அன்னாஹசாரே சமூக ஆர்வலர் என்றும், ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் என்றும் ஊடகங்கள் ஊதிக் காட்டின.
தொடக்கத்தில் அவர் பட்டினிப் போராட்டம் நடத்தியபோதே அவர் யார்? அவர் பின்னணி என்ன என்பது அம்பலமானது. ஆனாலும் பார்ப்பன ஊடகங்கள் அதைத் திரையிட்டு மறைத்தன.
அந்தக் கூட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான முழக்கங்கள் கிளம்பின. பின் திரையில் சங்பரிவார் பயன்படுத்தும் பாரத மாதா படம் இடம் பெற்றது. அவரைச் சுற்றிலும் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி., புள்ளிகள் வட்டமிட்டிருந்தனர்.
ஆனாலும் ஹசாரே தான் எந்த அமைப்பையும் சார்ந்தவன் அல்ல; எனக்குப் பல தரப்பினரும் ஆதரவு காட்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று சமாளித்தார்.
அரியானாவில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். அதனால் பி.ஜே.பி. பலன் பெற்றது. தான் கூறும் வகையில் லோக் பால் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு முழுதும் காங்கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக மிரட்டி வருகிறார்.
இந்த லஞ்ச எதிர்ப்புப் பிரச்சாரத்தால் அரசியல் ரீதியாகப் பலன் அடைவோர் பி.ஜே.பி.யினர் என்பது தெரிந்த ஒன்றே!
நியாயமான ஊழல் எதிர்ப்பில் அவருக்கு அக்கறையும், ஆர்வமும் இருந்திருக்குமே யானால், அதனை எடியூரப்பாவின் கருநாடக மாநிலத்திலிருந்துதான் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். தொடங்கப்படாததோடு மட்டுமல்ல; அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் மெகா ஊழல் பற்றி ஒரு வார்த்தையைக்கூட விமர்சிக்க அவர் தயாராக இல்லை.
ஆர்.எஸ்.எஸ். இன் அகில இந்தியத் தலைவர் மோகன் ராவ் பகத் ஓர் உண்மையைப் போட்டு செதிர்காயாக உடைத்து விட்டார். ஆம் கோணிப்பைக்குள்ளிருந்த பூனை வெளியே வந்துவிட்டது!
அன்னாஹசாரே ஆர்.எஸ்.எஸ் உடன் நீண்ட காலமாகத் தொடர்பு கொண்டவர்; ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தும்படி நாங்கள் தான் அவரைக் கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில்தான் அவர் இந்தக் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார். ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ளும்படி ஹசாரே கேட்டிருந்தால் நாங்களும் பங்கு கொண்டு இருப்போம்.
ஆனாலும் ஆங்காங்கே ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பங்கு கொள்வதை நாங்கள் தடுக்கவில்லை.
ஹசாரேயின் கிராம முன்னேற்றத் திட்டங் களைப்பற்றி விளம்பரம் அளித்ததே நாங்கள் தான்; எங்களின் கிராம முன்னேற்றத் திட்டங்களிலும்கூட அவரின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த மாதிரியான தொடர்பு இருந்த நேரத்தில்தான் ஊழலுக்கு எதிரான இயக்கம் ஒன்றை நடத்துமாறு நாங்கள் ஆலோசனை கூறினோம். ஜூன் மாதத்தில் அவரை நான் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்க நேர்ந்து விட்டது என்று பகவத் பட்டாங்கமாகத் தெரிவித்து விட்டாரே!
ஆர்.எஸ்.எஸ்., பல்வேறு அவதாரங்களை உருமாற்றங்களை எடுக்கக் கூடியது. அதில் ஒன்றுதான் இந்த ஊழல் ஒழிப்பு இயக்கம்.
ஊழல் ஒழிப்பு என்ற பெயரால் மதவாத சக்திகள் அதிகாரத்தைக் கை பிடிக்கத் துடிக்கின்றன. பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
பசுத்தோல் போர்த்திய ஓநாய்களிடம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:
Post a Comment