Thursday, November 3, 2011

தி(இ) னமலரின் அவசரம்!


தி(இ) னமலரின் அவசரம்!


குழந்தைகளுக்காக ஒரு மருத்துவமனை வருவது வரவேற்கத்தக்கது என்று டாக்டர்கள் வரவேற்கின்றனர் என்று தி (இ)னமலர் ஒரு செய்தியை இன்று வெளியிட்டுள்ளது. கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, அந்த இடத்தில்தான் குழந்தைகள் மருத்துவமனை வர வேண்டும் என்று எந்த மருத்துவரும் கூறவில்லையே! 

அப்படி இருக்கும் பொழுது டாக்டர்களைத் தேடிச் சென்று தினமலர் இப்படி ஒரு செய்தியை வெளியிடுவானேன்? பொதுவாக மருத்துவமனை தேவை என்று கூறுவது வேறு - நூலகத்தை மாற்றி விட்டு அங்கு மருத்துவமனை அமைப்பது என்பதுவேறு. 

இரண்டும் ஒன்றல்ல! ஆனாலும் கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தை மாற்றி  அந்த இடத்தில் மருத்துவமனை வருவதற்கு டாக்டர்கள் ஆதரவு அளிப்பதுபோல செய்தி வெளியிடுவதன் நோக்கம் என்ன! ஹி...ஹி.... எல்லாம் தினமலரின் இனமலர் வேலைதான்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...