Sunday, October 16, 2011

உலகம் உருண்டை என்று முதன் முதலாகக் கண்டுபிடித்தது யார்?


கண்டுபிடித்தவர் யார் என்று கேட்கவேண்டாம். கண்டுபிடித்தது எது என்று கேட்டால், தேனீதான் கண்டு பிடித்தது என்றுதான் கூறவேண்டும்.
சூரியன் இருக்கும் இடத்தை மய்யமாக வைத்து, நல்ல தேன் எங்கே கிடைக்கும் என்று மற்ற தேனீக்களிடம் தெரிவிப்பதற்கு தேனீக்கள் ஒரு சிக்கலான மொழியைக் உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளன. வானம் மப்பும் மந்தாரமுமாக மேகங்கள் மூடிக் கொண்டு சூரியன் மறைந்திருக்கும் பகலிலும்,  பூமியின் மறுபக்கத்தில் சூரியன் இருக்கும் இரவு நேரங்களிலும் கூட, சூரியன் இருக்கும் இடத்தை மிகச் சரியாகக் கணக்கிட தேனீக்களால்  முடிவது மிகுந்த வியப்பை அளிப்பதாகும். மனித மூளையை விட 15 லட்சம் அளவு சிறியதாக உள்ள தங்களது மூளைகளில் தேனீக்கள் தகவல்களைக் கற்று, சேகரித்து, பாதுகாத்து வைத்துக் கொள்கின்றன என்பதே இதன் பொருள்.
ஒரு தேனீயின் மூளையில் 950,000 நியூட்ரான்கள் உள்ளன. மனித மூளையிலோ 100 முதல் 200 பில்லியன் நியூட்ரான்கள் வரை உள்ளன.
24 மணி நேரத்திலும் சூரியன் வானத்தில் சஞ்சரிப்பது பற்றிய வரைபடத்தை தேனீக்கள் தங்களுக்குள் வரைந்து வைத்துக் கொள்கின்றன. உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப  இந்த வரைபடத்தை மாற்றி விரைவாக வரைந்து கொள்ளவும் அவற்றால் இயல்கிறது; எங்கு பறந்து செல்லவேண்டும் என்ற எல்லா முடிவுகளும் அய்ந்து நொடி காலத்தில் எடுக்கப் படுகின்றன.
வேறு எந்த உயிரினங்களையும் விட, பூமியின் புவி ஈர்ப்பு மண்டலத்தைப் பற்றி அதிக அளவில் உணர்வுடையவையாக தேனீக்கள் உள்ளன. தாங்கள் பறந்து செல்லவும், தங்கள் தேன் கூடுகளில் தேனடைகளை உருவாக்கவும் இந்த உணர்வை அவை பயன்படுத்திக் கொள்கின்றன. தேனீக்கள் தேன் கூட்டினைக் கட்டிக் கொண்டிருக்கும்போது, அதனருகில் ஒரு சக்தி நிறைந்த காந்தத்தை வைத்தால், இயல்பாகக் காணப்படுவது போல் இன்றி, வியப்பளிக்கும் வகையில் உருளையான தேனடைகள் உருவாக்கப்படுவதை நாம் காணலாம்.
தேன்கூட்டில் நிலவும் வெப்பநிலை மனித உடலின் வெப்பநிலையை ஒத்தது.
15 கோடி ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பு (Cretaceous) காலத்தில், ஏறக்குறைய பூக்கும் தாவரங்கள் தோன்றிய அதே காலத்தில், தேனீக்கள் உரு வாயின.  2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை அபிஸ் என்னும் தேனீக் குடும்பம் உருவாகவில்லை. உண்மையில் அவை ஒரு வகையான தாவர உண்ணிக் குளவிகளாகவே இருந்தன. தங்களின் தலையில் உள்ள உணர்வுக் கொம்பின் மூலம் தேனீக்கள் மணங்களை நுகர்கின்றன. ராணி-திரவம் என்னும் ஒரு ரசாயனப் பொருளை ராணித் தேனீக்கள் பீச்சுகின்றன. இது பணிசெய்யும் தேனீக்களுக்கு கருப்பை வளராமல் செய்துவிடுகின்றது.
ஒரு டீ ஸ்பூன் அளவு தேனை எடுக்க 12 தேனீக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும். ஒரு தடவை தேன் எடுக்க தேனீக்கள் 12 கி.மீ. (7.5 மைல்) வரை பறந்து சென்று வரவேண்டும். இது போல் ஒரு நாளில் பலமுறை அவை  செல்லும். அரை கிலோவுக்கும் குறைவான ஒரு பவுண்ட் தேனை எடுக்க ஒரு தேனீ 75,000 கி.மீ. (46,600 கி.மீ.) தூரம் பறந்து சென்று வரவேண்டும். இது உலகை ஏறக்குறைய இரண்டு முறை சுற்றி வருவதற்கு  ஒப்பாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’    பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...