தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
உலகில் உள்ள மனிதரால் உருவாக்கப்பட்ட கட்டடங்களில் எவை நிலவிலிருந்து தெரியும் ?சீன நெடுஞ்சுவர் என்று நீங்கள் கூறினால் அது சரியல்ல; தவறான விடையேயாகும்.ஏனென்றால், நிலவிலிருந்து வெறும் கண்ணால் பூமியில் உள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் எவற்றையும் காணமுடியாது என்பதுதான் உண்மை.நிலவிலிருந்து காண இயன்ற பூமியில் உள்ள மனிதரால் உருவாக்கப்பட்ட கட்டுமானம் சீன நெடுஞ்சுவர்தான் என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஆனால் அது வானத்தை நிலவுடன் குழப்பிக்கொள்வதாகும்.வானம் என்பது பூமிக்கு மிக அருகில் இருப்பதாகும். பூமியின் பரப்பில் இருந்து 100 கி.மீ. (60 மைல்) உயரத்தில் வானம் தொடங்குகிறது. அங்கிருந்து பூமியில் உள்ள பல கலைப் படைப்புகளைப் பார்க்கலாம்; சாலைகள், கடலில் செல்லும் கப்பல்கள், ரயில்பாதைகள், நகரங்கள், பயிர் நிலங்கள், சில தனிப்பட்ட கட்டடங்களைக் கூட வானத்தில் இருந்து வெறும் கண்ணால் பார்க்கலாம்.என்றாலும் பூமியின் வட்டப்பாதையில் இருந்து விலகி சில ஆயிரம் மைல்கள் உயரம் சென்றபிறகு, பூமியில் உள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்ட எதையுமே காணமுடியாது. 400,000 கி.மீ. (250,000 மைல்) தொலைவில் உள்ள நிலவில் இருந்து பூமியில் உள்ள கண்டங்கள் கூட தெளிவாகத் தெரியாது.உங்களுக்கு வேறு விதமாகக் கூறப்பட்டாலும், அதற்கும், சீன நெடுஞ்சுவரை மட்டுமே பார்க்கலாம் என்று கூறப்படுவதற்கும் இடைப்பட்ட நிலை என்று எதுவுமே இல்லை.(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:- மறுபரிசீலனை செய்வதே நன்மருந்து!
- ஊடகங்கள் திருந்துமா?
- சபாஷ், நீதிபதி மார்கண்டேய கட்ஜு!
- மக்கள் தொகை
- சபாஷ், சரியான போட்டி!
உலகில் உள்ள மனிதரால் உருவாக்கப்பட்ட கட்டடங்களில் எவை நிலவிலிருந்து தெரியும் ?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மறுபரிசீலனை செய்வதே நன்மருந்து!
- ஊடகங்கள் திருந்துமா?
- சபாஷ், நீதிபதி மார்கண்டேய கட்ஜு!
- மக்கள் தொகை
- சபாஷ், சரியான போட்டி!
No comments:
Post a Comment