Friday, November 4, 2011

பிணையும் சிறையும் 2ஜி வழக்கில் - - ஹிந்து நாளிதழ் தலையங்கம் (4.11.2011)


பிணையும் சிறையும் 2ஜி வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு பிணை மறுப்பது குற்றவியல் நீதி நடைமுறைக் கொள்கையின்படி சரியானது அல்ல
-  ஹிந்து நாளிதழ் தலையங்கம் (4.11.2011) -

(2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டில்லி பாடியாலா ஹவுஸ் சி.பி.அய். நீதிமன்ற  தனிநீதிபதி, திருமதி கனிமொழி மற்றும் ஏழு பேருக்கும் ஜாமீன் மறுத்தது தவறான நீதிச் சிதைவு என்பதை ஹிந்து நாளேடு அதன் தலை யங்கத்தில் எழுதியுள்ளது. வாச கர்களுக்கு அதன் தமிழாக் கத்தைத் தருகிறோம்.  - ஆசிரியர்)

குற்றவியல் நீதிநடைமுறையில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கையே, பிணை (ஜாமீன்)  அளிப்பதற்கு எதிராக குறிப்பிட்ட பிரத்யேக உண்மைகள், காரணங்கள்  இல்லாத நிலையில், பிணை  அளிப்ப தற்கு ஆதரவாக ஒரு பொது ஊகம், கருத்து இருந்து வந்திருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் சாற்றப்பட்ட அனைவருமே நிரபராதிகள்தான் என்ற ஊகத்தின் அடிப்படையின் இயல்பான தொடர்ச்சி யாக அமைந்ததுதான் இந்த விதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட் டுள்ள பெரும் அளவிலான ஊழல், மோசடி மற்றும் சதித்திட்டம் தீட்டிய தற்கான துணிவு ஆகியவற்றின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் கடுங் கோபம் அறிந்து கொள்ளக்கூடியதும், பாராட்டத் தகுந்ததுமாகும். ஆனால் இந்த வழக்கில் குற்றங்களின் அளவு அதிக அளவில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, பிணை வழங்குவ தற்கான் அடிப்படை சட்டக் கோட்பாடு களில் இருந்து நடைமுறை பிறழ்வது அனுமதிக்கப்படக்கூடாது.
ஆனால், 2ஜி வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கும் மற்ற ஏழுபேருக்கும் சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தினால் பெயில் மறுக்கப்பட்டதில் இந்த பிறழ்தல் நடைபெற்றுள்ளதாகவே தோன்று கிறது. ஏற்கெனவே குற்றச்சாற்றுகள் பிறப்பிக்கப்பட்டு, வழக்கு ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வரும் நிலையில்,  அவர்கள் ஏன் சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டும்? சாட்சியங்களை அவர்கள் அழித்து விடுவார்கள் என்று கூறுவது பிணை மறுக்கப்பட்டதற்கான மனநிறைவளிக்கும் காரணமாக இல்லை.
2ஜி உரிமங்கள் அளித்த காலத்துக்கும், ஊழல் பற்றி விசாரணை தொடங்கிய காலத்துக்கும் இடையே இருந்த இடைக்காலத்தில்,  தாங்கள் அழிக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்று விரும்பிவற்றை அழிக்கவும், மறைக்கவும் குற்றம் சாற்றப்பட்ட அனைவருக்கும் போதுமான கால அவகாசம் இருந்துள்ளது.
குற்றம் சாற்றப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், சாட்சிகளை பிறழச் செய்து, விசாரணைக்கு ஊறு விளைவிப்பார்கள் என்று நீதிமன்றம் கூறுகிறது. ஆனால்  குற்றம் சாட்டப் பட்டவர்களின் செயல்பாடுகள் மற்றும் நகர்வுகளுக்கு சில குறிப்பிட்ட கட்டுப் பாடுகளை விதிப்பதுதான் இதைத் தடுப்பதற்கான சரியான வழிமுறையாக இருக்கும். பிணை மறுக்கப்பட்டதில் பொதிந்துள்ள கூறப்படாத பாதிப்பு, உண்மை என்ன வென்றால், விசாரணை முடியும் வரை குற்றம் சாற்றப் பட்டவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது தான். இந்த நிலை நீதியின் கண்ணோட் டத்தில் அளவுக்கு மீறிய செயலாகும். குற்றம் சாற்றப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று விடுவார்கள் அல்லது இது போன்ற குற்றங்களைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள் என்று பெயில் மறுக்கப் படுவதற்காக வழக்கமாகக் கூறப்படும் காரணங்கள் எதுவும் இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்பதையும் நீதிமன்றம் கவனிக்கத் தவறி விட்டது.
குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு பிணை அளிப்பதில் சி.பி.அய். கொண்டி ருந்த மனப்பான்மையும், மேற்கொண்ட அணுகுமுறையும் தொடர்ந்து ஒரே மாதிரியாக இல்லை என்பதும், அதனை நியாயப்படுவது எளிதல்ல என்பதும் கெட்டவாய்ப்பே. தொலைபேசி நிறுவ னங்களின் உயர்நிலை நிருவாக அதிகாரிகள் சிலருக்கு பிணை அளிப் பதை சி.பி.அய். எதிர்த்த நிலையில், கலைஞர் தொலைக் காட்சிக்குப் பண மாற்றம் செய்யப்பட்டதுடன் தொடர் புடைய திருமதி கனிமொழிக்கும் மற்ற வர்களுக்கும் பெயில் அளிப்பதை சி.பி.அய். எதிர்க்கவில்லை.  இதன் காரணமாக, அதிக அளவாக அய்ந்து ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வழி செய்யும் குற்றச்சாற்றுகள்தான் அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்க வழி செய்யும் குற்றச்சாற்றுகள் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நம்பச் செய்ய முடியாத இந்த வாதம், இதில் அரசியல் கார ணங்கள் இருக்கக்கூடும் என்ற அய்யத்தைப் பலப்படுத்துவதாகவே  அமைந்துள்ளது. 2ஜி போன்ற பெரும் அளவிலான ஊழல் வழக்குகள் பொது மக்களின் பெருங்கோபத்தை தட்டி எழுப்புகிறது நல்லதுதான். ஆனால் குற்றவியல் நீதி நடைமுறை என்பது பொதுமக்களின் கருத்து அல்லது உணர்வுகளால் வழிநடத்தப்படக்கூடாது என்பது மிகவும் இன்றியாமையாதது. பிணை மறுப்பதனாலேயே குற்றம் சாற்றப்பட்டவர்கள் குற்றவாளிகளே என்று ஆகிவிடாது; அதே போல் பிணை அளிப்பதனால் மட்டுமே அவர்கள் குற்றவாளிகளே அல்ல என்றும் ஆகி விடாது. 2ஜி ஊழலில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக் கப்பட எந்த அளவுக்கு சிறப்பாக செயல் பட முடியுமோஅந்த அளவுக்கு செயல் படுவதுதான் குற்றவியல் நீதிநடை முறையின் பணியாகும். விசாரணை நடைபெற்று முடியும் வரை குற்றம் சாற்றப்பட்டவர்களைச் சிறையில் அடைத்து வைத்துத் துன்புறுத்துவது அதன் பணியல்ல.
- (நன்றி: தி ஹிந்து  4-11-2011)

தவறான பாதையில் நீதி! கனிமொழி ஜாமீன் மறுப்புக் குறித்து
பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி
புதுடில்லி: ""தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது, நீதி தவறான பாதையில் செல்வதை காட்டுகிறது,'' என, அவரது வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் ஏழு பேருக்கு எதிராக, சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் பிணை கோரி, டில்லி சி.பி.அய்., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. இதுதொடர்பாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியதாவது: சரியான காரணம் இல்லாமல், கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதி ஷைனி நிராகரித்தது, நீதி தவறான பாதையில் செல்வதைக் காட்டுகிறது. குற்றம் சாற்றப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் போய் நிவாரணம் பெறட்டும் என்ற எண்ணத்தில், கனிமொழி மற்றும் பிறரின் பிணை மனுக்களை நீதிபதி ஷைனி தள்ளுபடி செய்துள்ளார்.
இது மோசமான நடைமுறை. வேண்டுமென்றே சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்றது. இப்பிரச்சினைக்கு விரைவில் உச்சநீதிமன்றம் சரியான தீர்வு காணும் என நம்புகிறேன். குற்றம் சாற்றப்பட்டவர் ஓடி விடுவார் என்றால், ஆதாரங்களை மாற்றி அமைக்க முற்படுவார் என்றால், பிணை வழங்க மறுக்கலாம். ஆனால், கனிமொழியைப் பொறுத்த மட்டில், அதற்கான ஆதாரங்கள் எதுவும் வழக்கில் இல்லை. இவ்வாறு ராம்ஜெத்மலானி கூறினார். மூத்த வழக்கறிஞர் அமான் லேகி கூறுகையில், "இது பெரிய மோசடி வழக்கு, பெரிய மனிதர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதற்காக, தொடர்ந்து சிறையில் வைப்பது சரியல்ல.
ஜாமீன் மறுப்புக்கு சரியான காரணம் கூறப்படவில்லை என்றார். முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு ராமச்சந்திரன் கூறுகையில், "நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டு, பெரும் ஏமாற்றம் அடைந்தேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. குற்றவாளி யாராக இருந்தாலும், பிணை வழங்குவது சட்டப்படி, வழக்கமான ஒன்று என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...