பகுத்தறிந்து முன்னேறு! பள்ளி மாணவர்களுடன் தலைவர்கள் கலந்துறவாடல் சிங்கப்பூரிலும் பெரியார் மய்யம்! தமிழர் தலைவர் கருத்துரை
சிங்கப்பூர், நவ. 15- உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் சிங்கப்பூரிலும் கூட பெரியார் மய்யம் நிறுவப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
சிங்கப்பூர் பெரியார் கண்ட வாழ்வியல் விழா வின் தொடக்க நாளில் (12.11.2011) பகுத்தறிந்து முன்னேறு என்ற தலைப்பில் நடைபெற்ற மாணவர் களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி, பேரா.சுப.வீரபாண் டியன், டாக்டர் சோம.இளங்கோவன், பேரா நல். இராமச்சந்திரன் மற்றும் சிங்கப்பூர் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

அறிமுகம் செய்துகொண்ட மாணவர்கள்
குந்தவி, சரண்யா, நித்யா, சுந்தரி, துர்கா, சுகந்தி, முகுந் தன், வருண், ரகுவன்ஷா, மதுமிதா, நிஷா, யோகேஷ், வைத்தீஸ்வரி, வளவன், விக்னேஷ், தனுஷ், அரவிந்த், ஆனந்தன் உள்ளிட்ட மாணவச் செல்வங்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆற்றிய உரையிலிருந்து:
நான் இங்கே மகிழுந்திலே வருகிறபோது சிங்கப் பூர் வானொலி நிலைய அறிவிப்புகளை கேட்டுக் கொண்டே வந்தேன். ஆங்கிலம் கலக்காமல் நல்ல தமிழிலே பேசுவதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந் தேன். உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த் துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகுத்தறிந்து முன்னேறு என்ற தலைப்பு நமக்கு முதலில் சொல்வது முன்னேறினால் போதும் என்பதை விட எப்படி முன்னேற வேண்டும் என்று சொல்கிறது. பகுத்தறிந்து முன்னேற வேண்டும் என்று சொல் கிறது. பொதுவாக உலகில் அறிவு என்பது இரண்டு துறை சார்ந்தது. ஒன்று அறிவியல் அறிவு, மற் றொன்று தத்துவ அறிவுஇவை இரண்டும் சேரும்போது தான் ஒரு பகுத்தறிவுப் பார்வை வருகிறது.
“The Story of Philosophy” என்ற புத்தகத்தில் அறிவியல் என்பது எப்படி சொல்வது என்றும், எப்படி குணப்படுத்துவது என்பதை சொல்லும்! ஆனால் தத்துவம் தான் எதைக் சொல்ல வேண்டும்? எப்போது குணப்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லும்.
இங்கு பெரியார் பெருந்தொண்டர் விருதுபெற்ற ஆரூர் சபாபதி அவர்கள் ஒரு பேட்டியில் புதிய மோர் தயாரிக்க பழைய மோர் வேண்டும் என்று மிக எளிமையாக கூறியிருப்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது- மரபுகளை- வரலாற்றுச் செய்திகளை நம் பிள்ளைகள் அறிய வேண்டும். வரலாற்றை அறிய வேண்டும், அறிந்தவுடன் அதை ஆராய வேண்டும். பிறகு பொருத்தமானவைகளைப் பின்பற்ற வேண்டும். முன்னோர் செய்தார்கள் என்பதற்காக அப்படியே அதைப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. முன்னோர் செய்தார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் புறக் கணிக்கவோ - புறந்தள்ளவோ வேண்டியதில்லை.
இரண்டு அடிப்படையில் மரபுகளை அறிந்து ஆராய முடியும். நம்முடைய பண்பாட்டு மரபு வேறு பண்பாட்டு மரபுகளோடு அதுவும் கூடாத பண்பாட்டு மரபுகளோடு கலந்து வேறு வடிவத்தை பெற்று இருக்கிறதா என்பதை ஆராய்தல் ஒன்று. இரண்டாவது ஆராய்தல் - அது இன்றைக்கு தேவையா? பொருந்துமா? என்ற ஆராய்ச்சி தந்தை பெரியார் அவர்கள் மிக எளிமையாக ஓர் எடுத்துக் காட்டைச் சொல்வார்கள் சென்ற ஆண்டு கால அட்டவணையைப் பார்த்துக் கொண்டு இந்த ஆண்டு இரயில் நிலையத்திற்கு செல்லக்கூடாது என்று சொல்வார்கள்.
முன்னோர்களை நாம் முட்டாள்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் காலத்திற்கு அது சரியாக இருந்திருக்கலாம். இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றிக் கொள் ளாதவர்கள் அறிவாளிகளும் அல்லர், பகுத்தறிவா ளரும் அல்லர்.
வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். அதை ஆய்வுக்கு உட்படுத்துங்கள். இன்றைக்கும் சரியாக இருந்தால் பின்பற்றுங்கள். இதுதான் பகுத்தறிதல்.
அறிவியல் பார்வை என்பது எல்லாவற்றையும் பகுத்துப் பகுத்து ஆராய்தல்
தத்துவப் பார்வை என்பது எங்கோ இருக்கும் ஒன்றை இங்கு இருப்பதோடு இணைத்துப் பார்த்து புதுவிளக்கம் பெறுவது அறிவியல் பார்வையும் தத்துவப் பார்வையும் சேர்கிறபோது பகுத்தறிவுப் பார்வையை நமக்கு தருகிறது. எந்த ஒன்றையும் பகுத்தறிந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது பெரியார் சமூக சேவை மன்றம் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் என்று முன் வைத்திருக்கிற ஒரு நல்ல கருத்தை நான் முன்மொழிகிறேன் என்று கூறினார்.
மாணவர்களிடையே தமிழர் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து:
புது கல்வியாண்டு செல்லும் மாணவச் செல்வங் களுக்கு எங்களுடைய வாழ்த்துகள். மாணவச் செல் வங்களோடு கலந்துரையாடும் இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம் நாயர் அவர்களைப் பற்றி கேள்விப்பட்ட போது அவர் வயதானவராக இருப்பார் என்று நினைத் தோம். ஆனால் அவரை இங்கே நேரில் பார்த்து பேசிய பிறகு தான், அவரே பகுத்தறிந்து முன்னேறி இருக்கிறார்.
நல்ல இளைஞராக ஒரு ‘Enlighted Student’ போன்றவராக அவரைப் பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இவரைப் போன்றே சிங்கப்பூர் நாடாளுமன்றமும் இளமையாக - வளமை யாகவும் உள்ளது. மாணவச் செல்வங் கள் பகுத்தறிந்து முன் னேற வேண்டும். அறி வுப்படி நம்முடைய வழி சரியான வழி - சிறப்பான வழிதானா? என்று ஆராய்ந்து முன் னேற வேண்டும்.
மனிதம் - மிருகம் இரண்டை யும் பிரித்துக் காட்டு கின்ற சிறப்பு என்ன வென்றால் மிருகத்திற்கு 5 அறிவுதான், மனித னுக்கு மட்டும்தான் 6 ஆவது அறிவு பகுத்தறிவு. ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? என்ற கேள்விகளை கேட் பதுதான் பகுத்தறிவு, கண்களை மூடிக்கொண்டு தலையை ஆட்டுவது பகுத்தறிவு அல்ல. மாணவச் செல்வங் களின் அறிவுதான் மிகவும் அற்புத மான அறிவு. இதுதான் வளமையான காலம். அப்பாவைவிட மகன் 15 ஆண்டு அதிபுத்திசாலி. பகுத்தறிந்து முன்னேற கூடிய பக்குவம் உண்டு. பேரப்பிள்ளை அதைவிட கெட்டிக் காரர்கள் 30 ஆண்டுகள் முன்னோடி புத்திசாலி.
அண்ணா மகன் கேட்ட கேள்வி
தந்தை பெரியாரின் முதல் மாணவராக இருந்தவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் பகுத்தறிவு சிந்தனைய நன்றாக வளர்த்தவர். அவர் ஒரு செய்தியை சொன்னார்.
அவரது மகனுக்கு பள்ளியில் தமிழா சிரியர் கம்பராமாயணத்தைப் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இராவணனுக்கு பத்துத் தலை என்று கூறு கிறீர்களே! அது குறுக்கு வாட்டத்திலா? நெடுக்கு வாட்டத்திலா? என்று பகுத்தறிவால் கேட்டார். இதற்கு தமிழாசிரியர் பதில் கூற முடியாமல் கேள்வி கேட்ட மாணவனை கோபத்துடன் அறைந்து உங்க அப்பாவிடமே போய்க் கேள் என்றார்.
இதை அறிந்த அண்ணா அவர்கள் பள்ளி ஆசிரியர் என் மீதுள்ள கோபத்தில் தான் உன்னை அடித்துள்ளார், அதைப் பற்றி கவலைப்படாமல், எதையும் ஆராய்ந்து தெரிந்துகொள் என்று கூறியதாக சொன்னார். இதுபோன்று மாணவர்கள் ஆசிரியர்களிடம் பகுத்தறிந்து கேள்வி கேட்டு ஆசிரியர்கள் பதில் சொல்லும் முறையில் நமது கல்வி பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று பெரியார் கூறுவார். அப்போது தான் பகுத்தறிவு வளரும் என்பதற்காக.
முன்பு எழுதப்படிக்க தெரியாதவர்கள்- தற்குறி (Illiterate) என்றும், எழுத படிக்க தெரிந்தவர்களை படித்தவர்கள் (Literate) என்று கூறி வந்தோம். ஆனால் தற்போது கணினி யுகம். அதுவும் இணையத்தை (Internet) அதிக அளவில் பயன்படுத்தும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கணினி பயன்படுத்த தெரிந்தவர் (குறைந்த வகுப்பு படித்திருந்தாலும்) ‘Literate’ என்றும், கணினி பயன்படுத்தத் தெரியாதவர் (டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும்) தற்குறி (Illiterate) என்றும் அழைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பகுத்தறிந்து முன்னேறு என்றால் இரட்டை வாழ்க்கை வாழாதே என்பதுதான் முக்கியமானது.
பழைமையை முழுமையாக தூக்கி எறிய வேண்டும் என்பது கிடையாது. சோற்றுக்கு உப்பு எப்படி அளவோடு பயன்படுத்துகிறோமோ அது போன்று பழைமையை ஆராய்ந்து இன்றைய தேவைக்கேற்ப அளவோடு பயன்படுத்த வேண்டும்.

பகுத்தறிவு என்பது எப்போது எதை எப்படி செய்து முன்னேறுவது என்பதுதான். அந்த அடிப் படையில் பழைமையை நினைக்காதீர்கள் பழை மையை உணவாக கொள்ள வேண்டாம் அளவோடு உப்பாக- உரமாக எடுத்துக் கொள்ளுங்கள். புதுமையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
வேரே மரமாக இருக்க முடியாதல்லவா? கிளைகள் தேவை, இலைகள் தேவை. அதுபோல உங்கள் அறிவும், அனுபவமும் தேவை என்று தமிழர் தலைவர் கருத்துரையாற்றினார்.
இத்துடன் காலை நிகழ்ச்சி இனிதே நிறைவுற்று அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு தலைவர்கள் அறி வார்ந்த விளக்கங்களை தந்தது மாணவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பய னுள்ளதாக அமைந்தது.

மாணவிகள் கேள்வி -தலைவர்கள் பதில்
செல்வி வைத்தீஸ்வரி: பெரியார் சொல்கிறார் ஆணும், பெண்ணும் சமமாக இருக்க வேண்டும் என்று. அது சாத்தியம் தானா?
தமிழர் தலைவர்: அது நடைமுறை சாத்தியம் ஆகி இருக்கிறது. வலது கால், இடது கால் இதில் எது முக்கியமானது. இரண்டும்தான். மூளையில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை.
பெரியார் அவர்கள் சுயமரி யாதை இயக்கத்தை ஆரம்பித்த போதே பிறவி பேதம் கூடாது- பிறப் பினால் ஒருவர் உயர்ந்தவர், மற்றொருவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இருக்க கூடாது என்று தெளிவாக கூறியுள்ளார். ஆணும் பெண்ணும் சமம். உலகளவில் அனைத்துத் துறைகளிலும் இது நடைமுறைக்கு வந்துவிட்டது.

செல்வி துர்கா: இந்தியாவி லுள்ள பெரியார் கல்வி நிலையங் களில் எது முக்கிய பாடமாக இருக்கிறது?
துணைவேந்தர்: பெரியார் மணியம்மை பல் கலைக்கழகம் இந்தியாவிலுள்ள 500 பல்கலைக் கழகங்களில் ஒன்றாக தேசிய கல்வி தரச்சான்று பெற்று சிறப் பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை, மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக் னாலஜி, மாஸ்டர் டெக்னாலஜி, இதைத்தாண்டி பி.டெக், எம். டெக், பி.ஹெச்.டி போன்ற பல்வேறு பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. றறற.யீஅர.நனர என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்களை நீங்கள் பெறலாம்.
கேள்வி: பெரியார் கட்சியில் உள்ளவர்கள் ஏன் கறுப்புடை அணிகிறார்கள்?
தமிழர் தலைவர்: சிங்கப் பூரில் ஜாதி இல்லை. நீங்கள் எல்லோரும் மனிதர்களாக இருக்கிறீர்கள். ஆனால், இந்தியா வில் அப்படியில்லை. மனிதர்கள் ஜாதியோடு பிறந்து, ஜாதியோடு வாழ்ந்து, ஜாதியோடு இறக்கிறார் கள். மனிதம் செத்துப் போனா லும் ஜாதி சாவதில்லை, ஜாதிக் கொரு சுடுகாடு இருந்த நிலை யெல்லாம் பெரியார் போராடி மாற்றியுள்ளார். சூத்திரன் என் றால் இழி குலத்தவர்கள் அதாவது தாசி புத்திரன் என்கிற பெயர் மனுதர்மத்தில் உள்ளது. 8ஆவது அத்தியாயத்தில் 416 ஆவது சுலோகத்தில் இது எழுதப் பட்டிருக்கிறது. அந்த இழிவைக் காட்டுவதற்காக அதிலிருந்து வெளிவர வேண்டு மன்று நினை வூட்டவும் ஒரு அடையாளமாக அதை அமைத்தார்கள்-சமூக புரட்சியாளராக இருந்த பெரியார் அவர்கள்
கேள்வி:பெரியாருக்கு முன்மாதிரி யார்?
ஆசிரியர்: பெரியாருக்கு முன்மாதிரி பெரியார்தான். பெரியார் ஒரு ஒப்பற்ற சுய சிந்தனையாளர். தன்னுடைய வாழ்நாள் அனுபவங்களிலி ருந்தும் மக்களோடு மக்களாக பழகியதாலும் ஏற்பட்ட ஒரு நடைமுறை அனுபவக்காரர். (பெரியார் திரைப்படம் டிவிடி இங்கே கிடைக்கிறது. அதை பார்த்தால் உங்களுக்கு புரியும்.)
செல்வி: இன்றைய கணினி, அறிவியல் காலத்தில் பெரியாரின் கொள்கைகள் எவ்வாறு பொருந் தும்?
சுப.வீரபாண்டியன்: இனிவரும் உலகம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அது ஒரு திருமண வீட்டில் பெரியார் பேசியது. அண்ணா அதை தொகுத்து திராவிட நாடு பத்திக்கையில் வெளியிட்டார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்ட் டியூப் பேபி பற்றி சொல்லியிருக்கிறார். இந்த அறிவியல் யுகத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்று இருக் கிறது. ஆனால் பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பே இதை சொல்லியிருக்கிறார். இன்னும் ஏராளமான தகவல்கள் உண்டு. நூலில் விஞ்ஞான உலகத்துக்கு பொருந்துகிற உண்மைகளை பெரியார் சொல்லியிருக்கிறார்.
தமிழர் தலைவர்: தற் போதைய அறிவியல் காலத்திலும் கம்ப்யூட்டருக்கு ஆயுத பூசை கொண்டாடி கம்ப்யூட்டருக்கு பொட்டு வைத்து தீப ஆராதனை காட்டுகிறார்கள். அதனால் கம்ப்யூட்டர் வந்தால் மட்டும் போதாது. பெரியாருடைய பகுத் தறிவு தேவை. முன்பு அறிவியல் பரவாத காலத்தில் மூட நம்பிக்கை குறைவாக இருந்தது. ஆனால் அறிவியல் பரவியுள்ள இக்காலத்தில் அறிவியல் கருவி களைக் கொண்டே அறிவிய லுக்கு விரோதமான கருத்தை பரப்புகிறார்கள் அதனால் பெரியார் இன்றும் தேவைப் படுகிறார், என்றும் தேவைப் படுவார். அறிவியல் காலத்தில் மனிதர்கள் இன்று செவ்வாய்க் கிரகத்துக்கு போய் வருகிறார்கள். ஆனால், அதே மனிதர்கள் கோவில் கர்ப்ப கிரகத்துக்குள் போக முடியவில்லை. ஆதலால், செவ்வாய்க் கிரகத்துக்கு போக விஞ்ஞானம் தேவை. கர்ப்ப கிரகத்துக்குப் போக பெரியார் தேவை. அவசியம் பெரியார் என்றும் தேவைப்படுகிறார். செல்வி நிஷா: பெரியார் சொன்ன அறிவுரைகள் இந்த காலத்து இளைஞர்களுக்கு எது பொருந்தும்?
சோம.இளங்கோவன்: ஆசிரியர் அய்யா சொன்ன மாதிரி பெரியார் கொள்கைகள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும். உங்களிடம் மற்றவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே நீங்களும் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் அதுதான் ஒழுக்கம் என்ற அறிவுரை மிக முக்கியமாக அனைவருக்கும் பொருந்தும்.
தமிழர் தலைவர்: யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பாதே! உன் அறிவு என்ன சொல்கிறதோ அதை நம்பு! என்று பெரியார் சொன் னார். பெரியார் சொன்ன அறிவு ரைகளிலேயே பகுத்தறிந்து முன் னேறு என்பதுதான் சிறப்பானது.
செல்வி மதுமிதா: இக் காலத்தில் நாம் வெற்றி பெற என்ன கொள்ளைகளை பின்பற்ற வேண்டும்?
தமிழர் தலைவர்: நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். மூடநம்பிக் கையில எதுவும் நம்ம கையில இல்லீங்க என்று சொல்வார்கள். தன்னம்பிக்கை எங்கு இருக்கி றதோ அங்கு மூடநம்பிக்கை விடைபெற்று விடும். அதனால், பெரியாரின் வாழ்வியலில் தன்னம்பிக்கை ரொம்ப முக்கிய மானது. இந்தத் தன்னம்பிக்கை இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தடை ஒருபோதும் இல்லை. இந்த உறுதிமொழியை ஆசிரியர் முன் மொழிய அனைவரும் எழுந்து நின்று வழிமொழிந்தனர். தினமும் நாம் சொல்லிக்கொள்ள வேண் டிய உறுதிமொழி நம்மால் முடியாதது- வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது- நம்மால் மட்டுமே முடியும் என்பதுதான்.
செல்வி சர்வன்ஷா: பாரம் பரிய கலாச்சாரங்களில் பெரியார் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்?
தமிழர் தலைவர்: பெரியார் ஒரே பற்றுதான். அது அறிவு பற்று-வளர்ச்சி பற்று. பெரியார் தன் அறிவுக்கு சரி என்று பட்டதை எடுத்துக் கொண்டி ருக்கிறார். உதாரணமாக தமிழ் வருடப்பிறப்பென்று 60 வருசங்களை சொல்றாங்க அந்த 60இல் ஒரு சொல்கூட தமிழ்ச் சொல் கிடையாது. ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்று நினைத்து தை முதல் நாளை தமிழ்புத்தாண்டு என்று கொண்டாட வேண்டும் என்றார். அறிவுக்குப் பொருந்தாத பழைய ஆபாசக்கதையை புறக் கணிக்கச் சொன்னார். இன்னும் எல்லாவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்.
செல்வி மதுமிதா: பெரியார் கருத்துக்களை எப்படி சிங்கப்பூர் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப் பீர்கள்?
பேரா.சுப.வீரபாண்டியன்: இன்றைக்கு நாம் இணையதள உலகத்தில் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம். இணைய தளத்தில் ஏராளமான பெரியாருடைய கருத்துகள் இருக்கின்றன. பெரியார் வலைக்காட்சி என்கிற வலைதள மும் இருக்கிறது. பெரியார் பிஞ்சு என்று ஒரு இதழ் வருகிறது. சிங்கப்பூர் மட்டுமல்ல, உலகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் பெரியாரை நீங்கள் இணையம் மூலம் கற்றுக் கொள்ளலாம். தனராஜ்:பெரியாரை சாக்ரடீஸ் உடன் ஒப்பிட்டுப் பேசினார்கள். இதுபற்றி தங்கள் கருத்து என்ன?
பேரா.சுப.வீரபாண்டியன்: உலக சிந்தனையாளர்கள் யாரோடு வேண்டுமானாலும் பெரியாரை நாம் ஒப்பிட முடியும். சாக்ரடீஸ் மீது சாட் டப்பட்ட குற்றசாட்டே அவர் விழிப்புணர்ச்சியை உண்டாக் கினார் என்பதுதான். அவருக்குப் பொருந்திய குற்றச்சாட்டுதான் பெரியாருக்கும் பொருந்துகிறது.
தமிழர் தலைவர்: பெரி யாருக்கு யுனெஸ்கோ கொடுத்த விருதில், ‘Socrates of the South East Asia’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது மிகவும் பொருத்தமானது. சாக்ர டீசை விட பெரியாருக்கு ஒரு சிறப்பு என்னன்னா, பெரியார் வாழ்ந்த காலத்திலே அவருடைய கொள்கைகள் அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு சட்டங்களாயிற்று. இது சாக்ரடீசுக்கு கிடைக்காத வாய்ப்பு. பெரியாருக்கு கிடைத் தது.
செல்வி சரண்யா: பெரியா ருக்கு ஏன் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது?
தமிழர் தலைவர்: 1938இல் சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டுனாங்க அதில் மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரும் பலரும் சேர்ந்து இதுவரை தமிழ்நாட்டுப் பெண் கள் முன்னேற்றத்துக்கு யாரும் செய்யாத தொண்டை செய்ததற் காகவும் ஜாதி ஒழிப்புக்காகவும், மூடநம்பிக்கை ஒழிப்புக்காகவும் தன் வாழ்நாளையே ஒப்படைத்த ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்குகிறோம் என்று பெண்கள் அறிவித் தார்கள். ஏனெனில், பெண்கள் தான் எதையும் விரைவில் அடையாளம் கண்டு கொள்கி றார்கள். அந்த சிறப்பு பெண் களுக்குத்தான் உண்டு.
செல்வி குந்தவி: பெரியா ருடன் நீண்ட காலம் நீங்கள் இருந்துள்ளீர்கள். அதில் அவரு டன் உங்களுக்கு மிகவும் பிடித்த தாக எதைக் கருதுகிறீர்கள்?
தமிழர் தலைவர்: பெரியா ரிடம் பிடித்தவைகள் பல்வேறு இருந்தாலும், அவருடைய கடும் உழைப்பு, சிக்கனம். அவரின் பெருந்தன்மை, சிறுவர்களிட மும்கூட அதிக மரியாதை செலுத்துவது ஆகியவை மிகவும் பிடித்தவை. இவைகளை வேறு எந்த தலைவரிடத்திலும் பார்க்க முடியாது.
பொறியாளர் சிவகாமி: பெரியார் சொன்ன சீர்திருத் தங்கள். இன்றைய காலகட்டத் தில் எந்தத் அளவுக்கு அவர்கள் கருத்து மக்களிடம் சேர்ந்து அதை பின்பற்றுகிறார்கள்?
அதனால், மக்கள் முன்னேறி இருக்கிறார்களா?
தமிழர் தலைவர்: சமூக நீதியைப் பொறுத்தவரையில் பெரியார் காலத்திலேயே 50 சதவிகிதம் பார்ப்பனர் அல்லாத மக்கள் பெறுவதைக் கண்டார். பின்னர், மண்டல் கமிஷன் வந்த பிறகு, சாதாரண எளிய பிள்ளை கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், என்று எல்லா நிலைகளிலும் பெண்கள் மற்றவர்கள் என்று வரக்கூடிய வாய்ப்புகள் வந்தது. இதற்காக பெரியார் காலத்தி லேயே முதல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. பிறகு 69 சதவிகிதம் பாதுகாப்பு சட்டம் பெரியர் தொண்டர்களால் ஏற் பட்டது. இன்றைக்கு இந்தியா முழுவதும் சமூகநீதி பின்பற்றப் படுகிறது. இதனால் மக்கள் நல்ல பலன் பெற்றிருக்கிறார்கள். முன்னேறி இருக்கிறார்கள். இது எங்கள் நாட்டு அனுபவம்.
பேரா.சுப.வீரபாண்டியன்: தமிழ்நாட்டில் பெரியாருக்குப் பின் ஆசிரியரால் இடஒதுக்கீடு பாதுகாக்கப்படுகிறது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறி வருகிறார்கள்.
உசேன்: சிங்கப்பூரில் பெரியார் மய்யம் அமையுமா?
தமிழர் தலைவர்: உங்களைப் போன்ற பல பேருடைய ஆதரவு இருக்குமானால் நிச்சயமாக வாய்ப்பு வரும்போது சிங்கப் பூரில் பெரியார் மய்யம் அமையும்.
நாகராஜன்: தமிழ் சமுதாயத்தின் பண்பாடு தமிழ கத்தில் எதிர்காலத்தில் நிலைத்தி ருக்குமா? என்ற சந்தேகம் இருக் கின்றது. இதற்குப் பெரியாரின் பேரியக்கம் என்ன செய்யப் போகிறது?
தமிழர் தலைவர்: தமிழ்ப் பண்பாட்டுக்கு ஆபத்து எந்த ரூபத்தில் வந்தாலும் அதைத் தடுத்து நிறுத்த பெரியாரின் இயக்கம் கண்களை அகலமாக விழித்துக் கொண்டு கால்களை வேகமாக நடைபோடும்படியாக செய்யும் என்று உறுதியளிக் கிறோம். எதுவும் இடையிலே வாழ்ந்து சீக்கிரம் போய்விடும். நமது பண்பாட்டுக்கு ஆபத்து வரும்போது அதைத் தடுக்கும் பணியைத் தவிர வேறு பணி இல்லை. ஆகவே கவலை கொள்ளத் தேவையில்லை. கேள்வி கேட்ட அனைவருக் கும் பரிசு வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- வியாழக்கிழமை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைகிறது
- மாவீரர் நாளை சிறப்பாக நடத்த விடுதலைப்புலிகள் அழைப்பு
- ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது மத்திய அமைச்சர் அறிவிப்பு
- பெரியார் உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறார்!
- பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மதிப்பெண் பட்டியல் மாணவ-மாணவிகளின் புகைப்படத்துடன் தயாரிப்பு: முறைகேட்டை தடுக்க தேர்வுத்துறை நடவடிக்கை
No comments:
Post a Comment