Tuesday, November 1, 2011

ராமாயணத்தின் வளமையும், டில்லி பல்கலைக் கழகத்தின் வறுமையும் (2)


இந்தப் பிரச்சினை கல்வியியல் குழுவிற்கானதா? அல்லது அதனை முடிவு செய்ய வரலாற்றுத் துறை யிடமே விடப்பட்டிருக்க வேண்டுமா? இதனைப் பற்றி முடிவெடுக்க வரலாற்றுத் துறைக்கே விடப்பட்டி ருக்கவேண்டும்.  இந்தப் பிரச்னை நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது என்ற காரணத்தால் கல்வியியல் குழுவினர் பயந்துவிட்டனர் போலும்.

ராமானுஜனே ஒரு வரலாற்றா சிரியர் அல்ல என்றும்,  அவர் ஒரு கவிஞரும், நாட்டுப் புறக் கலைஞரும் மட்டும்தான் என்பதும் சுட்டிக் காட் டப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக உங்கள் கட்டுரையையோ, ஆர்.எஸ். சர்மாவின் கட்டுரையையோ வைக்க லாம் என்ற ஆலோசனை தெரிவிக் கப்பட்டபோது, நீங்கள் இருவரும் வரலாற்று ஆசிரியர்கள் என்பதும், மாற்றுத் துறையைச் சேர்ந்த ஒரு வரது கண்ணோட்டத்திற்கு மதிப்பு இருக்கும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்ட தல்லவா?

உண்மையிலேயே இது படைப் பாற்றல் மிக்க ஓர் அருமையான  கட்டுரையாகும். நாங்கள் அனைவரும் அதைப் பற்றி எழுதியிருக்கிறோம். ராமானுஜனின் கட்டுரையின் சிறப்பு என்னவென்றால், இது பற்றிய ஒரு வேறுபட்ட, மாறுபட்ட கண்ணோட் டத்தை உங்களால் பெற முடிகிறது என்பதுதான். மாணவனுக்கு அது தான் மிகவும் மதிப்பு வாய்ந்தது. கலாச்சாரத்தை அகண்ட முறையில் கையாளும் அது போன்றதொரு படிப்பில், அவ்வப்போது நீங்கள் மாறு பட்ட, வேறுபட்ட கண்ணோட்டத் தையும் பெறுவதும் அவசியமானதே.

எனவே அகண்ட ஒரு பிரச் சினையாக, பல துறைகளுக்கிடையே யான அணுகுமுறை ஒரு நல்ல விஷயமல்லவா? வரலாற்றுக் களத் திற்கு வெளியிலிருக்கும் அவைகளி லிருந்து கண்ணோட்டங்களைப் பெறு வதும் நல்ல விஷயமல்லவா?

அந்தக் கட்டுரையை ஒரு இயல்பியல் பேராசிரியர் படிப்பதையோ, கேள்வி கேட்பதையோ அல்லது வேறுபட்ட முடிவுகளுக்கு வருவ தையோ தடுப்பது எதுவும் இல்லை. அதே போல ஒரு வரலாற்றுப் பேரா சிரியர் இயல்பியல் பாடதிட்டத்தில் குறுக்கிடக்கூடாது; குறுக்கிட முடியாது. இயல்பியல் பேராசிரியர் வரலாற்று பாடதிட்டத்தில் குறுக்கிடு வதையும் அனுமதிக்க முடியாது.

துறைகளுக்கிடையேயான இத்தகைய மோதல்கள் பற்றிய மொத்த விவாதமும் அளிக்கக்கூடிய ஆர்வ முள்ள  விஷயம் என்னவென்றால், சமூக அறிவியல்கள் எப்போதுமே தாக் குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பது தான். அறிவியல் துறைகள் எப்போதுமே தாக்குதலுக்கு உள்ளானதில்லை.  அறி வியல் போதிக்கத் தகுதியற்றது என்று கூறி தன்னை முட்டாளாகக் காட்டிக் கொள்ள மக்கள் அஞ்சுகின்றனர் என்பது தான் இதன் காரணம்.

அதனால் அறி வியல் துறைகளைப் பற்றி எவருமே கேள்வி எழுப்புவதில்லை. ஆனால் சமூக அறி வியல் துறைகளைப் பற்றி எவர் வேண்டு மானாலும் விமர்சிக்கலாம்; எந்தவிதமான பின்னணி அறிவு இன்றியும் கூட விமர்சிக்கலாம்.  இவ்வாறு விமர்சிக்க நீங்கள் நிபுணராக இருக்க வேண்டிய தில்லை; இவை எல்லாம் பொது அறிவு தான்  என்ற ஓர் உணர்வும் நிலவுகிறது.

பல இந்தியர்களுக்கு, ராமா யணம் என்பது கல்வியியல் விவாதத் திற்கு உரிய வெறும் பண்டைய புராணக் கதையல்ல; அது அவர்களின் தற்கால மத நம்பிக்கைகளுமாகும். இதனால் இந்த விஷயத்தில் ஏதேனும் விட்டுக் கொடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ராமாயணம் என்பது வெறும் புராணக் கதை மட்டுமல்ல; அது மதநம்பிக்கையும் ஆகும் என்று நீங்கள் கூறியது மிகச் சரியானது. அது அவ்வாறு செய்யப் பட்டுள்ளது. வரலாற்றில் சிறிது பின் னோக்கிச் சென்று பார்த்தால், ராமாயண மும் மகாபாரதமும்  கதாநாயகர்கள் பற்றிய வெறும் இதிகாசக் கதைகள்தான் என்று பல கல்வியாளர்கள் தொடக்கத்தில் நம்பினார்கள் என்பதும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த நம்பிக்கையே தொடர்ந்து வந்தது என்றும் கூறலாம். அதன் பின்னர் அவை புனித இலக்கி யங்களாக  மாற்றப் பட்டு விட்டன.

ராமரும் கிருஷ்ணரும் மகாவிஷ்ணுவின் அவதாரங் களாக ஆக்கப்பட்டுவிட்டனர். பூனேயைச் சேர்ந்த வி.எஸ்.சுக்தாங்கர் என்பவர் இதனை மிக அருமையாக பகுத்தாய்வு செய்து கூறியிருக்கிறார்.

ப்ருகு பார்ப்பனர்கள் இந்த இதிகாசங்களை கடவுள் இலக்கியங்களாகவும்,அவற்றின் கதாநாயகர்களை விஷ்ணுவின் அவதாரங் களாகவும் மாற்றி விட்டனர் என்று அவர் கூறினார். அதன் பிறகு அவை புனித இலக்கியங்களாக ஆகி,  இன்று, இப் போது அவை புனித இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் அதன் உண்மையான ஆணிவேர் அதுவல்ல.

இரண்டாவதாக, அவை புனித இலக்கியங்களாக இருந்தாலும், புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண் டவைதான்.  புத்தமதம், ஜைனமதம் ஆகியவற்றிலிருந்து மிகவும் மாறுபட்டது இது. 

அம் மதங்களிலும் புராணக்கதைகள் உள்ளன; பலப்பல புராணக் கதைகள் உள்ளன. ஆனால் அதே நேரத்தில்,  ஒரு வரலாற்று நிறுவனர், எதைக் கற்பித் திருப்பாரோ அந்த வரலாற்று ஆதாரத்தை மய்யக் கருத்தாக அவை கொண்டிருக் கின்றன. இது முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு கதையாகும்.

தங்களது வேத நூல்களான குரான், பைபிள் ஆகியவையே உண்மை யானவை என்று நம்பும்  இஸ்லாம் மற்றும் கிறித்துவ மக்களிலிருந்து வேறு பட்டுள்ள  இந்து மக்களில் பெரும்பாலோர் அவ்வாறு எந்த ஒரு நூலையும் நம்புவதில்லையே?

இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீதிமன்றங்களை அவர்கள் நிறுவியபோது பல நெருக்கடிகளில் ஏற் பட்டன. அவற்றில்  ஒன்று,  நீதிமன்றங் களில் சாட்சியம் அளிப்பவர்கள்  பைபிள் மீது  பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என்பது போன்று, இந்தியாவில் அவ்வாறு பிரமாணம் எடுத்துக் கொள்ள இந்துக் களுக்கு எது புனிதமான நூல் என்று கேட்டு  ஓடித் திரிந்தனர்.

உங்களுக்கு பகவத் கீதை இருக்கிறது, ராமாயணம் இருக்கிறது, வேதங்கள் உள்ளன. உங்களிடம் எல்லா விதமான பதில்களும் உள்ளன. ஆனால் உங்களிடம் ஒரே ஒரு புனிதமான நூல் என்று கருதப்படுவது எதுவும் இல்லை. புனித நூல்கள் என்று கூறப்படுபவை ஏராளமாக இருக்கின்றன. இங்கு மறுபடியும் வேறுபாடு என்னும் கேள்வி எழுகிறது. இந்துக்களின் எந்த நூலை முதன்மையான புனித நூல் என்று ஒப்புக் கொள்கின்றனர்? யார் ஒப்புக் கொள்கின்றனர்?

இந்து புனித இலக்கியங்களின் நிச்சயமான பாடங்கள் இவைதான் என்ற கருத்தை உருவாக்குவதற்கான கட்டாய மான முயற்சிகளில்  ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்று சுக்தாங்கர் விவரித்தது போன்ற ஒரு மாற்றத்தை கடந்த சில பத்தாண்டு காலமாக நாம் பார்த்து வரவில்லையா?

ஆமாம். புனித இலக்கிய நூல்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்து மக்களின் நம்பிக்கையையும், வழிபாட்டையும் உருவாக்க வேண்டும் என்ற இந்த முயற்சி இருந்து வந்தது என்பது உண்மைதான்.

சர்வதேச அளவிலான மாறுபாடுகள் பற்றியும் ராமானுஜன் விவாதித்துள் ளாரே.

எடுத்துக்காட்டாக, தென் கிழக்கு ஆசியாவில், ராமாயணம் என்பது முற்றிலுமாக கலாச்சாரத்தை அடிப் படையாகக் கொண்டதுதான்.  ஆனால் அக்கதை வால்மீகி ராமாயணக்கதை அல்ல; அவர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட கதையாகும்.  பல பாடங்களில் உள்ள கதைகளின் அடிப்படை பகுதியாக இருப்பது சீதை ராவணனின் மகள் என்பதும், ராவணன் அதனை அறிந்திருக்கவில்லை என்பதும் தான்.

அச்செய்தி ரகசியமாக வைக்கப் பட்டிருந்ததே அதன் காரணம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த இந்துத்வ வாதிகள், இந்த ராமாயண பாடத்தை கற்பிக்கும் ஜாகர்தாவில் உள்ள பல்கலைக் கழகங்களையும், அங்குள்ள மற்ற இடங்களையும் அடித்து நொறுக்கப் போகிறார்களா?

இந்திய கலாச்சாரத்தைப் பரப்பி உலகமயமாக்க நாம் விரும்பும் ஒரு காலகட்டத்தில் இந்த பாட நீக்கம் நடந் துள்ளதே?

இந்தியாவில் தங்களது பல்கலைக் கழகக் கிளைகளை நிறுவுவதற்கு அமெரிக்காவில் உள்ள முதன்மையான பல்கலைக் கழகங்களை ஒப்புக் கொள்ளச் செய்யும் முயற்சிகளை இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அமெரிக்காவில் உட்கார்ந்து மேற் கொண்டு இருக்கும்போது டில்லியில் இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. சிகாகோ பல்கலைக் கழகத் தின் புகழ் பெற்ற, மதிப்பு மிக்க  பேரா சிரியர்களில்  ராமானுஜனும் ஒருவர்.

சிகாகோ பல்கலைக் கழகம் இந்தியாவில் தனது கிளையைத் துவக்க இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறது. இப்போது ராமானுஜன் உயிரோடு இருந்து, சிகாகோ பல்கலைக் கழகம் டில்லியில் கிளை திறக்குமேயானால் - இது இயலக் கூடியதுதான் - டில்லி பல்கலைக் கழகத்தின் முடிவு பற்றி அவர்களின் எதிர்வினை எவ்வாறு இருந்திருக்கும்? இவை அனைத்துமே நம்ப தகாதவையாக வும், இயல்பை மீறியவையாகவும் இருக் கின்றன.
ஆதாரம்: தி இந்து 28.10.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன் (நிறைவு)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...