Friday, November 4, 2011

திராவிட வதம்!


திராவிட வதம்!



திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: குழந் தைகள் நல மருத்துவ மனை கட்ட, சென்னையில் இடங்களா இல்லை? நூலகத்துக்கென வடிவமைக்கப்பட்டதை, மருத்துவ மனையாக மாற்றுவதற்கு, மக்களின் வரிப்பணம், பல கோடி செலவாகத்தானே செய்யும்? அது எவ்வகை யில் ஏற்கக் கூடிய ஒன்று?
டவுட் தனபாலு: ஏன்... பிரதமருக்கு படம் காட்டுறதுக்காக, புதிய தலைமைச் செயலகத்துல மூணு கோடி ரூபாய் செலவுல, செட்டிங் டூம் போட்டாங்களே... அதுக்கு செலவானதும் மக்கள் வரிப்பணம்தானே... அதை ஏத்துக்கும்போது, இதை ஏத்துக்க மாட் டீங்களா...?
- (தினமலர் 4.11.2011)
மொட்டைத் தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு என்பார்களே - அந்தப் பழ மொழி இந்த முடிச்சவிழ்க்கி களுக்குத் தான் பொருந் தும். தமிழ்மொழி செம் மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழு திய சோற்றுத் துருத்திக் கூட்டமான தினமலர் வகையறாக்கள் இப்படித் தானே எழுதும்?
பெங்களூரில் திருவள் ளுவர் சிலையை கலைஞர் திறந்தார் என்றால் துக்ளக் கும் தினமலரும் தங்கள் நல்லபாம்பு நாக்கை நீட்டிக் கொத்தவில்லையா?
பாரதிதாசன் செம் மொழி நூலகத்தின் கெதி என்ன? கோணிப்பைக்குள் முடங்கிக் கிடக்கிறதே நூல்கள்!
சென்னை காமராசர் கடற்கரைசாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் செம்மொழி அலுவலகம் இயங்கும் என்று கலைஞர் ஆட்சியில் ஒரு தகவல் (ஆணையல்ல) கசிந்த நேரத்தில் இதே தினமலர் களும் துக்ளக்குகளும்! எப்படியெல்லாம் சுவர் ஏறிக் குதித்தன? பூணூல் சண்டி யாகம் நடத்தின? சத்துரு சம்ஹார யாகங்கள் செய் தன?
அதே அளவுகோல் இப் பொழுது எங்கே போயிற்று?
விவேகானந்தர் பெயரில் இருந்தால் அது மாற்றப்படக் கூடாது! அண்ணா பெயரில் அமைந் திருந்தால் அது எங்கோ யாவது போய்த் தொலை யட்டும் என்பதுதானே பார்ப்பனர்களின்  ஆலகால விஷம்? துவேஷப் புத்தி?
அதுவும் அண்ணா பெயரில் கட்சியையும், ஆட் சியையும் நடத்துபவர் களைக் கொண்டே பார்ப் பன வட்டாரம் சாதித்துக் கொள்கிறது என்கிற போது, அவாளின் பாட்டும் - பரதமும் அவாள் மொழியில் வைகுந்தத்துக் கும் சிவலோகத்துக்கு மாக  அல்லவா தாவிக் குதித்து அட்டகாசமாக நடக்கிறது.
நரகாசுரன் வதம் (தீபாவளி) நடந்து முடிந்த கையோடு  இப்பொழுது திராவிட வதம் அரங் கேறுகிறது. அய்யாவின் சீடர் அறிஞர் அண்ணா தானே ஆரியர்கள் செய்த வதங்களையெல்லாம் பட்டியலிட்டு அடுக்கிக் காட்டினார்?
இப்பொழுது அதனைத் திருப்பிப் போட்டு அண்ணாவதம் நடத்திக் காட்டுகிறார்கள். திராவிடர் கள் தீ ஜ்வாலையாய் எழ வேண்டிய காலம் இது - ஆம், இதுவே!
-மயிலாடன்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...