Saturday, November 12, 2011

தைவான் நாட்டு லுங்க்வா அறிவியல் - தொழில் நுட்ப பல்கலைக் கழகத்துடன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்


தைவான் நாட்டில் லுங்க்வா பல்கலைக் கழகமும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் 10.11.2011 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி லுங்க்வா பல்கலைக் கழக தலைவர் டாக்டர்  டுசு சியாங் கோ ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. நல். ராமச்சந்திரன், பேரா. பாவ்சிசென் உடன் உள்ளார்.


தைபேய், நவ.12- தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தைவான் நாட்டில் உள்ள லூங்க்வா அறிவியல் தொழில் பல்கலைக் கழகமும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. பெரியார் பற்றியும், பெரியார் கல்வி நிறுவனங்களின் பணிபற்றியும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி எடுத்துக் கூறினார். பின்னர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று பல்கலைக் கழகத்தாரும் விவாதித்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், தைவான், தைபேய்யில் இயங்கும் லூங்க்வா அறிவியல், மற்றும் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு 10.11.2011 அன்று கையொப்பமிட்டு ஒப்பந்த பிரதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

உலகளாவிய நிலையில் எடுத்துச் செல்ல

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தனது கல்வி,  நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங் களோடு ஒப்பந்தங்கள் உருவாக்கம் மட்டுமல்லாமல் உலக நாடுகளான அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு ஒப்பந்தம் செய்து உலக அரங்கில் வளர தொடர்ந்து தனது பணியினை செயல்படுத்தி வருகின்றது.

இதன் தொடர்பணியாக அறிவியல் தொழில் ஒப்பந்தத்திலும், தொழிலிலும் மற்ற வளர்ந்த நாடுகளோடு போட்டி போட்டு வளர்ந்து வரும் தைவான் நாட்டோடும் தனது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று அந்நாட்டில் சிறப்பாக இயங்கி வரும். லூங்க்வா அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி அதனை செயல் படுத்துகின்ற விதத்தில் 10.11.2011 அன்று மதியம் 2.30 மணியளவில், செயல் வடிவத்திற்கு வந்துள்ளது என்பது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் தொடர் கல்விப் பணியில் ஒரு மைல் கல் என குறிப்பிட்டால் அது மிகையாகாது.

வேந்தர் கி. வீரமணி ஒப்பந்தத்தில் கையொப்பம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்  செயல்படுத்தும் நோக்கில் தைவான், பல்கலைக் கழகத்தின் தலைவர் (வேந்தர் அழைப்பின் பேரில் நமது பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி, துணைவேந்தர் டாக்டர் நல். இராமச் சந்திரன் ஆகிய இருவரும் தைவான் நாட்டுக்குச் சென்று 10.11.2011 மதியம் 2.30 மணியளவில் ஒப்பந் தத்தில் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந் தத்தை அடுத்த மூன்று வருடங்களுக்கு நடை முறைப்படுத்த வழிகோலினர். இந்த நிகழ்ச்சிக்குச் சென்ற வேந்தர் மற்றும் துணைவேந்தரை பல்கலைக் கழக நுழைவாயிலில் லூங்க்வா பல்கலைக் கழகத்தின் வெயிஸ்டு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் போ-லூன்சங் வரவேற்றார்.

அனைத்தும் துறைகளிலும் ஒளிபரப்பு

பல்கலைக் கழக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய  LED  தகவல் பலகையில் ஒப்பந்தம் குறித்தும்  Welcome to Periyar Maniammai University, Vallam, Thanjavur, India  என்றும் தொடர்ந்து நாள் முழுமைக்கும் அதை பல்கலைக் கழக அனைத்து துறைகளிலும் ஒளிபரப்புச் செய்திருந் தனர்.

பின்னர் வேந்தர், துணைவேந்தரை ஒப்பந்தம் கையொப்பமிடும் அரங் கிற்கு அழைத்து சென்றார்.

அனைவரையும் அறிமுகப்படுத்தினர்

அங்கு லூவ்க்வா பல்கலைக் கழகத்தின் சார்பில் நிகழ்ச்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திய பல்கலைக் கழக மூத்த பேராசிரியர் மற்றும் முதன்மையரான பேராசிரியர் டாக்டர் பாவ்ஃசீசென்  நம் வேந்தரை வரவேற்று கருத்தரங்க அறையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பேராசிரியர்கள் டாக்டர் ஷிங்க்ரிக்கி டெங்  டாக்டர் ரோஸலின் ஸி-லிங்-சு  பேராசிரியர் குர்மீத் சிங், பேராசிரியர் குர்மீத்கவுர், டாக்டர் ஆவென், டாக்டர் சுங்க்மிங் லீயு, டாக்டர் டாலுன் சங்க், டாக்டர் யென்ஜென் சென் மற்றும் பன்னாட்டு மய்யத்தின் பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதேபோல் நமது வேந்தரும், துணைவேந்தர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தமிழர்கள் (தைவான் நாட்டில் ஆராய்ச்சியாளர் களாக இருப்பவர்கள்) டாக்டர் மகேஷ், திரு. ஜோசப், திரு. சகோதரர் பெனடிகட் சந்தோஷ் ஆகியோரை  அறிமுகப்படுத்தினார்.

பெரியார் பல்கலைபற்றி வேந்தர் கி.வீரமணி விளக்கம்


தொடர்ந்து, நிகழ்ச்சியின் வர வேற்புரையை பேராசிரியர் சென் நிகழ்த்தினார். அதன்பின் லுங்க்வா பல்கலைக் கழக கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தமான ஒலி, ஒளி விளக்க குறும்படம், திரையிடப் பட்டது. தொடர்ந்து நம் பல்கலைக் கழகப் பணிகளை வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் எடுத்துக் கூறிய பின்  நம் பல்கலைக் கழக கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தனித் தன்மை யினை துணைவேந்தர் அவர்கள் விளக்கி (Power Point Presentation) மூலமாக எடுத்து விளக்கி கூறியதை அனைத்து பேராசிரியர்களும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு இந்த ஒப்பந்தத் தினை விரைவில் செயல்படுத்தும் வண்ணம் உற்சாகத்தை வெளிப்படுத் தினர்.

ஒப்பந்த பிரதியை மாற்றிக் கொண்டனர்

நிகழ்வின் அடுத்த பகுதியாக புரிந்துணர்வு, ஒப்பந்த கையெப்பமிடு தலும், ஒப்பந்த பிரதியை மாற்றிக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றன. நம் பல்கலைக் கழகத்தின் சார்பில் வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்களும், லுங்க்வா பல்கலைக் கழகச் சார்பில் அதன் தலைவர் (வேந்தர்) டாக்டர் டுசு-சியாங் கோ அவர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இதனை துணைவேந்தர் பேரா. நல். இராமச் சந்திரனும், பேரா.பாவ்சி.சென்னும் கையொப்பமிட்டு நிகழ்ச்சியில் முன்னிலை பொறுப்பை வகித்தனர். பின்னர் ஒப்பந்த பிரதிகளை வேந்தர் டாக்டர் கி. வீரமணி, லுங்க்வா பல்கலைக் கழகத்தின் சார்பாக பேசா பாவ்-சிசென் ஆகிய இருவரும் பரிமாறிக் கொண்டனர்.

லுங்க்வா பல்கலைக் கழகம்

பின்னர் லுங்க்வா பல்கலைக் கழகத்தின் பல்வேறு பொறியியல் துறைகள், நூல்கள், ஆய்வு மய்யங் களை சுற்றி பார்த்தபின் சிறிய தேநீர் விருந்திற்கு பின் நன்றி, அறிவிப் பினையும், தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை, நடைமுறைப் படுத்தும் பணிகள் பற்றி விவாதிக்கப் பட்டது.

நம் பல்கலைக் கழகம் வர சம்மதம்

நிகழ்ச்சியை தொடர்ந்து பேராசிரி யர் டாக்டர் ரோஸலின் அவர்கள் டிசம்பர் 2011-இல் நமது பல்கலைக் கழகத்திற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார். இவர் நானோ தொழில் நுட்பத்தில் சிறந்த பேராசிரியராகவும், ஆய்வியல் வல்லு நராகவும் உள்ளவர் என்பது குறிப் பிடத்தக்கது.

நினைவுப் பரிசு பொன்னாடை

இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதன்மையர்கள், பேராசிரியர்களுக்கு நம் பல்கலைக் கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசும் பொன்னாடைகளும் அளித்து, பல் கலைக் கழக வேந்தர் கி. வீரமணி அவர்கள் சிறப்பித்தார். அதேபோல லுங்க்வா பல்கலைக் கழக நிருவாகத்தின் சார்பில் நம் வேந்த ருக்கும், துணைவேந்தருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பெரியார் நூல்கள் - குறுந்தகடுவுகள் அளிப்பு
லுங்க்வா பல்கலைக் நூலகத்திற்கு வரும் மாணவர்கள், பேராசிரியர் களுக்கு உதவும் வண்ணம் தந்தை பெரியார் புத்தகங்கள், பெரியார் திரைப்பட குறுந்தகடுகளை அந்தப் பல்கலைக் கழகத்திற்கு வேந்தர் அவர்கள் வழங்கினார்கள்.

(குறிப்பு: லுங்க்வா பல்கலைக் கழக வேந்தர், அவசரப் பணியின் நிமித்த மாக இந்நிகழ்வில் பங்கேற்க இய லாமையை அப்பல்கலைக் கழக மூத்த பேராசிரியர் டாக்டர் பாவ்ஃசி சென் விளக்கினார். அவர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் சார்பாக நிகழ்ச்சி முழுவதையும் தலைமையேற்று நடத் தினர்.

தைவான் நாட்டில் 164 பல்கலைக் கழகங்கள்

தைவான் நாட்டில் 164  பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 93 பல்கலைக் கழகங்கள் அறிவியல் மற்றும் தொழில் நுட் பத்தை சார்ந்தவை. மீதமுள்ள 71 பல்கலைக், கழகங்கள், பொதுப் பல்கலைக் கழகங்களாகும். அந் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில், நுட்ப பல்கலைக் கழக பல்கலையில், தனியார் நடத்தும் பல்கலைக் கழகங்களில் லுங்க்வா அந்நாட்டின் இரண்டாம் இடத்தைப் பெற்று இயங்கி வரும் சிறப்பான பல்கலைக் கழகமாகும்.

ஆக இந்த ஒப்பந்தம், வரும் காலங்களில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும், லூங்க்வா பல்கலைக் கழகமும் இணைந்து செயல்படுவதன் மூலம் ஒரு நல்ல பணியினை வெளி உலகுக்கு கட்ட ஒருசிறந்த வாய்ப்பு என்றே கூறலாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...