Friday, November 11, 2011

அன்னா ஹசாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ். உடன் நீண்ட தொடர்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ராவ்பகத் போட்டுடைத்த தகவல்கள்





கொல்கத்தா, நவ. 11 - ஆர்.எஸ். எஸ்.க்கும் அன்னா ஹசாரேவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை உறுதிப் படுத்தும் வகையில், தங்களுக்குள் நீண்ட காலமாகவே தொடர்புள்ளது என்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்ராவ் பகத் கூறியுள்ளார். ஊழ லுக்கு எதிராக ஓர் இயக்கத்தை நடத்தும் படி அன்னா ஹசாரேவை வலியுறுத்தியது என்றும், ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அந்த இயக்கத்தில் எந்த பங்கும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் பகவத் கூறி யுள்ளார்.

நாங்கள் தான் ஆலோசனை கூறினோம்!

ஹசாரே இந்த இயக்கத்தில் கலந்து கொள்ளும்படி ஆர்.எஸ்.எஸ்.அய்க் கேட்டி ருந்தால், நாங்களும் கலந்து கொண்டி ருப்போம். ஆனால் அது போன்ற எந்த கோரிக்கையும் வரவில்லை. என்றாலும் ஹசாரேயின் இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பங்கெடுத்துக் கொள்வதை நாங்கள் தடுக்கவில்லை.

ஹசாரேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் இடையே உள்ள உறவு நீண்ட கால உறவாகும். அவரது கிராம முன்னேற்றத் திட்டங்களைப் பற்றி விளம்பரம் அளித்ததே நாங்கள்தான். எங்களது கிராம முன்னேற்றத் திட்டங் களிலும் கூட அவரது உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த மாதிரி எங்களுடன் தொடர்பு இருந்த நேரத்தில்தான், ஊழலுக்கு எதிரான இயக்கம் ஒன்றை மேற்கொள்ளும்படி அவருக்கு நாங்கள் ஆலோசனை கூறினோம். ஜூன் மாதத்தில் அவரை நான் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் வெவ் வேறு இடங்களில் இருக்க நேர்ந்து விட்டது கடந்த 9 ஆம் தேதி கொல்கத் தாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது பகவத் இவ்வாறு கூறினார்.

ராம்தேவை ஆர்.எஸ்.எஸ். கேட்டது

ஊழலுக்கு எதிராக ஓர் இயக்கத்தை மேற்கொள்ளும்படி பாபா ராம்தேவையும் ஆர்.எஸ்.எஸ்.தான் கேட்டுக் கொண்டது என்று பகவத் கூறினார். ஹசாரேயுடன் கைகோத்து செயல்பட ராம்தேவை வற் புறுத்த உங்களால் இயலாது; ஆனால் அந்த இயக்கத்தில்  பங்கேற்றுக் கொள் ளும்படி நாங்கள் ராம்தேவை வலியுறுத் தினோம்.

ஊழல் அற்ற வாழ்க்கையை மேற்கொள்ள இயன்ற சிறந்த தனிப்பட்டவர் களை உருவாக்குவதில் ஓர் அமைப்பு என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ்.நம்பிக்கை கொண் டுள்ளது. இறுதியில் இதன் விளைவாக ஊழலே அற்ற ஒரு நாடு பிறக்கும். எவ்வாறாயினும், அரசின் ஊழலுக்கு எதிராக  எந்த இயக்கம் மேற்கொண்டாலும் நல்லதுதான் என்று அவர் கூறினார்.

மதம் மற்றும் அரசியலுக்கு இடையே தெளிவான ஓர் எல்லை வகுக்கும் தனது கனவு நாடு உருவாகும் வழியில் இந்தியா இருப்பதாக தான் நம்புவதாக அவர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, உள்நாட்டுப் பாதுகாப்பு நடை முறை, குறிப்பாக மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறை, சரியாகக் கையாளப்பட்டால், அதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே கருதுகிறார்.

- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...