Wednesday, November 2, 2011

மக்கள் தொகை


மக்கள் தொகை



உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 கோடியைத் தாண்டிவிட்டது.
மக்கள் தொகை வளர்ச்சி நல்லதா, கெட்டதா என்கிற விவாதங்கள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டுள்ளன. நேற்றுகூட சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
வளரும் நாடுகள், வளர்ச்சி அடையாத நாடு கள் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்தியாவில் நாள் வருமானம் வெறும் 20 ரூபாய் - 77 விழுக்காடு என்று சொல்லப்படுகிறது.
பட்டினிக் கிடக்கும் வரிசையில் உலக நாடு களில் 67 ஆவது இடம் இந்தியாவுக்கு. 47 விழுக் காடு குழந்தைகள் எடை குறைவாகப் பிறக் கின்றன. வேலையற்றோர் இந்தியாவில் 22 விழுக்காடு.
திறந்த வெளியில் மல ஜலம் கழிப்போர் இந்தியாவில் 63.8 விழுக்காடாகும்.
உலக மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால் 1960 இல் 300 கோடி, 1999 இல் 600 கோடி, 2011 அக்டோபர் இறுதியில் 700 கோடி பேர்கள். 2025 இல் இது 800 கோடியைத் தாவுமாம். 2050 ஆம் ஆண்டிலோ அடேயப்பா 900 கோடியாக பெருகுவர் என்று அய்.நா. தெரி வித்துள்ளது.
இதன் விளைவைப்பற்றியும் அய்.நா. எச் சரித்துள்ளது - உணவுத் தேவை அதிகமாகும். தொழிற்சாலைகள் பெருகும் நிலையில் பூமி வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக பனி மலைகள் உருக ஆரம்பிக்கும். மண் வளம், காடு வளம் பாதிக்கப்படும்.
உணவு உற்பத்தி பாதிப்பால் 100 கோடி மக்கள் பட்டினியால் வாடுவர் என்கிற அபாய சங்கை ஊதித் தள்ளியுள்ளது அய்.நா. மன்றம்.
சிலர் விவாதிக்கின்றனர். மக்கள் பெருக்கம் என்பது மனித வளம்; உழைக்கக் கூடிய இரண்டு கரங்களோடு பிறக்கின்றனர் என்று சில அறிவு ஜீவிகள் தொலைக்காட்சியில் விவாதிக்கின்ற னர்.
இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த சீனா ஒருவருக்கு ஒருவர் என்று சட்டம் செய்து விட்டது; அதற்குமேல் பெற்றால் அபராதம் காத்திருக்கிறது.
இந்த மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து யாரும் கற்பனை செய்யாத காலகட்டத்திலேயே 1925களில் சிந்தித்தவர் - எச்சரித்தவர் தந்தை பெரியார்.
குடியரசாகி 10 ஆண்டுகளுக்குள் 14 வயதுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பதைக்கூட இந்தியாவில் நிறைவேற்றிட முடியவில்லை. அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடும் பரிதாபப் பள்ளத்தாக்கில் நாடு தலைகுப்புறத் தள்ளப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் கண்ணோட்டத்தில், மனித நேயக் கண்ணோட்டத்தில், மனித உரிமைக் கண் ணோட்டத்தில் பார்க்கப் போனால் குழந்தை களைப் பெற்றேடுக்கும் வெறும் எந்திரமாகப் பெண்கள் மாற்றப்படும் கொடுமை குறித்து யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
பெற்ற குழந்தைகளை அரசே எடுத்துக் கொள்ளும் சட்டம் வந்தால்கூட, குழந்தைப் பேறு என்பது பெண்களைச் சார்ந்ததாகத்தானே இருக்கிறது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் அரசுகள் தொலைநோக்கோடு சிந்தித்து திட் டங்களை உருவாக்கவேண்டும் - பிரச்சாரத்தை யும் முடுக்கிவிடவேண்டும்.
ஒன்றுக்குமேல் வேண்டாம் என்கிற சீனாவின் முழக்கம் உலகெங்கும் எதிரொலிக்கச் செய்ய வேண்டும். இவற்றைவிட பெற்றோர்கள் பொறுப் பான வகையில் சிந்தித்து குழந்தைகள் பெறு வதைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டியதும் மிகவும் அவசியமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...