நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை
இந்த மாநாட்டின் நோக்கம்
இந்த மாநாடு ஆற்றிய பணி பற்றி முன்னதாகவே ஊகித்து விரிவான ஒரு மறுபரிசீலனையை மேற்கொள்வது எனது நோக்கமல்ல. உங்கள் பரிசீல னைக்காக உங்கள் முன் வைக்கப்பட உள்ள தீர்மானங்கள், இந்த நோக் கங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை விளக்கமாகக் கூறி நியாயப் படுத்தும் என்று நான் உறுதியாக நம்பு கிறேன். நாம் எட்ட விரும்பும் நோக்கங் கள் இலக்குகள் தெளி வானவை. நாம் எதிர்கொண்டுள்ள ஒரு மாபெரும் சமூகப் பிரச்சினை பற்றி உங்கள் கவனத்தை ஈர்க்க முதலில் நான் விரும்புகிறேன். அரசியல் இயக்கம் என்பதற்கும் மேலாக, ஒரு சமூக இயக்கமே நமது இயக்கம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஓர் அகண்ட, நீடித்து நிற்க இயன்ற சமூக நீதியின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாத அனைத்து சமூகப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்க ஆவ லுள்ளவர்களாக நாம் உள்ளோம். ஓர் உயர்ந்த அரசியல் நிலையை நம்மால் எட்ட இயலும் முன், தற்போது நமது சமூகத்தில் நிலவும், முன்னேற்றத்தை யும், சமூகத்தினை திறமை மிக்கதான தாக ஆக்குவதையும் தடுக்கும் அனைத்து சமூக வேறுபாடு களையும், சமமின்மைகளையும் நாம் கட்டாயமாக அகற்றியாக வேண்டும். உயர்ஜாதி மனிதன், கீழ்ஜாதி மனிதன், நம்பிக்கை யில் மாறுபடும் சமூகங்கள் ஆகிய அனைவரும் ஆங்கிலேய அரசாட்சி யின் பயன்களை சம அளவில் அனுபவிக்கும் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
இந்த நோக்கத்தை நாம் எட்ட வேண்டுமானால், முதலில் நாம் செய்ய வேண் டிய கடமை என்னவென்றால், கீழ்ஜாதி மக்கள் மீது, குறிப்பாக மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் இயலாமை களை உடனடியாக, பயன் தரும் வகையில் நீக்குவதேயாகும். செயற்கை யான காரணங்களால் உருவாக்கப் பட்டு சமூகத்தில் இன்று நிலவி வரும் அனைத்து வேறு பாடுகளும் ஒரு குறிப்பிட்ட காலத் திற்குள் முற்றிலு மாக துடைத் தெறியப்படும் வகையில் நமது இயக்கம் வடிவமைக்கப்பட்டு, நமது பணிகள் அமைய வேண்டும். கசப்புணர்வைத் தோற்றுவிக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து சமத்துவத்தை ஏற்படுத்தி, சமூக ஆற்றலைப் பெருக்கி, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும், ஒரே ஒரு மிக உயர்ந்த ஆற்றல் படைத்த கருவி கல்வி மட்டும்தான். இத்தகைய கல்வியைப் பெறுவது இதுகாறும் உயர் ஜாதியினரின் தனிப்பட்ட உரிமையாக இருந்து வந்துள்ளது. தங்களைப் பற்றியும், தாங்கள் வாழும் உலகத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவி செய்யும் கல்வி இதுவரை அளிக்கப்படாமல் இருந்த பொது மக்களுக்கு இனி அளிக்கப் படவேண்டும். அவ்வாறு கல்வி அறிவு பெற்றிருக்கும் பிற ஜாதியினரைச் சேர்ந்த வெகு சிலரும் தங்களது சொந்த பிரிவு அல்லது ஜாதி மக்களுக்கு மட்டுமே கல்வி அளிப்பதற் காகத் தங்களது முயற்சிகளை மேற் கொண்டு வந்திருக்கின்றனர்.
வெட்ட வெளியில் நாள் முழுவதும் உழைத்து மக்களுக்குத் தேவையானவைகளை உண்மையில் உற்பத்தி செய்து தரும் ஆண்களும், பெண்களும் கல்வி அளிக்கப் படும் விஷயத்தில் ஏறக் குறைய அலட்சியப்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலை யில், இந்த புதிய இயக்கத்தால் அடை யாளம் காணப்பட்டு, இந்த மாநாட்டில் கூடியுள்ள நாம், பொதுமக்கள் அனை வரும், அவர்களின் சமூக, பொருளாதார நிலையையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்வடையச் செய்யும் ஆற்றல் பெற்ற கல்வி அறிவைப் பெறுவதற்குத் தேவை யான நம்மால் இயன்ற அனைத்து உதவி களையும் செயல்களையும் செய்ய வேண்டும். என்றாலும், இப்போதுள்ள நிலையில் உயர்கல்வி என்பது மிகச் சிலருக்கு அளிக்க இயன்றதாக மட்டுமே இருக்க முடியும். என்றாலும், நல் உடல் நலத்துடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் வாழச் செய்யவும், நாட்டின் பொருளாதார ஆற்றலை மிகப் பெரிய அளவில் வளரச் செய்யவும் உதவும் உயர்நிலைக் கல்வியை லட்சக் கணக்கான மக்கள் பெறச் செய்ய வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
தொடக்கக் கல்வி, தொழில், தொழில் நுட்பக் கல்வி, விவசாயக் கல்வி ஆகிய வற்றை மேம்பாடு அடையச் செய்வதில் முக்கியமாக நாம் நமது உழைப்பையும், ஆற்றலையும் செலவிட வேண்டும். நாமனைவரும் அடிக்கடி ஜப்பானைப் பற்றியும் ஒரு குறுகிய காலத்தில் எவ்வாறு அந்த நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது பற்றியும் பேசுகிறோம். ஜப்பானில் வசதி, செல்வாக்கு, சலுகை பெற்றிருந்த பிரிவு மக்கள் ஏதோ கண்கட்டு வித்தை போல, நாடு நவீன வழிகளில் முன்னேற்றம் பெறவேண்டும் என்ற பொதுவான லட்சி யத்துக்காக, தங்கள் வசதிகள், சலுகைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் விட்டுக் கொடுத்து விட்டனர். எதிர்காலத்தில் அது போன்ற முன் னேற்றத்தை நம் நாடும் பெற வேண்டும் என்றால், நாமும் அவர்கள் செய்ததைப் போல செய்ய வேண்டும். தங்களது உழைப்பால் நமது வளத்துக்கும், மகிழ் வான வாழ்வுக்கும் பங்களிக்கும் ஒடுக் கப்பட்ட, ஏழை மக்களின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்துவது என்ற லட் சித்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல. பெண்கள் முன்னேற்றம் பெறாதவர்களாக இருக்கும் வரை எந்த ஒரு நாடும் பெயரளவுக்குக் கூட முன் னேற்றம் பெற முடியாது. எனவே, நமது சமூகப் பெண்களுக்குக் கல்வி கற்பிப்ப தற்கான கடுமையான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்தையும் நாம் மேற்கொண்டால், நமது அரசாங்கத்தின் ஆதரவை மேலும் மேலும் பெற இயலும் என்பதில் எனக்கு அய்யமில்லை.
ஒரு கல்வி நிதி
பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாகிய காலந்தொட்டு, பார்ப்பனர் அல்லாத மாணவர், மாணவிகளுக்குக் கல்வி அளிக்கும் முயற்சியில் ஓர் உந்துதல் ஏற்பட்டது. நம் முன் செய்யப்படவேண்டி இருக்கும் பணிகளின் பெரும் அளவை நோக்கும்போது, இதுவரை பாராட்டத் தக்க, குறிப்பிடத்தக்க அளவில் நாம் எதனையும் செய்து முடித்துவிடவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பார்ப்பனரல்லாதவர்கள் அறிவில் பின்தங்கிய சமூகத்தினராக உள்ளனர் என்று பேசுவதையே நமது நண்பர்கள் விரும்பினர். அது ஓர் ஆதார மற்ற, அடிப்படையற்ற உண்மைக்குப் புறம்பான கூற்று என்று கூறுவதற்கு நான் தயங்கமாட்டேன்.
பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட அதே வாய்ப்புகளும், வசதிகளும் இம்மாகாணத்தின் பார்ப்பனரல் லாதவர்களுக்கும் அளிக்கப்பட்டால், தங்களையே தலை சிறந்த இலக்கிய வாதிகளாகப் பகட்டுடன் காட்டிக்கொள்ளும் போலிகளுடன் போட்டியிடும் அளவுக்கு அறிவு வளம் பெற்றவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள். அதற்கான வசதி களை அளித்து வழிவகைகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நமது இளைஞர்களும், யுவதிகளும், தங்களது இயல்பான திறமைகளைக் கொண்டு, நாடு தங் களுக்கு அளிக்க இயன்ற மிகச் சிறந்த கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இயலும். பார்ப்பனரல்லாத சமூகத் தலைவர்கள், உண்மையான நாட்டுப் பற்று உணர்வுடன் இப்பணியில் தங்கள் கவனத்தைத் திருப்பிச் செலுத்தி, பார்ப்பனரல்லாத சமூக மாணவ, மாணவிகளுக்கு உதவி செய் வதற்கான கல்வி நிதியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அத்தகைய நிதியம் ஒன்றை நிறுவி, பராமரிக்கவும், தேவைப்படும் போது அதற்குக் கூடுதல் நிதியைத் திரட்டவும், பார்ப்பனரல்லாத ஜமீந்தார், மிட்டாதார், மிராசுதார் மற்றும் மாகாணத்தில் உள்ள வசதி படைத்த மக்களின் நாட்டுப் பற்று, கொடைத் தன்மை, நியாய உணர்வு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து நாம் ஒரு வேண்டு கோளை வெளியிடலாம். ஒருவேளை, சரியானபடி கோரிக் கையை அரசாங்கத்தின் முன்வைத் தால், அக்கோரிக்கையை ஏற்றுக் கொள்வது சரியானது என்று அரசு கருதினால், இந்த வகையில் அரசாங் கமும் நமக்கு உதவி செய்யக்கூடும். எவ்வாறாயினும், நம் மக்களுக்குக் கல்வி அளிப்பது என்பது நமது எதிர்கால வாழ்விற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமூகப் பிரச்சினையாகும். எனவே நம்மில் உள்ள சிறந்த சிந் தனையாளர்களும், பொதுநல உணர்வு கொண்டவர்களும் இணைந்து இதற் கான ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். அத்திட்டம் செயல்படுத் தப்படும்போது, நமது சமூகத்தின் முன்னேற்றத் திற்கான தேவைகளை அது நிறைவு செய்யும். இந்த சமூகப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான வெற்றிகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், நமது மக்களின் ஒழுக்க உணர்வும் விழிப்புணர்வு பெற்று வளரும் என்று நாம் நிச்சயமாக நம்பலாம். முன்னேற்றத்தை எதிர் நோக்கிய தீவிர நாட்டுப் பற்றும், மறை வாக உள்ளுரையும் சமத்துவ - சகோ தரத்துவ உணர்வும் பெரும் அளவில் நம்மிடையே உள்ளது. மக்களுக்குத் தேவையான கல்வி அளிக்கப்பட்டால், அவர்களின் கடமை ஆற்றும் திறனின் தரம் உயரும். அத் துடன் ஒட்டு மொத்த சமூகத்தின் பொதுவான நிலையும் முன்னேற்றம் பெறும்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்
No comments:
Post a Comment