Monday, October 31, 2011

கண்ணாடி சாதாரணமாக இருக்கும் நிலை எது ?


தெரிந்துகொள்வோம்
இன்று ஒரு புதிய தகவல்:

கண்ணாடி சாதாரணமாக இருக்கும் நிலை எது ?
கண்ணாடியின் சாதாரண நிலையில் உள்ள திடப் பொருளாகும்.
கண்ணாடி குளிர்விக்கப்பட்ட, ஆனால்  படிகமாகாத ஒரு திரவம் என்பதையும், அது அற்புதமான முறையில் மிகமிக நிதானமாக வழியும் என்பதையும்  நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உண்மையல்ல. கண்ணாடி என்பது ஒரு திடப்பொருள்தான்.
பழைய தேவாலயங்களின் ஜன்னல் களில் இருக்கும் கண்ணாடி சட்டத்தின் அடிப்பகுதி மற்ற பகுதிகளை விட கனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, கண்ணாடி ஒரு திரவம் என்ற கொள்கையை சிலர் ஆதரிப்பர். இதன் காரணம் காலப்போக்கில் கண்ணாடி கீழே வழிந்துவிடுவது அல்ல.  அனைத்துப் பக்கங்களிலும் ஒரே சம அளவில் உள்ள கண்ணாடிப் பலகைகளை செய்ய மத்திய கால கண்ணாடி தயாரிப்பாளர்களால் முடியாமல் போயிருந்திருக்கலாம்.
உலோகங்களின் மூலக்கூறுகளைப் போல், கண்ணாடியின் மூலக்கூறுகள்  ஒழுங்கான வடிவில் இருப்பவை அல்ல என்பதை கவனித்த ஜெர்மன் இயற்பியலாளர் கஸ்தவ் தம்மான்(1861-1938) கண்ணாடியை ஆராய்ந்து அதன் திடமாகும் தன்மையை வெளிப்படுத்தியதை அடுத்து கண்ணாடி ஒரு திடப்பொருளா திரவப் பொருளா என்ற குழப்பம் ஏற்பட்டது. அவர் கண்ணாடியை உறைந்த மிகச்சிறந்த திரவப் பொருளுக்கு ஒப்பிட்டுக் கூறினார். கண்ணாடி திரவத்தைப் போல் இருக்கிறது என்று கூறுவதால் அது திரவப் பொருள் ஆகிவிடாது.
இந்நாட்களில், திடப்பொருள்கள் படிகப் பொருள்கள் அல்லது குறிப்பிட்ட வடிவமற்ற பொருள்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளன. கண்ணாடி குறிப்பிட்ட வடிவமற்ற ஒரு திடப்பொருளாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...