ரூபாய் 26
மகாராட்டிர மாநி லத்தைச் சேர்ந்த பழங் குடி சகோதரிகள் ஒரு வேலையைச் செய்துள் ளனர். இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ரூபாய் 26-க்கான காசோலையை அனுப்பியுள்ளனர்.
எதற்காக? இந்த ரூபாய் 26இல் ஒரு நாள் வாழ்ந்து காட்டுங்கள் பார்க்கலாம் என்பதற் காகத்தான் இந்த யுக் தியைக் கையாண்டுள் ளனர்.
இதன் பின்னணி என்ன? கிராமங்களில் நாள் ஒன்றுக்கு 26 ரூபாய், நகரங்களில் நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் களில் அய்ந்து பேர் கொண்ட குடும்பம் ஒன் றால் வாழ முடிகிறது என்று போட்டார்களே ஒரு வெடிகுண்டு!
இந்த வருமானத்திற் கும் கீழ் வாழ்வோர்தான் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ் வோர் என்றும் உச்சநீதி மன்றத்தில் இந்தியாவின் திட்டக் குழு தாக்கல் செய்தது. இதனைக் கேலி செய்யும் நோக் கத்தோடு தான் மகாராட் டிரத்தைச் சேர்ந்த பழங் குடி சகோதரிகள் பிரத மருக்கு ரூபாய் 26அய் அனுப்பினார்கள்.
நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 வருமானம் உள்ளவர்கள் இந்தியா வில் 77 விழுக்காடு என்று சென்குப்தா ஆய் வுக் குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இதனை மூடி மறைக் கத்தான் இந்தியாவின் திட்டக்குழு இந்தக் கண் கட்டி வித்தையை செய்துள்ளது.
பிரச்சினை வெடிக் கவே தன் கருத்தை மாற் றிக் கொண்டிருக்கிறது திட்டக்குழு. இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 30; இந்த நிலையில் திட்டக் குழு எந்தத் தைரியத்தில் இதுபோன்ற அக்கப் போர் புள்ளி விவரங்களை வாரி இறைத்தது?
பெட்ரோல் விலை யையும், உர விலையையும் அவற்றைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள் ளலாம் என்று திமிர் கொண்ட காளை மாட்டை அவிழ்த்து விடுகிறது மத்திய அரசு. அதன் விளைவுதான் விலைவாசி ராக்கெட் சந்திர மண்டலம் சென் றுள்ளது.
மக்களுக்கே சம்பந்தம் இல்லாத நிபுணர்கள் நிருவாகத்தில் இருந்தால் இந்த நிலைதான் போலும்!
வாக்களிக்கும் பெரும் பான்மை மக்களின் மன நிலை இவர்களுக்குத் தெரிவதில்லையே - என் செய்வது?

-மயிலாடன்
No comments:
Post a Comment