Monday, November 14, 2011

சோவுக்கு பகவத்தின் சவுக்கடி!





பி.ஜே.பி.யின் செய்தித் தொடர் பாளராகவும் குஜ ராத் முதல் அமைச் சர் நரேந்திர மோடி யின் ஏஜெண்டாக வும் இருக்கக்கூடி யவர் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள்! இவ்வார துக்ளக்கில் (16.11.2011 பக்கம் 21) கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கும், அன்னா ஹசாரேவுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஓங்கி அடித்து எழுதியிருக்கிறார்.

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள் என்று வைத்திருக்கிறார்கள். ஆனால் சோவின் புளுகுக்கு அத்தனை நாள் தேவைப்படப் போவதில்லை.

ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் மோகன்ராம் பகவத் - அன்னா ஹசாரேவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பை நடுவீதியில் போட்டு உடைத்துவிட்டார்.

அன்னா ஹசாரேவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு; ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தும்படி சொன்னதே நாங்கள்தான் என்று கோணிப்பைக்குள் இருந்த பூனையை அவிழ்த்து வெளியில் தூக்கி எறிந்து விட்டாரே. ஆர்.எஸ்.எஸ். தலைவர். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (10-11-2011) முதல் பக்கத்தில் பளிச்சென்று தெரியும்படி வெளி யிட்டுவிட்டதே.

திருவாளர் சோ அய்யர் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...