Sunday, October 30, 2011

சீன யுன்-யாங் என்னும் நம்பிக்கை ஒளி!


அண்மையில் சீனா சென்றிருந்த போது, நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகச் செயல்பாடுகளை வியந்த டாக்டர் ஹோ ஜியாங் என்ற நண்பர், துணை வேந்தர் அவர்களை யும், எங்களையும் அவரது நோக்கியா மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஆய்வு செய்யும் அவரது  (கூட்டுப் பங்காளிகளும் உண்டு) ஆராய்ச்சி நிறுவனமான Usability and Designing Laboratory  என்ற பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு நடைபெறும் ஆய்வினை - பரிசோதனைகள் பற்றிய - அவை எப்படி 21 ஆம் நூற் றாண்டின் புத்தாக்கங்கள் என்பது பற்றி விளக்கினார். காலை ஓட்டலுக்கு வந்து அவரது காரில் அழைத்துச் சென்று, இரவு வரை பல்வேறு இடங்கள் சீன பன்னாட்டு வானொலி நிலையம் உட்பட உடன் இருந்து, இரவு ஓட்டலில் விட்டுச் செல்லும் வரை - கொட்டும் மழையிலும் எங்களோடு இருந்தார்.
31 வயதான அவர், ஜெர்மன் பல்கலைக் கழகத்தில், டாக்டரேட் (Ph.D.) வாங்கி வந்து சொந்த நிறுவனம் தொடங்கி நடத்து கிறார். சீனர்கள் எப்போதுமே தனியாக தொழில் நடத்தவே விரும்புவர். அரசு வேலை தேடி அலைவது கடைசி கட்ட முன்னுரிமை தான்!
அவர் எங்களுக்கு அவரது அலுவல கத்தில் வரவேற்கும் முறையில் இரண்டு அருமையான நூல்களை நினைவுப் பரிசுகளாக அளித்தார். எங்களுக்குப் புத்தகம் மிகவும் பிடிக்கும் என்பதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டார் போலும். இரண்டு அருமையான நூல்கள் (ஆங்கிலத்தில்தான்.)
1.  1.  Discover China - 100 interesting topics to feel China  சீனாவைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டிய 100 சுவை யான கட்டுரைகள் என்ற தலைப்புள்ள ஒரு புத்தகம்.
2. மற்றொன்று, சீனாவின் மிகப் பெரிய முற்போக்கு எழுத்தாளர், கவிஞர், கல்வி வல்லுநர், சிறந்த மொழியாக்க வல்லுநர், வாழ்வியல் பற்றி சுவையாக எழுதும் முதுபெரும் சிந்தனையாளர் லின் யுடாங் (Lin Yutang) எழுதிய Wisdom of China சீனத்தின் அறிவுச் செறிவு - ஓர் தொகுப்பு என்ற நூலையும் தந்தார்.
பசித்தவனுக்கு சுவையான உணவைப் பரிமாறியது போல இருந்தது எங்களுக்கு. நான் அங்கேயே பிரித்துப் படிக்கத் துவங்கினேன்.
அன்றிரவே ஓட்டலிலும் காலை விமானப் பயணத்திலும் 100 கட்டுரைகளில் பெரிதும் படித்துத் தகவல்களை அறிந்து கொண்டேன்.
தத்துவங்களில் சீனப் பெருஞ் சுவர் போல, சீனா ஒரு பழஞ் செல்வங்களை, கருத்தாக்கங்களைத் தன்னகத்தே வரலாறாக ஆக்கிக் கொண்ட ஒரு பெரும் நாடு - மக்கள் தொகையில் 170 கோடி உள்ள நாடு (இப்போது ஒரு குழந்தை மட்டுமே வாழ்விணையர்கள் வரி இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.‘One child Policy’  என்பது அமுலில் உள்ளது - சில குடும்பங்கள் சில நிபந்தனைகளுக்கு உட் பட்டு 2 ஆவது குழந் தையைப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் வசதி யும் செய்யப்பட்டுள்ளது.)
அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளிலோ - மக்கள் சீனக் குடிஅரசு செய்துள்ள மகத்தான புரட்சியை ஒரே சொல்லில் வர்ணிக்க வேண்டுமா னால் பிரம்மாண்டம் என்றே சொல்லலாம்! எல்லாம் Mega Project  தான்! (14 வரிசை ஒரு சாலையில் என்றால் வியப்பாக உள்ளதல்லவா?) தத்துவத்தில், உறவு முறைகளில் கூட சீனர்கள் இந்த பூவுலகில் நிலவும் வாழ்க்கை, இயற்கையை ஒட்டியே அமைந் துள்ளது என்பதை விளக்கும் வகையில், யுன்-யாங் “Yun - Yang  என்று இணைந்த இரு சொற்களில் அடக்கிவிட் டனர்!
இந்த யுன்-யாங் தத்துவம் மிகவும் பிரபலமானதாகும்! இச்சொற்களின் மூலப் பொருள் என்னவென்றால் மலையின் சாய்வு நிறைந்த பகுதி யுன். அதில் வெளிச்சம் அதிகம் இராது. - நிழல் - இருட்டு இருக்கும் - யாங் என்றால் சூரிய வெளிச்சம் படும் பகுதி - சீனர்களின் வியாக்கியானத்தில் - அல்லது கருத்தில் - யுன் என்பது மலையின் வடக்கு, நீரின் தெற்குப் பகுதி - யான் என்பது  அதற்கு நேர் எதிராக மலையின் தெற்குப் பகுதி, நீரின் வடக்குப் பகுதி - பல புராதன சீன நகரங்களின் பெயரே கூட இந்த அடிப்படையில்தான் அமைந்துள்ளது. லோயுவான் சிட்டி என்பது ஆறு  யுவாய் ஆறு மற்றொரு பகுதி.
இயற்கையை ஒட்டி, சூழ்நிலைகள் அமையும்போது, இந்த இரண்டும் இணைந்து வரும் என்பது சீன தத்துவப் பேருண்மையாம்.
எடுத்துக்காட்டாக, வானம் - பூமி, பகல்-இரவு, நீரும் - நெருப்பும், ஆக்கமும் - எதிர்மறையும், ஆணும் - பெண்ணும் (இப்படி) இன்பம் -துன்பம் உட்பட ஒரே வாழ்க்கையின் இரண்டு இணை கோடுகள் என்ற விளக்கம் தரும்.
பொதுவாக யான் என்பது சக்தி (energy) பொருள்களைக் குறிக்கும்! யுன் என்பது குறைவான அளவுக்கு கீழே !
பிரதானமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இருட்டில் உள்ளவர்கள், துன்பத்தை அனுபவிப்பவர் கள் துவண்டுவிட வேண்டாம். நம்பிக்கை இழந்து மனம் உடைந்துவிடவேண்டாம். வெளிச்சம் - விடியல் - தொடரும். அது இயற்கையின் தத்துவம். இன்பம் வந்து கதவு திறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் என்பதே!
இது வாழ்வில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் அல்லவா? எந்த துன்பம், தொல்லை, துயரம் தொடர்ந்திடினும் மனந் தளராமல், தடைக் கற்களைத் தாண்டும் தடந்தோள் வீரர்களாகவும் , வீராங்கனைகளாகவுமே வாழ்வோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...