இதுதான் ஆப்பிளின் உண்மை ருசி!
நம் நாட்டில் திடீர் கோடீசுவரர் களையும், புதுக் குபேரர்களையும் கண்டு பலரும் வியப்படைவது உண்டு. ஒரு சிலர், கவர்ச்சிக் கன்னிகளின் ஒப்பனைகளில் காதல் கொண்ட சிலர் நாமும் அதுபோல் செய்து கொண்டால் என்ன என்று ஆசைப்பட்டு - இல்லை, இல்லை; பேராசைப்பட்டு - குறுக்கு வழியில், முறையற்ற முறையில் பணம் சேர்க்கும் தணியாத வெறியை உண்டாக்கி, அதனாலேயே கெட்டு ஒழிகிறார்கள்!
பணம் இருந்து விட்டால் போதும்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இறுமாப்பையும், எகத்தாளத்தை யும் இந்த பாழாய்ப் போன திடீர்க் குவியல் - மனிதனின் நாணயத்தை, நல்லொழுக்கத்தை, பகுத்தறிவைக் கூட கெடுத்துக் குட்டிச் சுவராக் குவதுடன், அத்தகைய பேராசைப் பெருந்தகைகளைக் குற்றவாளிகளாக வும் ஆக்கி பிறகு நடுத் தெருவில் நிற்க வைத்தும் விடுகிறது!
பணத்தின் தேவை - ஒரு நிம்மதியான, வறுமையற்ற, பிறரிடம் கை நீட்டி வாங்கும் நிலையில் இல்லாமல் - முடிந்தால் பிறருக்கு உதவிடும் அளவு இருந்தால் - மனிதர்களின் பண்புகூட கெடாமல் ஒரு கட்டுக்குள்ளேயே இருந்து, அவர்களை நல்ல மனிதர் களாக வாழ வைக்கும்; அத்துடன் இதயத்தால் சிந்திக்கும் ஈரமுள்ள நெஞ்சர்களாகவும் அவர்கள் இருப் பார்கள்!
கடினமாக உழைத்துச் சம்பாதித் தால்தான் பணத்தின் உண்மை மதிப்பும், சரியான சக்தியும் புரியும்! ரேசில் ஜாக்பாட் அடித்ததுபோல, திடீர் கோடீசுவரர்களாகும் அளவுக்கு செல்வம் சேர்ந்தால், ஆடம்பர வேட்கை யும், அவசியமற்றவைகளுக்கான வேட்டையும் அன்றாட வாழ்வின் (அருவருக்கத்தக்க) அவலங்களாகி, அந்த மனிதர்களையே பிறகு காட்டிக் கொடுத்து விடும். அவர்களே ஈட்டியை எடுத்து இதயத்தில் சொருகிக் கொண்டு, வடியும் ரத்தம் கண்டு, வழியும் கண்ணீருடன் இழிவாழ்வு வாழ வேண்டிய நிர்பந்தத்திற் கும் ஆளாகி, நிம்மதி கிடைக்காதா என்று ஏக்கப் பெருமூச்சுடன் அலைந்து திரிபவர் களாகி விடுவார்கள்.
பிரபல கணினிப் புரட்சி தொழில் நுட்பக் குழுமமான ஆப்பிள் கம்ப்யூட்டர் இவ்வளவு பெரிய பல்வகை புதுப்புது தொழில் நுட்ப சாதனைகளை அய்-போன்,(i-Phone), அய்.போட் (i-pod) அய்.பாட் (i-pad); ஒன்று, இரண்டு என்று புதிய உத்திகளைப் புகுத்தி பல லட்சக்கணக்கில் அதனை விற்பனை செய்யும் அளவுக்கு உயர்த்திடக் காரணமான அதன் இரண்டு கூட்டாளிகளில் முக்கியமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற அமெரிக்க தொழிலதிபர். இவர் கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காத (College Drop out) நிலையினர் என்றாலும் அறிவு வேறு, படிப்பு வேறு என்ற தந்தை பெரியார் கூற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழக் கூடியவர். அண்மையில்தான் (Pancreatic Cancer) கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 56 வயதில் உலகின் மிகப் பெரிய சாதனையாளராக, இரண்டு மூன்றாவது பணக்காரராகவும் செல்வம் சம்பாதித்தவராக இருந்த - இறந்தும் இறவாப் புகழுடன் வாழ்பவர்.
அவரது வாழ்க்கை வரலாற்று நூலை பிரபல அமெரிக்க டைம் வார ஏட்டின் ஆசிரியர் வால்டர் அய்சக்ஸ்ன் அவர்கள், அருமையாக எழுதி - அவரது நிறை குறை களை உள்ளடக்கி - நவம்பர் வெளியீடாக அக்டோபர் (2011) 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்!
பெரும் கிராக்கியுடன் உலகம் முழுவதும் பல மில்லியன் புத்தகங்கள் விற்கப்பட் டுள்ளன!
பல்வேறு வறுமை நெருக்கடிக்கிடையில் வெறும் 1300 அமெரிக்க டாலர்களையே மூலதனமாக வைத்து, இடத்திற்கு வாடகைகூட கொடுக்க முடியாததால், அவரது வீட்டுக் கார் ஷெட்டிலேயே ஆப்பிள் கம்ப்யூட்டர் முதன் முதலாக வெளியிடப்பட்டு, பிரபலமாகியது!
இதற்கிடையில் அவர் சந்தித்த வேதனைகள், சங்கடங்கள், அவமானங் கள், அறைகூவல்கள் மிக அதிகம்.
1976ஆம் ஆண்டில் முதல் ஆப்பிள் கணினி உருவாக்கப்பட்டு, சந்தைப்படுத்தப் பட்டது. 1980-களில் தடைகளைத் தாண்டி - அதன் மதிப்பு 1.79 பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் அமெரிக்காவில் நூறு கோடி) உயர்ந்து பிரபலமாகி விட்டது.
ஸ்டீவ்ஜாப்ஸ் கீழே பணியாற்றிவர்கள் சிறுசிறு பங்குதாரர் களாகவும் ஆக்கப் பட்டவர்கள் ஆனதால், லாபத்தின் ஈவுத் தொகை அவர்களுக்கு வந்ததே பல மடங்கு ஆகி விட்டது. அவர்கள் திடீர்க் குபேரர்களாகி விட்டனர். புதுப்பணக்காரர் களாகிய அவர்கள் வாழ்க்கை - நடத்தை பற்றி ஸ்டீவ்ஜாப்ஸ் மிக வேடிக்கையாக குறிப்பிடுகிறார்!
ஆடம்பர வாழ்வு வாழுவோருக்கு அருமையான சவுக்கடியை அவர் தரு கிறார்.
நான் பணத்தைப்பற்றி என்றுமே கவலைப்பட்டவனல்லன்; காரணம் ஒரு நடுத்தரக் குடும்பத்தினரால் வளர்த்து ஆளாக்கப்பட்டவன். எனவே நான் எப்போதும் பட்டினியால் அவதிப்படும் நிலை ஏற்படாது என்று நம்பியவன்.
நான் பணத்தைப்பற்றி என்றுமே கவலைப்பட்டவனல்லன்; காரணம் ஒரு நடுத்தரக் குடும்பத்தினரால் வளர்த்து ஆளாக்கப்பட்டவன். எனவே நான் எப்போதும் பட்டினியால் அவதிப்படும் நிலை ஏற்படாது என்று நம்பியவன்.
நான் கல்லூரியில் இருந்தபோதும் சரி, இந்தியாவில் இருந்தபோதும் (அங்கே அலைந்து திரிந்தவர்) பிறகு சென் (Zen Buddhist பவுத்த சிந் தனையாளராக மாறியவர்) சரி, ஏழ்மையை விரும்பி ஏற்றுக் கொண்டு எளிய வாழ்க்கையில் சுகங்கொண்டு வாழ்ந்தவன். எனது நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் பல கோடி பணம் திடீரென (முதலீட் டின் பங்கு மூலதன உயர்வினால்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் அவர் கள் தலைகால் புரியாமல் ஆடம்பரத் திலே திளைத்த வாழ்வு வாழத் துவங்கி விட்டார்கள்!
பெரிய பெரிய மாளிகை வீடுகளை வாங்கினர்; அதற்கென நிருவாகி களைப் போட்டனர் - ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) விலை உயர்ந்த கார்களை வாங்கினர். அவர்களது மனைவிமார் களோ அழகு ஜொலிக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து உலா வரத் துவங் கினர்.
இந்த பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு நான் சிரித்தேன்; அவைகளை என் வாழ்வுக்குள் நுழைத்து என் எளிய வாழ்க்கை நாசமாக்காமல் பார்த்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்!
இதை, கை நிறைய சம்பளம் வாங்கி ஆடம்பரத்தில் மூழ்கி வாழும் இளை ஞர்கள், படாடோபர்கள் புரிந்து பாடம் பெற்று வாழ்ந்தால் பிழைப்பார்கள், இன்றேல்...?
... நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment