Wednesday, November 30, 2011

அணு ஆயுதப் போர் ஒன்று மூண்டால், அதில் தப்பிப் பிழைக்க இயன்ற உயிரினம் எது?


தெரிந்துகொள்வோம்
இன்று ஒரு புதிய தகவல்:
அணு ஆயுதப் போர் ஒன்று மூண்டால், அதில்தப்பிப் பிழைக்க இயன்ற உயிரினம் எது?
கரப்பான்பூச்சி என்ற விடை தவறானதாகும். கரப்பான் பூச்சிகள் எவராலும் அழிக்கப்பட முடியாதவை என்ற நம்பிக்கை நம் அனைவரிடமும் நிலவுவதே அதற்கு பெருமை சேர்ப்பதாகும்.
மனித இனத்தை விட முன்னதாக தோன்றி உயிர் வாழ்ந்து வரும் இனம்தான் இந்தக் கரப்பான்பூச்சி இனம். 28 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இதுதான் நோயைப் பரப்பக் காரணமானது என்று உலகம் முழுவதிலும் வெறுக்கப்படும் உயிரினமாகும். அதன் தலை துண்டிக்கப் பட்டுவிட்ட பிறகும் கூட ஒரு வாரம் வரை அது உயிரோடு இருக்கும். ஆனாலும் அவை அழிவு அற்றவை அல்ல.  1959 இல் டாக்டர் வார்டன் அன்ட் வார்ட்டன் மேற்கொண்ட ஆய்விலிருந்து, ஒரு அணுப்போர் உண்டானால் முதன் முதலில் அழியும் உயிரினம் கரப்பான் பூச்சி இனமாகத்தான் இருக்கும் என்று தெரியவருகிறது.
இந்த இரு விஞ்ஞானிகளும், பல்வேறுபட்ட உயிரினங்களை மாறுபட்ட கதிரியக்கத்திற்கு ராட்ஸ் என்ற அளவுகோளில் உட்படுத்தி சோதனை செய்தனர். 1000 ராட்ஸ் கதிரியக்கத்தில் மனிதன் இறந்துபோவான்.  கரப்பான் பூச்சி 20,000 ராட்ஸ் கதிரியக்கத்திலும், ஒரு ஈ 64,000 ராட்ஸ் கதிரியக்கத்திலும் ஒரு குளவி 1,80,000 ராட்ஸ் கதிரியகத்திலும் இறந்து போகும். கதிரியக்கத்தை எதிர்த்து தாக்குப் பிடிப்பதில் அரசன் என்று அழைக்கப்படத்தக்கது டினோகோகஸ் ரேடியோ டூரான்ஸ் (Deinococcus radiodurans) என்னும் நுண்ணுயிரிதான்.  15 லட்சம் ராட்ஸ் வரையிலான கதிரியக்கத்தைத் தாங்க வல்லது அது. உறைந்து போன நிலையில் அதன் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் இரு மடங்காகப் பெருகிவிடுகிறது.
மாணவர்கள் அன்புடன் இந்த நுண்ணுயிரியை கோனான் நுண்ணுயிரி என்று அழைக்கின்றனர். பழுப்பு நிறம் கொண்ட இது அழுகிய முட்டைகோஸ் போல நாற்றம் அடிக்கும்.  கதிரியக்கம் அற்ற இறைச்சி பாத்திரத்தில் அது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து பெருக இயன்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யானையின் சாணம், கதிரியக்கம் அற்ற மீன், வாத்துக் கறி, அண்டார்டிகாவில் உள்ள கற்பாறைகளிலும் கூட இயல்பாக அவை தோன்றுகின்றன என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கதிரியக்கம், கடுங்குளிர் பாதிப்புகளை எதிர்த்து உயிர்வாழ இயன்ற இதன் ஆற்றலும், தனது மரபணுவை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள இயன்ற  ஆற்றலும், செவ்வாய் கிரகத்தில்  உயிரினம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான மறைவான செய்தி  இந்த கோனான் நுண்ணுயிரியில் இருக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகளை நம்பச் செய்துள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...