Sunday, October 30, 2011

இது ஒரு மோ(ச)டி அரசு!


செப்டம்பர் 17 முதல் மூன்று நாள்கள் உண்ணா விரதம் இருந்தார் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி.
இதற்கு 60 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளதாம். இந்த செலவு கட்சி நிதியிலிருந்தா? சொந்தப் பணத்தில் இருந்தா?
அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. எல்லாம் அரசுப் பணத்தில் இருந்துதான்.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரஜாபதி, ஷா என்னும் இருவர் விண்ணப்பம் போட்டனர்.
பதில் அளித்ததா நேர்மை என்னும் சுத்த நெய்யில் பொரிக்கப்பட்ட மோ(ச)டி அரசு?
அதுதான் இல்லை. உண்ணாவிரதத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதால் இதுபற்றித் தகவல் தெரிவிக்க முடியாதாம்.
எப்படி இருக்கிறது?
பல துறைகள் ஈடுபட்டாலும் எல்லாம் அரசு செலவுதானே?
அதனைத் தெரிவிக்கவேண்டியதுதானே? அதில் என்ன தயக்கம்?
இதில் ஒரு உண்மை - கோணிப் பைக்குள்ளி ருக்கும் பூனை வெளியில் வந்துவிட்டது. குஜராத் முதலமைச்சர் மோடி இருந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பின்னணியில் இருந்தனர் - அரசு துறைகளின் நிதி, தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
பா.ஜ.க.வுக்குள் நடக்கும் உள் கட்சிப் போராட் டத்துக்கு - அரசின் நிதி பயன்படுத்தப்படலாமா? அதிகார மீறல் மட்டுமல்ல; அதிகாரத்தைப் பயன் படுத்தி அரசு நிதி அத்துமீறி செலவழிக்கப் பட்டுள்ளது - இது ஒரு வகையில் ஊழலைவிட மோசமான செயலாகும்.
மாநிலங்களில் நடக்கும் ஊழல்பற்றி விசாரணை நடத்தும் லோக் அயுக்தா என்ற அமைப்பு குஜராத் மாநிலத்தில் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளதற்கு என்ன பொருள்?
அதற்கான நீதிபதியின் பதவி பல ஆண்டுகள் காலியாக வைக்கப்பட்டதன் பின்னணி என்ன? குஜராத் பி.ஜே.பி. அரசு ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மை கொஞ்சி விளையாடும் ஒன்றாக இருப்பது உண்மையானால், லோக் அயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமித்திருக்க வேண்டுமே. மடியில் கனமிருப்பதால் தானே இந்தப் பயத்திற்குக் காரணம்?
நீதிபதி பதவி காலியாக இருந்த நிலையில் ஆளுநர் நீதிபதி ஒருவரை நியமனம் செய்தவுடன் பூமிக்கும், வானுக்கும் தாவிக் குதித்தது ஏன்? திடீரென்று மாநில சுயாட்சி உணர்வு பீறிட்டுக் கிளம்பிவிட்டதோ!
மாநிலங்களே கூடாது ஒரே ஆட்சி - ஒற்றையாட்சி என்பதுதானே பி.ஜே.பி.யின் கொள்கை? தங்களுக்கு வசதி குறைவு என்றால் மாநில சுயாட்சி முழக்கமோ!
அகில இந்திய நுழைவுத் தேர்வு உள்பட மாநில ஆட்சியின் கொள்கை முடிவில் மத்திய அரசு தலையிடுகிறதே - அப்பொழுதெல்லாம் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலிருந்து எதிர்ப்புக் குரல் வருவதில்லையே ஏன்?
தகவல் அறியும் உரிமையை குடிமக்களுக்கு வழங்குவதில்கூட குஜராத் அரசுக்கு விருப்பம் இல்லை என்பது அம்பலமாகிவிட்டதே!
இவர்கள்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத் தங்கள் செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்த போது கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்; எதிலும் இரட்டை வேடம் என்பது பி.ஜே.பி.,க்குக் கைவந்த கலையாகும்.
கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநில முதலமைச்சர் மோடி அவசர அவசரமாக உயர்மட்ட அதிகாரிகளைக் கூட்டி பிறப்பித்த கட்டளை பிரச்சினையாக வெடித்துள்ளது. முசுலிம் மக்களுக்கு எதிரான இந்துக்களின் கோபம் - செயல்பாடுகளில் தலையிடவேண்டாம் என்று முதலமைச்சர் மோடி கட்டளையிட்டதை அக்கூட் டத்தில் கலந்துகொண்ட காவல்துறை உயரதிகாரி சஞ்சய் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது - மோடி அரசின் பச்சைப் பாசிச நடவடிக்கை யல்லவா!
மோசமான - மக்கள் விரோத அரசு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் அது குஜராத்தில் நடைபெற்றுவரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் என்பதில் அய்யம் இல்லை!
ஆனால், நம் நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் தலைகீழாகத் திரிப்பதை மக்கள் அறியவேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...