Monday, November 14, 2011

கிரீமிலேயருக்கான உச்சவரம்பு

தேசியப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆணை யம் திரு எம்.என். ராவ் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருந்தவர் இவர். தனது விரிந்த வருமானங்களை யெல்லாம்கூட தூக்கி எறிந்து விட்டு ஒரு சமூகத் தொண்டு என்கிற அடிப்படையில் இந்தப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளது - சமூகநீதித் திசையில் அரிய வாய்ப்பாகும்.
மத்திய அரசுக்கு இவர் செய்துள்ள பரிந்துரை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மண்டல் குழுப் பரிந்துரை தொடர்பான  தீர்ப்பில் உச்சநீதிமன்ற அமர்வு - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் இடம் பெறாத பொருளாதார அளவுகோல் (Creamy Layer)   என்ற ஒன்றைப் புதிதாகக் கண்டு பிடித்துத் தன் மனம் போன போக்கில் திணித்தது.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே அதனை மிக வன்மையாகக் கண்டித்தது - எதிர்த்தது திராவிடர் கழகம்தான்.

அதன் விளைவாக ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள்  மாதச் சம்பளக்காரர்கள், விவசாய வருமானக்காரர்களுக்கு விதி விலக்கு என்றெல்லாம் கூறப்பட்டது. அதன் பின்னர் நாலரை லட்சம் ரூபாய் வரை வருமானம் இருக்கலாம் என்று உச்ச வரம்பு விதிக்கப்பட்டது.

இப்பொழுது அதனை மேலும் உயர்த்தக் கோரி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி நகரப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம், கிராமப்புறங்களில் ரூ.9 லட்சம் வரை விதிவிலக்கு அளிக்கலாம் என்று மத்திய அரசின் பரிந்துரையில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது வரவேற்கத் தகுந்தது. உடனடியாக  இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அடுத்து இந்தப் பொருளாதார அளவுகோலை முற்றிலும் தூக்கி எறிய வேண்டியது அவசியமாகும்.

இந்தப் பிரச்சினையில் தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ள புள்ளி விவரமும், கருத்தும் மிகவும் நோக்கத்தக்கதாகும்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு  ஆணை நிர்ணயிக்கப்பட்டதால், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கான இடங்கள் காலியாக இருப்பதை ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.  இது மிகவும் கவனத்துக்கு உரியது மட்டுமல்ல - உடன டியாகப்  பரிகாரம்  காணப்பட வேண்டியதுமாகும்.

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருந்தாலும்  பிற்படுத் தப்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் - பொருளாதார அளவுகோல் போன்ற முட்டுக்கட்டைகளால் அவர்கள் மத்திய அரசு துறைகளில் பெற்று இருக்கக் கூடிய வேலை வாய்ப்பு சதவிகிதம்  வீழ்ச்சி அடைந்துள்ளது. 

மத்திய அரசுப் பணிகளில் ஏ பிரிவு உத்தி யோகங்களில் வெறும் அய்ந்தரை சதவிகிதமும், பி பிரிவு பணிகளில் வெறும் மூன்று புள்ளி ஒன்பது சதவிகிதமும், சி பிரிவுப் பணிகளில் எட்டுப்புள்ளி ஒன்று சதவிகிதமும் டி பிரிவில் அய்ந்து சதவிகிதமும் தான் கிடைக்கப் பெற்றுள்ளன என்றால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ள பரிந்துரை எத்தனை மடங்கு  அதி முக்கியமானது என்பதை உடனடியாகவே தெரிந்து கொள்ளலாமே.

மண்டல் குழுப் பரிந்துரை அறிக்கை கூறும் புள்ளி விவரப்படி பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தியாவில் 52 விழுக்காடாகும். ஆம் அவர்கள் தான் பெரும்பான்மை யான மக்கள். பெரும்பான்மையான மக்கள் கையில் அதிகாரம் இருப்பதுதான் ஜனநாயக கோட்பாட்டுக் கான இலக்கணமாகும். 

அதிக பாதிப்புக்கு ஆளான மக்கள் என்கிற முறையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய முக்கியத்துவமும், முதன்மையும் முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது மாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஆளும் நிலையில் உள்ளவர்கள் இதுகுறித்து சிந்தித்தவர் களாகவே தெரியவில்லை. அவர்களுக்கு ஆலோ சனைக் கர்த்தாக்களாக இருக்கக் கூடியவர்கள் எல்லாம் சமூகநீதிக்கு எதிரானவர்கள் - பெரும்பாலும் பார்ப்பனர்களே!

இதன் காரணமாகவே இடஒதுக்கீடுப் பிரச் சினையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஓர் அளவுகோல், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான அளவுகோல் என்று ஏற்பாடு செய்து பிரித்தாளும் பிரிட்டானிய தந்திரத்தை இந்தப் பார்ப்பனர்கள் கையாண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து நாளை பேசுவோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...