Friday, November 4, 2011

பெட்ரோல் விலை உயர்வுக்கு திராவிடர் கழகம் கண்டனம்!


பெட்ரோல் விலையை நேற்றிரவு லிட்டருக்கு  ஒரு ரூபாய் 80 காசுகள் உயர்த்தியதன் விளைவாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 72 ரூபாய் அளவுக்கு வந்துவிட்டது!
இது மக்களை பெரிய அளவில் பாதிக்கும். நேரிடையாக இல்லா விட்டாலும் மறைமுகமாக, மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும்.
திடீர் திடீர் என்று இப்படி உயர்த்துவது என்பது மக்கள் விரோதச் செயலாகும்.
மத்திய ஆட்சி இதை நியாயப்படுத்தி, கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்ளக் கூடாது!
அரசு சிக்கன நடவடிக்கைகளையும், கறுப்புப் பணங்களை வெளியே கொண்டு வருவதன் மூலமும் இந்த விலை உயர்வுகளை தவிர்க்க இயலுமே!
மத்திய அரசுக்கு ஆலோசகர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஆனால் உருப்படியான பலன்தான் ஏதும் இல்லை.

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...