Sunday, November 13, 2011

திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை தமிழக அரசுக்கு வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!




திருச்சி, நவ. 12-திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை கலந்துரை யாடல் கூட்டம் திருச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வில்லையென்றால் போராட்டத்தில் இறங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்று கூட்டத் தில் தீர்மானிக்கப்பட்டது.
திருச்சியில் திராவிடர் தொழி லாளர் கழகப் பேரவை இணைப்புச் சங்கங்களின் கலந்துரை யாடல் கூட்டம் 6.11.2011 காலை 11 மணியள வில் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் நடை பெற்றது.
தி.தொ.க பேரவை தலைவர் ஆ.நாக லிங்கம் தலைமையேற்றார். திருச்சி அரசு போக்குவரத்து திராவிடர் தொழிலாளர் சங்க அமைப்பாளர் விஜயேந்திரன் வரவேற்புரையாற்றி னார். பேரவை பொதுச்செயலாளர் ம.ஆறுமுகம் துவக்கவுரை யாற்றினார். திருச்சி மாவட்ட அமைப்புசாராத் திராவிடர் தொழிலாளர் சங்கத் தலைவர் திராவிடன் கார்த்திக் நன்றியுரையாற்றினார். இதில் பேரவை துணைத்தலைவர் திண்டுக்கல் மோகன், பேரவைத் துணைத் தலைவர் காரைக்குடி கோவிந்தராசு, தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர் குருசாமி, தஞ்சை புறநகர் மா.வீரமணி, ஜெ. மாணிக்கவாசகம், அமைப்புசாராத் திராவிடர் தொழிலாளர் சங்க செய லாளர் ஜோ.பி.சேவியர், பொருளாளர் செல்வகுமார், ஆட்டோ பழனி திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச் சுடர் உள்ளிட்ட தோழர் கள் கருத்துரையாற்றினர்.
தீர்மானங்கள்
இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 1. தமிழினத்தின் போர்வாளாம் விடுதலை இதழுக்கு ஆசிரியராகத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொறுப்பேற்று அய்ம்பது ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி 50,000 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என திராவிடர் கழக மத்திய நிருவாகக்குழுவில் எடுக்கப் பட்ட தீர்மானத்தின்படி திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் சார்பாக அதிக அளவில் சந்தாக் களைச் சேர்த்து வழங்குவது என தீர்மானிக்கப் படுகிறது.
2.அரசுப்போக்குவரத்துக் கழகத் தில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக் கும் 1.9.2010இல் ஒப்புக் கொண்டபடி 2003ஆம் ஆண்டு 9 சதவிகித ஊதிய உயர்வும், 2007ஆம் ஆண்டு 12 சதவிகித ஊதிய உயர்வும், 2010ஆம் ஆண்டுக் கான ஊதிய உயர்வும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் அது இது வரை வழங்கப்படவில்லை. அத்துடன் 2011 ஜனவரி 1 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படியும் ஜூலை 1 முதல் வழங்கப்பட வேண் டிய 7 சதவிகித அகவிலைப்படியும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலை கருதி இப்பணப்பலன்களை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசையும், போக்கு வரத்துத்துறை அமைச்சரையும் இப்பேரவை  கேட்டுக்கொள்கிறது.
3.பணியில் உள்ள தொழிலா ளர்களுக்கு ஜூலை 2011 முதல் ஏழு சதவிகித அகவிலைப்படி வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டும் இது வரை வழங்கப்படாமல் காலம் கடத்துவது அனைத்துப் போக்கு வரத்துத் தொழிலாளர்களையும் கவலையில் ஆழ்த்தி யுள்ளது. இதனால் பல்வேறு தொழிற்சங்கங் களும் போராட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டிய தவிர்க்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, இந்த அகவிலைப்படியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சரை இப்பேரவை கேட்டுக் கொள்கிறது.
4.தமிழக அரசுப்போக்குவரத்துத் துறையில் தற்போதுள்ள பணியாளர் எண்ணிக்கை இரண்டு சிப்டுகள் மட்டுமே பேருந்து இயக்கத்தைக் கணக்கில்கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழக அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையைக் கருத்தில்கொண்டும் விடுப்புகள் எண்ணிக்கையைக் கருத்தில்கொண் டும் பணியாளர் விகிதத்தை அனைத் துப் பிரிவிற்கும் உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
5.தமிழ்நாடு அரசுப்போக்கு வரத்துக் கழகங்களில் தொழில் நுட்பப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வேலைப் பளுவினை நிருவாகமே தன்னிச்சையாகக் கூட்டி யுள்ளது. இதனைத் தவிர்த்து தொழிற் சங்கங்களுடன் கலந்துபேசி வேலைப் பளுவைக் குறைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும். போக்குவரத்துப் பிரிவில் தொழிலா ளர்கள் பணி செய்யும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தடநீட்டிப்பு, கூடுதல் கிலோமீட்டர் இயக்கத்தக்க வகையில் கூடுதலாக நடைகளை இயக்க வலியுறுத்துவது ஆகியவை களைத் தவிர்த்து பணியாளர் நலன் போக்குவரத்துக் கழகங்களின் நலன் விபத்துகளைத் தவிர்த்தல், விபத்து இழப்பீட்டுத் தொகை தவிர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு நகரப் பேருந்து, மாவட்ட பேருந்து, விரைவுப்பேருந்து ஆகியவை இயக்கப் படும் சாலைகளின் வகைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நாள் ஒன்றுக்கு இயக்கப்பட வேண்டிய கிலோ மீட்டர் மற்றும் வேலைநேரம் ஆகிய வற்றைத் தொழிற்சங்கங்க ளோடு கலந்துபேசி நிர்ணயம் செய்ய வேண்டுமாய் தமிழக போக்கு வரத்துத் துறையை இப்பேரவை கேட்டுக் கொள்கிறது.
6. (அ) அரசுப்போக்குவரத்துப் பணியாளர் களுக்கு பணி ஆரம் பிக்கும்நேரம், பணி முடியும் நேரம் தவிர்த்து ஏழுமணிநேரம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிபுரியும் வகையில் அவர்களது வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டு மாய் இப்பேரவை தமிழக போக்கு வரத்துத் துறையைக் கேட்டுக்கொள் கிறது.
(ஆ)  தொழிலாளர் பணிக்கு வந்தும் பணி தர இயலவில்லை என்றால் நிருவாகம் அன்றைய தினத்திற்கு அட்டென்டன்ஸ் தரவேண்டும் என்று போக்குவரத்துத்துறையை இப் பேரவை கேட்டுக் கொள்கிறது.
(இ) டெர்மினசில் வண்டி காத்தி ருக்கும் நேரத்தையும் வேலை நேர மாய்க் கருத்தில் கொள்ள வேண்டு மாய் போக்குவரத்துத் துறையை இப் பேரவை கேட்டுக்கொள்கிறது.
(ஈ) தொழில்நுட்ப பணியாளரின் இரவுப்பணி நேரத்தை ஆறு மணி நேரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்துத் துறையை வலியுறுத்துகிறோம்.
7.போக்குவரத்துத் துறையிலுள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்குப் போதிய அளவில் தொழில் நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கை இல் லாமல் மிகவும் குறைவாக இருப்ப தால் புதிய பேருந்துகள் பழுதாகாமல் பராமரிப்பதிலும் அனைத்துப் பேருந்துகளையும் முறையாகப் பராம ரிக்கவும் இயலாத சூழ்நிலை உள்ளது. இதனைத்தவிர்க்க தேவையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டுமாய் போக்கு வரத் துத்துறையைக் கேட்டுக்கொள்கி றோம்.
8.(அ) போக்குவரத்துக் கழகங் களின் தலைமை யகத்தில் உள்நோ யாளிகளாகச் சிகிச்சை பெறுகின்ற வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை உரு வாக்க வேண்டுமாய் தமிழக அரசை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது.
(ஆ). திண்டுக்கல், காரைக்குடி மற்றும் சில போக்குவரத்துக் கழக மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், எவருமின்றி மருத்துவ மனைகள் இயங்கி வருகின்றன. இதனை உடனடியாக ஆய்வு செய்து அம்மாதிரியான மருத்துவமனை களில் போதிய மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்யு மாறு தமிழக அரசை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது.
9.போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்களுக்கு டபுள் டூட்டி வழங்கப் படுவது பொதுவாக தவிர்க்கப் பட வேண்டும். தவிர்க்க இயலாத காரணத் தால் டபுள் டூட்டி செய்யும் தொழிலா ளர்களுக்கு கழகத் திற்குக் கழகம் மாறுபட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற போக்குவரத்துக் கழக ஊதிய ஒப்பந்தத்தில் கூறப்பட் டுள்ளவாறு ஒருநாள் சம்பளம் வழங்கப்படுவதில்லை. எனவே, அனைத்துப் போக்குவரத்துக் கழகங் களிலும் ஒரே மாதிரியாக டபுள் டூட்டிக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்குமாறு தமிழ்நாடு அரசை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது.
10. திருச்சி பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் ஊழியர்களைப் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல்கள் கேட்ட தற்கு அவர்கள் யாருமே தொடர்ச்சி யாகப் பணிபுரியவில்லை என்றும் அதிகபட்சமாக 240 நாட்களுக்குள் பணியாற்றுகிறார்கள் என்றும் தவறான தகவலை நிருவாகம் தந்தது. அது தவறு என்று நிரூபிக்க ஓய்வு பெற்ற ஊழியர்கள் எத்தனை பேர் அவர்கள் பணியில் சேர்ந்த தேதி ஓய்வுபெற்ற தேதி அவர்களின் மொத்த பணிக்காலம் ஆகியவற்றை யும் தற்போது பணியாற்றிக் கொண்டி ருப்ப வர்கள் பணியில் சேர்த்த தேதி அவர்களின் மொத்த பணிக்காலம் ஆகியவற்றையும் கேட்டதற்கு தகவல் அறியும் அலுவலர் தகவல் அளிக்க மறுத்துள்ளார். அதனால் அதில் மேல்முறையீடு செய்யப்பட்டு அதற் கும் ஒரு மாதம் கடந்தும் பதிலளிக்க மேல் முறையீட்டு அதிகாரி மறுத் துள்ளார். எனவே தகவல் ஆணையத் துக்கு புகார் அளிப்பது என தீர்மா னிக்கப்படுகிறது.
11.குடந்தை மண்டல அரசுப் போக்குவரத்துத் திராவிடர் தொழி லாளர் சங்கத்துக்குக் கீழ்க்கண்ட நிருவாகிகள் நியமிக்கப்பட்டனர்.
தலைவர்: மா.வீரமணி, துணைத் தலைவர்: இரா.இரவிச்சந்திரன், பொதுச்செயலாளர்: க.குரு சாமி, துணைச் செயலாளர்: எஸ்.வீரமணி, பொரு ளாளர்: தன.சஞ்சீவி, பேரவை மாநில துணைச் செயலாளர் கு.கவுத மன், இறுதியாக நன்றி கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...