சிறை தகர்க்கப்பட்டதில் எத்தனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர் ?


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:

பிரெஞ்சுப் புரட்சியின்போது பாசில்லி சிறை தகர்க்கப்பட்டதில்  எத்தனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர் ?
வரலாற்றுப் புகழ் பெற்ற பாசில்லி சிறைத் தகர்ப்பில் விடுவிக்கப்பட்ட கைதிககளின் எண்ணிக்கை வெறும் ஏழு மட்டுமே.
பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் ஜூலை 14 பாசில்லி தினமாகக் கொண் டாடப்படுகிறது. அன்று விடுமுறை நாள். அமெரிக்காவில் ஜூலை 4 எவ்வாறு கொண்டாடப்படுகிறதோ அதே போன்று பாசில்லி தினமும் பிரான்சில் ஒரு புகழ்மிக்க தேசியநிகழ்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது.
உணர்ச்சியைத் தூண்டும் ஓவியங்களைப் பார்த்து, நூற்றுக் கணக்கான புரட்சியாளர்கள் வீதிகளில் மூவண்ணக் கொடிகளை ஏந்திக் கொண்டு வெள்ளம் போல் திரண்டனர் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.  உண்மையில், பாசில்லி சிறை முற்றுகையிடப்பட்டபோது, வெறும் ஏழு கைதிகள்தான் அதில் அடைக்கப் பட்டிருந்தனர்.
பாசில்லி சிறை 1789 ஜூலை 14 அன்று தகர்க்கப்பட்டவுடன், சங்கிலிகளால் கட்டப்பட்ட கைதிகள் எலும்புக் கூடுகளுக்கிடையே கிடந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் பொறிக்கப்பட்ட படங்களின் விற்பனை பாரிஸ் வீதிகளில் தொடங்கியது. அப்போதிருந்து பாசில்லி சிறையில் அத்தகைய சூழல்தான் நிலவியது என்ற கருத்தே பொதுவாக மக்களிடையே நிலவி வந்தது.
13 ஆம் நூற்றாண்டின் கோட்டையான பாசில் பல நூற்றாண்டு காலமாக சிறையாக இருந்து வந்தது. சதித் திட்டம் தீட்டியது,  துரோகச் செயல்கள் புரிந்தது என்பது போன்ற குற்றங்களைச் செய்ததற்காக அரசராலோ, அவரது அமைச்சர்களாலோ குற்றம் சாற்றப்பட்டவர்களை அடைத்து வைக்கும் சிறையாக அது 16 ஆம் லூயி மன்னர் காலத்தில் இருந்தது. அச்சிறையில் இருந்தவர்களின் புகழ் பெற்ற வால்டேர் என்பவர் 1718 இல் சிறையில் இருந்தபோது எழுதியதுதான் ஒடிபஸ் நூலாகும்.
அன்று அந்தச் சிறையில் இருந்த ஏழு பேர்களில் நான்கு பேர் போர்ஜரி குற்றம் புரிந்தவர்கள், பாலியன் வன்புணர்ச்சிக் குற்றம் புரிந்த ஒருவரும், இரண்டு மன நிலையற்றவர்களும் அடங்குவர். இவர்களில் தனது இடுப்பு வரை தாடி வளர்த்துக் கொண்டு தன்னை ஜூலியஸ் சீசர் என்று கூறிக்கொண்ட ஆங்கிலேய அல்லது அயர்லாந்தைச் சேர்ந்த மேஜர் வைட் என்ற மனநோயாளியும் ஒருவர்.
இந்த பாசில்லி சிறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில்  நூறு பேர் உயிரிழந்தனர்.  சிறையின் கவர்னராக இருந்தவரின்  வெட்டப்பட்ட தலை ஒரு வேலில் செருகப் பட்டு பாரிஸ் நகர தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
போர் புரியத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்ட வீரர்கள்தான் இந்தச் சிறையின் காவலர்களாக நியமிக்கப் பட்டவர்கள் ஆவர். அவர்களுக்கு சிறையின் சூழ்நிலை மிகவும் வசதியானதாக இருந்தது. தளவாட வசதிகளுடன் கூடிய குடியிருப்பு, சாவகாசமான பார்வை நேரம் என்று அவர்கள் வாழ்க்கை பதற்றமின்றி மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்தது.
அழகும், கவர்ச்சியும் நிறைந்த பெண்கள் சிறையின் தோட்டத்தில் கைதிகளுடன் இருக்கும் காட்சியை 1785 இல் ஓவியர் ஜீன் ஃப்ரேகொனார்ட் வரைந்த பார்வையாளர் தினம் என்ற ஓவியத்தில் காணலாம்.  கைதிகளுக்கு தாராளமாக செலவுக்கான பணமும், நிறைய புகையிலையும், சாராயமும் அளிக்கப்பட்டதுடன், வளர்ப்புப் பிராணிகளை வைத்துக் கொள்ளவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
1759 முதல் 1760 வரை இச்சிறையில் இருந்த ஜீன் ஃபிராங்காய்ஸ் மார்மோன்டல் என்பவர் எழுதுகிறார்: இங்கு அளிக்கப்படும் திராட்சை ரசம் மிகச் சிறந்ததாக இல்லை என்றாலும், அருந்தத் தக்கதாகத்தான் இருந்தது. உணவில் இனிப்புகள் இருக்காது. ஏதேனும் ஒன்றை இழக்க வேண்டியது அவசியமானதுதான். மொத்தத்தில் சிறையில் எல்லோருக்கும் நல்ல உணவு அளிக்கப்பட்டது என்பதை நான் கண்டேன்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...