விடுதலை ஏடு 93 நாடுகளில் வாசிக்கப்படுகிறது வேலூரில் தமிழர் தலைவர் பேச்சு
வேலூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 4.9.2011 அன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். உடன் வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், செய்யாறு அருணாச்சலம், ஒளிவண்ணன் ஆகியோர் உள்ளனர்.
வேலூர், நவ. 3- விடுதலை ஏடு 93 நாடுகளில் வாசிக்கப்படுகிறது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரை ஆற்றினார்.
வேலூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 4.9.2011 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
மனநிறைவோடு-எழுச்சியோடு
மிகுந்த எழுச்சியோடு மனநிறைவோடு வேலூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பிலே நடைபெறக்கூடிய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய 103ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா என்ற இந்த இரு பெரும் விழாக்கள் இன்று துவங்கி சிறப்பாக இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இன்றைய நிகழ்ச்சி எங்களைப் போன்ற பெரி யார் தொண்டர்களின் உள்ளத்திலே பெரியாரின் மாணவர்களாக இருக்கக்கூடிய எங்கள் உள்ளங் களிலே இந்த வேலூரிலே ஒரு அற்புதமான உணர்ச் சிப் பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை முதலாவது தெரிவித்துக்கொள்ள விழைகிறேன். (கைதட்டல்).
தமிழர்களின் சங்கமமாக நடத்துவது
மிக அருமையான விழாவாக வேலூர் தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் இனஉணர்வோடு மொழி உணர்வோடு பகுத்தறிவு உணர்வோடு நடைபெறக் கூடிய ஓர் அற்புதமான விழாவாக நடத்துவது பாராட்டத்தக்கது.
பல ஊர்களிலே பல சங்கங்கள் உண்டு. அவை தமிழர்கள் சங்கமாக இருந்ததில்லை. தமிழர்கள் சங்கமாக இருப்பது மட்டுமல்ல. தமிழ்ச்சங்கம், தமிழர்கள் சங்கம் அதைவிட மொழியால் தமிழர்கள் சங்கம் இனத்தால் திராவிடர்கள் சங்கம் என்ற பெருமையோடு நடைபெறக்கூடிய ஒவ்வொரு அடியையும் சிறப்பாக எடுத்து வைக்கக்கூடிய இந்த அமைப்பைப் பாராட்டுகின்றோம்.
எங்களை உருவாக்கியவர் வெண்தாடி வேந்தர்
எங்களை எல்லாம் பல்கலைக் கழக வேந்தர் என்று அழைக்கிறார்கள். இங்கே வி.அய்.டி பல் கலைக் கழக வேந்தர் விசுவநாதன் அவர்களும் அமர்ந்திருக்கிறார்கள்.
எங்களை எல்லாம் உருவாக்கியவர் வெண்தாடி வேந்தர் நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். முதலமைச்சரான நிலையிலே அண்ணா திருச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத் திலே அய்யா அவர்களை வைத்துக்கொண்டு சொன்னார்.
பெரியார் புகழின் சிதறல்கள்
தமிழகத்திலே எந்தக் கட்சித் தலைவரை நீங்கள் எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அவர்கள் எல்லாம் யார்? அவர்களுக்கெல்லாம் சரியான அறிமுகம் என்ன என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டு மானால் என்று கூறிவிட்டு சொன்னார்.
அண்ணா முதலமைச்சரானவுடன் திருச்சிராப் பள்ளியில் ஓர் நிகழ்ச்சி. அரசாங்க மருத்துவ மனையில் குழந்தைகள் பகுதியை உருவாக்குவ தற்காக பெரியார் ரூ.ஒரு லட்சம் நன்கொடை கொடுத்தார். அப்பொழுது அண்ணா அவர்கள் அமைச்சர் களை வைத்துக்கொண்டு அந்த விழாவிலே சொன்னார். தமிழகத்திலே இருக்கின்ற எந்தக்கட்சித் தலைவராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சரியான அறிமுகம் ஒரே வரியிலே சொல்லவேண்டுமானால் பெரியார் புகழின் சிதறல்கள் என்று அற்புதமாகச் சொன்னார்.
அப்படிப்பட்ட நிலையிலே நாங்கள் யார் என்ன நிலையிலே இருந்தாலும் நாம் எவ்வளவு பெரியவர் களாக இருந்தாலும் தமிழர்கள்-திராவிடர்கள் என்று சொன்னால் எண்ணிப்பாருங்கள்.
பெரியார் பிறந்திருக்காவிட்டால்...!
நீங்கள் அற்புதமாக உரைக்குத் தலைப்புக் கொடுத்திருக்கின்றீர்கள் பெரியார் பிறந்திருக்கா விட்டால்... என்று.
நம்முடைய சமுதாயம் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்திருக்க வேண்டும். இங்கே அந்த நிலையிலே அற்புதமான பணியை நீங்கள் செய்திருக்கின்றீர்கள். செய்து கொண்டிருக்கின் றீர்கள். அதற்காக பாராட்டுக்கள். தமிழ்ச்சங்கத்தினு டைய பணி வளரவேண்டும்.
நீடிக்க வேண்டும். பல துறைகளிலே பெருக வேண்டும் என்று அதனுடைய நல விரும்பிகளில் ஒருவராக நின்று நான் வாழ்த்தக் கடமைப்பட் டிருக்கின்றேன். (கைதட்டல்).
இவ்வளவு மகளிர் கூட்டமா?
அதுமட்டுமல்ல. சரியான பார்வையோடு நீங்கள் நடத்திச் செல்லுகின்றீர்கள் என்பதற்கு அடை யாளம் என்னவென்றால் இந்த அரங்கம். இப் பொழுது அரங்கின் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பார்க்கிற நேரத்திலே மகளிர் வெற்றி பெற்று விட்டார்கள். (கைதட்டல்). பெரியார் வெற்றி பெற்று விட்டார் என்பதற்கு அடையாள மாக இவ்வளவு சகோதரிகளை நான் பார்க்கின்றேன்.
இவ்வளவு மகளிர் கூட்டத்தை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. இங்கே மகளிர் நிறைய வந்திருக்கிறார்கள். ஏனென்றால் பெண்ண டிமையைப் போக்கியவர் ஒருவர் உண்டென்றால் அவர் தந்தை பெரியார் அவர்கள்தான் என்று நினைத்து நீங்கள் வந்திருக்கின்றீர்கள். இன்றைக்கு பெண்களுக்கு 33 விழுக்காடு சட்டமே பாராளு மன்றத்திலே திணறிக்கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு 50 விழுக்காடு
பெரியார் அன்றைக்கே சொன்னார். இட ஒதுக்கீடு சமூகநீதி என்று வரும்பொழுது பாலியல் நீதியும் இணைந்ததுதான் என்று அழகாகச் சொல்லி, 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.
அப்பொழுது தானே ஜாதி மறையும். வித்தி யாசங்கள் போகும். அன்றைக்கு அவர்கள் எழுச்சி பெறுவார்கள் என்று சொன்னார்கள்.
இந்த அரங்கத்தில் கூட்டத்தை கணக்கிட்டுப் பார்த்தீர்களேயானால் பெண்கள் 50 விழுக்காடு இருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுதே வெற்றி பெற்றிருக்கின்றீர்கள். (கைதட்டல்). பெரியாருடைய சிந்தனை என்பது நடைமுறைப்படுத்தப்பட்டிருக் கின்றது. இங்கே வெற்றியடைந்திருக்கிறது என்ப தற்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டாகும்.
அருமை சகோதரிகளே, தோழியர்களே எண் ணிப்பாருங்கள். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி இங்கே ஒளிவண்ணன் அவர்கள் சிறப்பாகச் சொன்னார்.
பெரியாருக்கு இருந்தது மனிதாபிமானம்
பெரியாருக்கு வேறு எந்த அபிமானமும் கிடை யாது. மனிதாபிமானம்தான் என்று சொன்னார்கள். பெரியாருக்கு இருந்தது மானிடப்பற்று. திருவள்ளு வருடைய திருக்குறளிலே ஒரு செய்தி உண்டு.
பற்றுக பற்றற் றான் பற்றினை அப்பற்றை பற்றுகபற்று விடற்கு
என்று ஒரு குறள் உண்டு. பெரியார் தொண்டர் கள் எல்லாம் அந்தக் குறளைத் தான் பற்றிக் கொண்டிருக்கின்றோம்.
காரணம் பெரியாரைப் போல பற்றற்ற பெரி யார்கள் உலகத்தில் கிடையாது. அவர் பற்றெல்லாம் மனிதப்பற்று, அறிவுப்பற்று, பகுத்தறிவுப் பற்று, சமத்துவப்பற்று. இன்றைக்கு இவ்வளவு தாய் மார்கள், சகோதரிகள் இருக்கிறார்கள்.
சொந்தக்காலிலே நிற்கக்கூடிய மகளிர்கள்
வேலூர் தமிழ்ச் சங்க வெற்றிக்கு இன்னொரு சிறப்புக்கு என்ன அடையாளம் என்றால் சிறு பான்மை சமுதாயத்தைச் சார்ந்த தாய்மார்கள் வந்திருக்கிறார்கள் என்பது சிறப்பானது. இதைப் பற்றித்தான் நான் விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது சொன்னார்கள். பெரியாருடைய கொள்கை வெற்றிபெற்றதற்கு மகத்தான ஆதாரம் சான்று. என்னவென்று சொன்னால் சுய உதவிக் குழுவைச் சார்ந்த உழைத்து சொந்தக்காலிலே நிற்கக்கூடிய அந்த தகுதியைப் பெற்றிருக்கிறவர்கள் என்று சொல்லும்பொழுது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிறவிப் பேதம் கூடாது
பெரியாருடைய தத்துவம். ஆணும்-பெண்ணும் சமமானவர்கள் என்பது. சுயமரியாதை இயக்கத்தை அய்யா அவர்கள் ஆரம்பித்தபொழுது பெரியாரின் சமூகப் புரட்சியின் முதல் அடிப்படையே பிறவி பேதம் கூடாது என்பது. மேல் ஜாதி, கீழ்ஜாதி, பிராமணன், சூத்திரன், பார்ப்பான், பறையன், தாழ்த்தப்பட்டவன், பஞ்சமன் என்ற பேதம் ஒழிய வேண்டும் என்பது மட்டுமல்ல. பிறவி பேதம் என்று சொல்லும்பொழுது ஆண் உயர்ந்தவர். பெண் தாழ்ந்தவர் என்ற அந்த பேதமும் ஒழிய வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.
பெரியார் பெண்ணுரிமையைப் பற்றி சிந்தித்த அளவுக்கு உலகத்தில் இதுவரை எந்த ஒரு மானிடப்பற்றாளரும் இந்த அளவுக்கு சிந்தித்து சொன்னதில்லை.
பெரியாருடைய பார்வை தான் சரியான பார்வை. தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு வேறு யாரும் இப்படிச் சொன்னதில்லை. இன்னும் கேட்டால் அய்யா விருப்பு-வெறுப்பு இன்றி எந்த கருத்தையும் ஒரு சமுதாய விஞ்ஞானி என்ற அந்த தளத்தோடு நின்று பார்க்கக்கூடியவர்கள்.
ஆண்கள் எல்லாம் பெண்களைப் பற்றி பேசியதைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். பெண் ஏன் அடிமையானாள் என்பதைப் பற்றி சுகுமார் அவர்கள் அற்புதமாக உரையாற்றினார். ரொம்ப அழகாகச் சொன்னார்.
பெரியாருடைய பணியைப் பற்றி 1967லே அண்ணா அவர்கள் திருச்சியிலே போய் பெரியாரை சந்தித்த பிற்பாடு முதலமைச்சர் ஆனபிறகு பெரி யாருடைய பிறந்தநாள் விழாவிலும் கலந்துகொண் டார். எங்களுடைய வேண்டுகோளை ஏற்று.
அந்த நிகழ்ச்சியிலே பேசும்பொழுது அண்ணா அவர்கள் பேசினார். பெரியார் ஒரு சகாப்தம் என்ற தலைப்பிலே அது புத்தகமாகக் கூட வந்திருக்கிறது.
பெரியார் பற்றி அண்ணா சொன்னார்
அண்ணா அவர்கள் பெரியாருடைய பணியை கணக்கிட்டுச் சொன்னார்கள். பெரியாருடைய 50 ஆண்டுகால பணியைப் பற்றி சொல்லும்பொழுது அண்ணா குறிப்பிடுகிறார்.
இருநூறு ஆண்டு பணியை உள்ளடக்கியது
அது இரு நூறு ஆண்டுகள் பணியை உள்ளடக் கியது. அதற்கு ஆங்கிலத்தில் அற்புதமான ஒரு சொற்றொடரை சொன்னார். Putting century in to a capsule ஒரு குளிகைக் (Capsule) குள்ளே எப்படி சக்தி வாய்ந்த மருந்துகள் அடைக்கப்பட்டிருக் கிறதோ அது போல பெரியார் அவர்களுடைய உழைப்பு என்பது, தொண்டு என்பது இருநூறு ஆண்டுகள் மற்றெவரும் செய்ய முடியாத பணியை அவர் மட்டுமே செய்திருக்கிறார் என்று சொன்னார்.
அதனுடைய விளைவாகத்தான் நண்பர்களே புரட்சிக் கவிஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி சொன்னார்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார் பார்
என்று அழகாகச் சொன்னார்.
பெரியார் பிறந்தநாளைப் பற்றிச் சொன்னார்கள். அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மய்யம் பல ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது. சிகா கோவைத் தலைநகரமாகக் கொண்டு அதன் சார் பாக அமெரிக்காவில் வாழக்கூடிய பகுத்தறிவு வாதிகள் பெரியார் தொண்டர்கள் மட்டுமல்ல. வெள்ளையர்களும் சேர்ந்து கறுப்பு, வெள்ளை என்ற நிற பேதம் இல்லாமல் பெரியாருக்கு விழாவை அங்கே நடத்துகிறார்கள். மியன்மா என்று சொல்லக்கூடிய பர்மாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பெரியார் விழாவை நடத்துகிறார்கள். சிங்கப்பூரிலே பெரியார் விழாவை நடத்தி மறுபடியும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி மாணவ-மாணவியர்களுக்கு நவ.12, 13 லே மாபெரும் விழாவாக நடத்த இருக்கிறார்கள்.
பல நாடுகளில் பெரியார் விழா
பல விருந்துகள் நடத்தி பெரியார் விழாவை சிறப்பித்திருக்கின்றார்கள். மலேசியாவிலே, அதே போல கனடாவிலே, அது போல ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலே பெரியார் பிறந்தநாள் விழாக் களை கொண்டாடுகின்றார்கள். பெரியாரை, பெரி யாருடைய கொள்கையைப் பின்பற்றுகிறார்கள்.
93 நாடுகளில் விடுதலை வாசிக்கிறார்கள்
விடுதலை நாளேட்டிற்கு 50 ஆயிரம் சந்தா சேர்ப்பதைப் பற்றிச் சொன்னார்கள். தோழர் ஒளிவண்ணன் அவர்கள் சொன்னார். விடுதலை ஏடு சாதாரண ஏடல்ல. இணையத்தில் போட்ட முதல் தமிழ் நாளேடு விடுதலைதான். (கைதட்டல்). அந்த விடுதலை 93 நாடுகளிலே ஒவ்வொரு நாளும் படிக்கப்படுகிறது. வாசிக்கப்படுகிறது.
பெரியார் வலைக்காட்சி மூலம் பெரியாருடைய கருத்துகள் ஒவ்வொரு வகையிலும் உலகத்தின் மூலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பெரியார் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் விவாதிக் கப்படுகின்றார். அதைவிட பெரிய மகிழ்ச்சி எனக்கு என்ன வென்றால் நம்முடைய இளம் குருத்துக்கள் நல்ல பணியை செய்திருக்கின்றீர்கள்.
பள்ளிக்கூடங்கள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இங்கெல்லாம் பெரியாருடைய தொண்டை நீங்கள் மாணவச் செல்வங்களிடையே போட்டி வைத்து பேசவைத்திருக்கின்றீர்கள்.
ஆகவே அந்த மாணவ, மாணவிகள் இங்கே வந்து நன்றாக பேசியிருக்கிறார்கள். கட்டுரை எழுதியிருக் கின்றார்கள் என்று சொன்னார்கள். பல மாணவிகளுக்கு நாங்கள் பரிசு கொடுத் தோம். வேந்தர் விசுவநாதன் அவர்கள் கூட அருகில் இருந்தார்கள். பல மாணவ, மாணவியர்கள் கையில் கயிறு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். இங்கே பகுத்தறிவு சிந்தனையைப் பற்றிச் சொன்னார்கள் அல்லவா?
கையிலே கயிறு
என்னிடம் கையெழுத்து வாங்க வருகின்ற மாண வர்களிடம் கூட சொல்வதுண்டு. அவர்களுடைய கையில் கயிறு கட்டியிருப்பார்கள். நான் அவர்களிடம் சொல்லுவது உண்டு. அதற்காக கையிலே கயிறு கட்டியிருக்கின்றீர்கள் என்று நான் கேட்பதுண்டு. அப்பா சொன்னார். பாட்டி சொன்னார். தாத்தா சொன்னார். அதனால் கயிறு கட்டியிருக்கிறேன் என்று அந்த மாணவர்கள் சொல்லுவார்கள்.
பெரியாருடைய சிந்தனை நமக்குள் புகுந்தால் தான் நாம் முதுகெலும்போடு நிற்க முடியும். கயிறு கட்டியிருப்பது எதற்காக? இதனால் சகலமான வர்களுக்குத் தெரிவிப்பது யாதெனில் நான் ஒரு கோழை. நான் ஒரு பயந்தாங்கொள்ளி என்று நினைத்ததை அறிவிப்பது மாதிரி அல்லவா ஆகியது.
கடிகாரம் ஓடுமுன் ஓடு
நான் கேட்டேன். கடிகாரம் கட்டியிருக்கின் றீர்கள் அது சரி. இங்கே பேசும்பொழுது கூட சொன்னார்கள். கடிகாரம் ஓடு முன் ஓடு என்று.
கடிகாரம் என்பது மணி பார்ப்பதற்கு அவசியம். ஏன் கையிலே கயிறு கட்டியிருக்கின்றீர்கள் என்று கேட்டால் பேய்,பிசாசு அண்டாது என்று பதில் சொல்லுவார்கள். நான் உடனே அந்த பிள்ளை களிடம் சொல்லு வது உண்டு. எங்கே? வெளிநாட் டிற்குப் போனால் கூட. மதுரை பே.தேவசகாயம் அவர்கள் மறைந்து விட்டார். அவர் எங்களுடன் சுற்றுபயணம் வரும் பொழுது கையிலே கயிறு கட்டியிருப்பவர்களை கண்டால் அந்த கயிறை அறுக்க கத்தியை எடுப்பார்.
நான் அப்பொழுது அவர்களிடம் சொல்லுவ துண்டு. கயிறு கட்டுவது சரியில்லை என்று மாண வர் ஒத்துக்கொண்டால் அறுப்போம். அதுதான் பெரியாரின் கொள்கை முறை என்று. அண்ணா சொன்னார். மூலபலத்தை முறியடிப்பதுதான் பெரியாரின் போர்முறை என்று.
கையிலே விலங்கு போட்டால் பளிச்சென்று தெரியும். காலிலே விலங்கு போட்டால் பளிச் சென்று தெரியும். ஆனால் இன எதிரிகள் உள்ளே நுழைந்து மூடநம்பிக்கையைப் புகுத்தினார்கள் பாருங்கள். அவர்கள் எங்கே விலங்கு போட்டார்கள். என்றால் மூளையிலே விலங்கு போட்டுவிட்டார்கள்.

(தொடரும்
No comments:
Post a Comment