Sunday, November 13, 2011

பீனிக்ஸ் விலங்கின் மூக்கை உடைத்தவர் யார்?


பீனிக்ஸ் விலங்கின் மூக்கை உடைத்தவர் யார்?


தெரிந்துகொள்வோம்
இன்று ஒரு புதிய தகவல்:

பீனிக்ஸ் விலங்கின் மூக்கை உடைத்தவர் யார்?
பீனிக்ஸ் என்றால் கிரேக்க மொழியில் கழுத்தை நெறிப்பவர் என்று பொருள்படும். ஒரு பெண்ணின் தலையும், ஒரு சிங்கத்தின் உடலும், ஒரு பறவையின் சிறகுகளும் கொண்ட கற்பனையான ஒரு விலங்குதான் பீனிக்ஸ் என்ற பெயர் கொண்ட விலங்கு. எகிப்து நாட்டு பிரமிடுகளுக்கு அருகில் உள்ள 6500 ஆண்டு பழமை வாய்ந்த, பெரிய அளவிலான அந்த விலங்கின் சிலைகளுக்கு மூக்கு இல்லாமல் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
இச் சிலைகளின் மூக்குகளை வேண்டுமென்றே பல்வேறுபட்ட காரணங் களுக்காக உடைத்துவிட்டதாக, பல நூற்றாண்டு காலமாக, பல போர்ப்படைகள், தனிப்பட்டவர்கள், ஆங்கிலேயர், ஜெர்மானியர், அராபியர் என்று பல்வேறுபட்ட மக்கள் மீது குற்றம் சாற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் பொதுவாக நெப்போலியன் மீதே இந்தக் குற்றம் விழுகிறது.
இந்தக் குற்றச்சாற்றுகளில் எதுவும் உண்மையல்ல. உண்மையில், அதனை உடைத்திருக்கக்கூடும் என்று நம்மால் நிச்சயமாகக் குறிப்பிடப்பட இயன்ற ஒரே ஒரு நபர்,  சயிம்-அல்-தார் என்ற இஸ்லாமிய மதகுருதான். வன்முறைக் குற்றத்துக்காக 1378 இல் அவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இரண்டு உலகப் போரிலும் ஈடுபட்ட இங்கிலாந்து மற்றும் ஜெர்மானியப் படைகள் இக்குற்றத்தைச் செய்யவில்லை. 1886 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பீனிக்சின் புகைப்படத்திலேயே அது மூக்கு அற்றதாகத்தான் இருந்தது.
1737 ஆம் ஆண்டில் மூக்கு இல்லாமல் வரையப்பட்ட பீனிக்சின் படங்களைப் பார்க்கும் போது இந்த மூக்குடைப்பில் நெப்போலியனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரிய வருகிறது. ஏனென்றால் அவர் பிறந்ததே அதற்குப் பின் 32 ஆண்டுகள் கழித்துதான். 29 வயதான போர்ப்படைத் தளபதியாக அவர் முதன் முதலாக பார்த்த பீனிக்ஸ் சிலைக்கு, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே  மூக்கு இல்லாமல்தான் இருந்துள்ளது.
இந்தியாவுடன் ஆங்கிலேயருக்கு உள்ள தொடர்பைத் துண்டிக்கும் நோக்கத்துடன் நெப்போலியன் எகிப்து நாட்டுக்குச் சென்றார். இரண்டு களங்களில் அங்கு அவர் போர் புரிந்தார். பிரமிட் சண்டை ஒன்று. (உண்மையில் பிரமிடுகளின் அருகில் அந்த சண்டை நடக்கவில்லை.) நைல் சண்டை. (இந்த சண்டையும் உண்மையில் நைல் நதியின் அருகில் நடைபெறவில்லை.) தனது 55,000 படை வீரர்களுடன், காப்பாளர்கள் என்னும் 155 சிவில் நிபுணர்களை நெப்போலியன் எகிப்து நாட்டுக்கு அழைத்து வந்தார். ஒரு நாட்டின் மீது அகழ்வாய்வு நடத்துவதற்காக முதன் முதலாக படையெடுத்துச் சென்றது அப்போதுதான்.
நெப்போலியனது போர்க்கப்பல்களை நெல்சன் மூழ்கடித்த பின், தனது போர்வீரர்களையும், காப்பாளர்களையும் எகிப்து நாட்டிலேயே விட்டுவிட்டு அவர் பிரான்சு திரும்பினார். அவர்கள் எகிப்தில் தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்தனர். எகிப்து நாட்டைப் பற்றிய விவரிப்பு என்று அந்நாட்டைப் பற்றிய உண்மையான தோற்றத்தை அளிக்கும் முதல் நூலை அவர்கள் தயாரித்து அய்ரோப்பாவை அடையச் செய்தனர்.
இதன் பின்னும், இன்றும் கூட பிரமிடுகளைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அந்நாட்டு வழிகாட்டிகள், பீனிக்சின் மூக்கை நெப்போலியன் திருடிக் கொண்டு பாரிஸ் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் சென்றதாகத்தான் சொல்லி வருகிறார்கள்.   மென்மையான சுண்ணாம்புக்  கல்லின் மீது 6000 ஆண்டுகளுக்கும் மேலாக வீசிய காற்றும்,  நிலவிய தட்பவெப்ப நிலையும் இந்த மூக்கு காணாமல் போனதற்கு பெரிதும் காரணமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்று கூறலாம்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General  Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...