சிங்கப்பூரில் பெரியார் ஒளிப்படக் கண்காட்சி
பெரியார் ஒளிப்படக் காட்சியை சிங்கப்பூர், செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் பார்வையிட்டார். அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், தஞ்சாவூர்-வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. நல். இராமச்சந்திரன், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற பொருளாளர் நா. மாறன் ஆகியோர் உடன் உள்ளனர். (சிங்கப்பூர் - 12.11.2011)
சிங்கப்பூரில் பெரியார் ஒளிப்படக் கண்காட்சி
சிங்கப்பூர், நவ.13- சிங்கப்பூரில் நேற்று (12.11.2011) மிகச் சிறப்புடன் தொடங்கிய பெரியார் ஒளிப்படக் கண்காட்சியில் அறிஞர் பெருமக்கள் பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்கள் கண்காட்சியைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தனர். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பெரியார் கண்ட வாழ்வியல் இவ்வாண்டு இரண்டு நாள் விழாவாக சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
சிங்கப்பூர், நவ.13- சிங்கப்பூரில் நேற்று (12.11.2011) மிகச் சிறப்புடன் தொடங்கிய பெரியார் ஒளிப்படக் கண்காட்சியில் அறிஞர் பெருமக்கள் பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்கள் கண்காட்சியைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தனர். சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பெரியார் கண்ட வாழ்வியல் இவ்வாண்டு இரண்டு நாள் விழாவாக சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
பெரியார் ஒளிப்படக் கண்காட்சி
சிராங்கூன் ரோட்டில் உள்ள காந்தி மண்டபத்தில் சனிக்கிழமை (12.11.2011) பெரியார் ஒளிப்படக் கண்காட்சி மற்றும் பகுத்தறிந்து முன்னேறு என்ற தலைப்பில் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் புகைப்பட கண்காட்சியை சிங்கப்பூர் மூத்தக் கவிஞர் க.து.மு. இக்பால் காலை 10 மணிக்குத் தொடங்கி வைத்தார்.
பெரியார் பெருந்தொண்டர் விருது
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் நகைச்சுவை நடிகர் ஆரூர் சபாபதி மற்றும் சமூக தொண்டர் கே. இராமசாமி ஆகிய இருவரையும் பாராட்டி பெரியார் பெருந் தொண் டர் விருது வழங்கப்பட்டது. பெரியார் கண்காட்சி 33 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சமூக நீதிக்கான கி. வீரமணி விருது
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர்
வீ. கலைச்செல்வம் அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் சமூக நீதிக்கான கி. வீரமணி விருதை அதன் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் வழங்கி சிறப்பித்தார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி, துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா. சுப. வீரபாண்டியன், அமெரிக்க டாக்டர் சோம. இளங்கோவன் மற்றும் சிங்கப்பூர் ஆசிரியர்கள், பகுத்தறிந்து முன்னேறு என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். இதில் அதிக மாணவர்கள் கலந்து கொண்டு நிறைய தகவல்களைத் தெரிந்துகொண்டனர். தேசிய நூலக வாரிய அதிகாரி திருச்செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பெரியார் கண்ட வாழ்வியல்
இன்று (13.11.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வள்ளல் பொ. கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபத்தில் பெரியார் கண்ட வாழ்வியல் விழா நடைபெறுகிறது.
அதில் சிங்கப்பூர் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் விக்ரம்நாயர், தமிழகத்திலிருந்து பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி, பேரா. சுப.வீரபாண்டியன், அமெரிக்காவிலி ருந்து டாக்டர் சோம. இளங்கோவன், சிங்கப்பூர் தமிழ றிஞர் முனைவர் சுப. திண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
பெரியார் கண்ட வாழ்வியல் விழாவின் ஓர் அங்கமாக அமைக்கப்பட்டு இருந்த பெரியார் ஒளிப்படக் கண்காட்சியை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
(சிங்கப்பூர் - 12.11.2011)
No comments:
Post a Comment