Wednesday, November 16, 2011

ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் எதனைச் சேகரித்து வைத்துள்ளன?


ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் கொழுப்பை சேர்த்து வைத்திருக்கின் றன.
அவற்றில் தண்ணீர் சேமித்து வைக்கப்படுவ தில்லை. உபரி ஆற்றலாக கொழுப்பை ஒட்டகங்கள் அவற்றில் சேமித்து வைத் துக் கொள்ளுகின்றன. அவற்றின் உடல் முழுவ திலும், குறிப்பாக அவற்றின் ரத்த ஓட்டத்தில்,  தண்ணீர் சேமித்து வைத்துக் கொள் ளப்படுகிறது. இதன் காரணமாக அவற்றிற்கு எப்போதுமே நீர் பற்றாக்குறை நோய் ஏற்படுவதில்லை.
நீர் பற்றாக்குறை நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே தங்களின் உடல் எடையில் 40 சதவிகித எடையை ஒட்டகங்களால் இழக்க முடியும். தண்ணீர் குடிக் காமல்  ஏழு நாட்கள் வரை அவற்றால் இருக்க முடியும். தண்ணீர் குடிக்கும்போது ஒரே நேரத்தில் ஒரு ஒட்டகத்தால் 225 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க முடியும்.
ஒட்டகங்கள் பற்றிய ஆர்வம் அளிக்கும் சில உண்மைகள் இங்கே தரப்படுகின்றன. ஆனால் அவை அவற்றின் திமில்கள் பற்றியவை அல்ல.
நீண்ட நினைவாற்றல் கொண்டவை என்ற புகழை யானைகள் பெறுவதற்கு முன்பே, எதையுமே ஒட்டகங்கள் மறப்பதில்லை என்று பண்டைய கிரேக்கர்கள் நம்பினர்.
சலுகிகள் என்னும் பெர்சிய நாட்டு வேட்டை நாய்கள் ஒட்டகத்தின் மீதிருந்து வேட்டையாடும். ஒட்டகங்களின் கழுத்தின் மீது படுத்துக் கொண்டு மான்களை வேட்டையாடும் நாய்கள், மானைப் பார்த்தவுடன் அதன் மீது பாய்ந்து அதனைத் துரத்தி வேட்டையாடும். இந்த நாயினால் நிற்கும் இடத்திலிருந்து 6 மீட்டர் (20 அடி) தூரத்துக்கு தாவ முடியும்.
ஒட்டகங்கள் மனஅழுத்தத்தினால் தறிகெட்டுப் போக முடியும் என்பதை 1977 இல் டேவிட் டெய்லர் என்பவர் கவனித்தார். சில நேரங்களில் அவை மூர்க்கமடைந்து விடுகின்றன. அது போன்ற நேரங்களில் ஒட்டகக் காப்பாளர் தனது மேலங்கியை ஒட்டகத்திடம் போட்டுவிடுவார். அந்த மேலங்கியை மிதித்து, கடித்துக் குதறிப் போடும் ஒட்டகம் படிப்படியாகக் கோபம் தணிந்து தன் சுயநிலைக்குத் திரும்பிவிடும். மறுபடியும் மனிதர்களுடன் அது சகஜமாக வாழத் தொடங்கிவிடும்.
ஒட்டகப் பந்தயங்களில் ஓட்டுநர்களாக இளம் சிறுவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர். இதற்கு அரபிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், பெரும்பாலான நாடுகளில் அந்தத் தடையை மீறியே சிறுவர்கள் ஒட்டகப் பந்தயங் களில் பயன்படுத்தப்படுகின்றனர். இத்தகைய சிறுவர்களுக்கு வேண்டிய ஒரே தகுதி அவர்கள் எடை குறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும், அதிக அளவில் கூச்சல் போட இயன்றவர்களாக இருக்க வேண்டும் என்பதும்தான். இவ்வாறு கூச்சல் போடுவது ஒட்டகங்களை வேகமாக ஓடத் தூண்டுகிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General  Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...