Friday, November 4, 2011

வைரங்கள் எங்கிருந்து வருகின்றன ?


தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:



வைரங்கள் எங்கிருந்து  வருகின்றன ?

வைரங்கள் எரிமலைகளில் இருந்து வெளி வருகின்றன. பூமிக்கு அடியில் அதிக அளவு வெப்பம், அழுத்தம் ஆகியவற்றால் உருவாகும் வைரங்கள் எரிமலைகள் வெடிக்கும்போது பூமியின் மேற்பரப்பிற்கு வருகின்றன.

பூமியின் மேற்பரப்பிலிருந்து 160 முதல் 480 கி.மீ.வரை ( 100 முதல் 300 மைல் வரை) ஆழத்தில் வைரங்கள் உருவாகின்றன. கிம்பர்லைட் என்று அழைக்கப்படும் எரிமலைக் கற்களின் உள்ளே வைரங்கள் உருவாகின்றன.

பொதுவாக எரிமலைகள் வெடித்து எரிமலைக் குழம்பைக் கக்கிக் கொண்டிருக்கும் பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து வைரங்கள் எடுக்கப்படுகின்றன. தனியாக வைரம் ஏதேனும் காணப்படுமானால், அது கிம்பர்லைட் பாறையில் இருந்து பிரிந்து அடித்து வரப்பட்டதாக இருக்கும்.

உலகில் 20 நாடுகள் வைரங்களை உற்பத்தி செய்கின்றன. ஆஸ்திரேலியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, போட்ஸ்வானா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக வைரம் உற்பத்தி செய்யும் அய்ந்தாவது  நாடாக ஆப்ரிக்கா உள்ளது.

வைரங்கள் தூய்மையான கரியினால் ஆனவை. அவ்வாறுதான் பென்சில்களில் எழுதும் பகுதியைத் தயாரிக்க உதவும் கிராஃபைட் என்ற பொருளும் கரியினால் ஆனதே. ஆனால் அவற்றில் கரி அணுக்கள் மாறுபட்ட முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

உலகில் இயற்கையாக உருவாகும் பொருள்களிலேயே மிகவும் கடினத்தன்மை வாய்ந்த பொருள் வைரமே. மோஹ் கடின தராசில் பத்து எண்ணிக்கை கொண்டது வைரம். ஆனால் கிராபைட்டோ ஒன்றரை எண்ணிக்கை மட்டுமே கொண்டது. இது முகத்துக்கு பூசும் பவுடரின் எண்ணிக்கையை விட சற்று கூடுதலானது அவ்வளவே.

நாமறிந்த வரையில் இருக்கும் மிகப் பெரிய வைரம் 4000 கி.மீ. (2,500 மைல்) குறுக்களவும் கொண்ட பத்து பில்லியன் டிரில்லியன் டிரில்லியன் கேரட் எடையும் கொண்டது. இந்த வைரம் ஆஸ்திரேலியா நாட்டுக்கு மேலே 8 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சென்டாரஸ் விண்வெளி மண்டலத்தில் உள்ள லூசி என்னும் வின்மீனுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

வானத்தில் உள்ள லூசியில் வைரங்கள் உள்ளன என்ற பீடில்ஸ் பாடலில் இருந்து இந்த வின்மீன் லூசி என்ற பெயரைப் பெற்றது. ஆனால் அதன் தொழில்நுட்பப் பெயர்  வெள்ளை ட்வார்ஃப் BPM   37093 என்பதேயாகும்.

உலகில் நாம் அறிந்திருந்த பொருள்களிலேயே மிகவும் கடினமானது வைரமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் வைரத்தை விடக் கடினமான பொருள் ஒன்றினை பரிசோதனை சாலையில் உருவாக்கினர்.

அக்ரிகேடட் கார்பன் நானோ ராட்ஸ் (ACNR)என்னும் இப்பொருள் மிகவும் கடினத்தன்மை கொண்ட கார்பன் மூலக்கூறுகளை 2226 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பப்படுத்தி, அழுத்தம் கொடுத்து  உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறும் 60 அணுக்களைக் கொண்டுள்ளது. இந்த அணுக்கள் எண்கோண வடிவிலும் அறுகோண வடிவிலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. மிகச் சிறிய கால்பந்துகளைப் போன்று அவை தோற்றமளிப்பதாகக் கூறப்படுகிறது.   மிகவும் கடினத்தன்மை கொண்ட இந்த (ACNR) என்ற பொருள் பெரிய முயற்சி இன்றி மிக எளிதாக வைரத்தை அறுத்துவிடுகிறது.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General
Ignorance’ பொதுவான அறியாமைகள்
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.

1 comment:

Unknown said...

அருமையான தகவல்கள்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...